புதன் 18 2014

அய்யா.. ...வாஞ்சி நாதனைத் தெரியாதைய்யா, தோழர் வாஞ்சி நாதனைத்தான் தெரியும்மைய்யா!!!!

வருனாசிரமவீரன், சுதந்திர போராட்ட வீரானான கதை என்ற தலைப்பில் முக நூலில் நான் கண்டதையும் படித்ததையும் ஒரு பதிவாக பகிர்ந்தேன்.

அதைப்படித்த வீர வாஞ்சி நாதனின் வழிவந்த புரட்சியாளர் ஒருவர்.  வாஞ்சிநாதனைப் பற்றி ஒனக்கு தெரியுமா என்று  ஒருமையில் கேட்டார்

அவருக்காக. இந்தப் பதிவு....

அய்யா... தெரியாதய்யா............. நீங்க இப்படி கேட்பீங்கன்னு.... வருனாசிரம வீரன் வாஞ்சிநாதனை நிச்சயமாக தெரியாதய்யா..............

 மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழ்நாடு-ன்  மதுரைக்கிளை இணைச் செயலாரும்  தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளையின் வழுக்குரைஞராக இருக்கும் தோழர் வாஞ்சி நாதனைத்தானய்யா எனக்கு தெரியும்மய்யா..............

அய்யா... தெரியாதுய்யா.... ஆஷ் துரையை சுட்ட வாஞ்சி நாதனை..

தனது அரசியல் செல்வாக்கால்,பணபலத்தால் கடந்த  20 ஆண்டு காலமாக தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமரி மாவட்ட முழுவதையும் தனது கட்டப்பாட்டில் வைத்துக் கொண்டு தாண்டவமாடிய தாது மணல் கொள்ளையனின் ஆட்டத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்த  தோழர் வாஞ்சி நாதனைத்தானய்யா தெரியும் என்றபோது.............

அந்த வர்னாசிரமத்தின் வீர புருட்சியாளர்  இந்தா வர்ரேன்னு சொல்லாம போயிட்டாரு..........ங்கய்யா.......... திரும்பி வந்தா... அவருக்காக....


தோழர் வாஞ்சிநாதனை மேலும் தெரிந்து கொள்ள..




http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90555
மண்ணின் மைந்தன்!
இயற்கை வளங்களை மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதை எதிர்த்து இடைவிடாமல் போராடும் வாஞ்சி நாதன், 'மனித உரிமைப் பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பின் மூலம், கடந்த ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு எதிராகப் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்த வழக்கறிஞர். தென்தமிழகக் கடலோரப் பகுதியில் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளைக்கு எதி ராகச் செயல்படும் இவரது தலைமையிலான உண்மை அறியும் குழு, தாது மணல் ஆலைகளுக்குள் புகுந்து, அதன் செயல்பாடுகளை முதன்முதலாக உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இயற்கை அன்னை மெச்சும் மண்ணின் மைந்தன்... இந்த வாஞ்சிநாதன்!
 — Vanchi Nathan உடன்



5 கருத்துகள்:

  1. ரஜினி பக்தர்களைவிட. வர்னாசிரம பக்தர்கள் அவ்வளவாக மோசமாக திட்டவில்லை.......... ஒப்பதலுக்கு பின்னர்தான் கருத்துரை வெளியிடப்படும் என்ற ரிமோட் இருப்பதால்தால் ...............

    பதிலளிநீக்கு
  2. அருமை.
    இந்த காலத்து சுதந்திர போராட்ட வீரர்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஏலியன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  4. ஜீனியர் விகடன், கழுகு பதில்களில் " சித்தர்கள் ஈனும் இருக்கிறார்களா ? " என்ற கேள்விக்கு, " இருக்கிறார்கள் ! ஆனால் சித்துவேலை செய்வதில்லை... தங்களால் இயன்ற அளவுக்கு இந்த சமூகத்துக்காக போராடிக்கொண்டு விளம்பர வெளிச்சம் படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் " என பதிலளிக்கப்பட்டிருந்தது !

    தோழர் வாஞ்சிநாதனை பற்றி படிக்கும்போது இதுதான் என் நினைவுக்கு வந்தது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ( எனது புதிய கதை : முற்பகல் செய்யின்...
    http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு கருத்தினை பதியுங்கள்.நன்றி

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....