பக்கங்கள்

Sunday, June 01, 2014

பழித்தும் இழித்தும் வாழும் ஆறறிவு பிராணிகள் ....Image
படம் (பூச்சரம்) ஆறறிவு பிராணிகள்

கொட்டடி கொலை
ஆறறிவு பிராணி

சிறுமிகள் கற்பழித்து கொலை
நகர முடியாத
புல்லும் மரமும்
ஓரறிவு ஆகின.

நகரக்கூடிய
சிப்பியும் சங்கும்
ஈரறிவாகின..

பறக்க முடியாத
கறையானும் எறும்பும்
மூவறிவாகின...

பறப்பதால்
தட்டானும் வண்டும்
நாலறிவாகின...

கண்டும் கேட்டும்
உண்டும் வாழும்
நாலுகால்களெல்லாம்
ஐந்தறிவாகின.....

 சக பிராணிகளை
பழித்தும் இழித்தும்
ஏமாற்றியும் படை
கொண்டு அடக்கியும்
 தூக்கில் ஏற்றி
கொன்றும் வாழும்
ரெண்டு கால் பிராணிகள்
ஆறறிவாகின......

2 comments :

  1. ஆறறிவின் சிறப்பு புல்லரிக்க வைக்கிறது !
    த ம 1

    ReplyDelete
  2. தங்களின் கருத்துரைக்கு நன்றி!ஜீ!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com