செவ்வாய் 17 2014

ஒரு வருணாசிரம வீரன் சுதந்திர போராட்ட வீரனான கதை.

முக நூலில் .......கண்டதும் படித்ததும் 


ViduthalaiEpaper -உம், Prince Ennares Periyar -உம் யுவான் சுவாங்-இன் புகைப்படம்-இனைப் பகிர்ந்துள்ளனர்.
யுவான் சுவாங் என்பவர் Nazar Frnd மற்றும் 5 மற்றவை ஆகியோருடன்
ஆஷ் துரை எனும் கொடுங்கோலனை வீரவாஞ்சி சுட்டு சாய்த்தான்,இது வரலாற்றுப் பதிவு.ஆனால் மறைக்கப்பட்ட வரலாறு என்று இணையதளம் முழுவதும் வேறு மாதிரியாக செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன,அயோத்திதாச பண்டிதரும் அவ்வாறே பதிவு செய்துள்ளாராம்.
குறிப்பிட்ட சாதியினரும்,கடவுள் சிலைகளும் மட்டுமே குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற நிலையை மாற்றி,இயற்கையை அனுபவிப்பதில் என்ன பாகுபாடு என்று கேட்டு எல்லோரையும் அருவியில் குளிக்க அனுமதிக்க உத்தரவிட்டாராம்.
தன்னுடைய அலுவலக சிப்பந்திகள் வர்ண அடிப்படையில் பிரிந்து அமர்ந்து உணவு உண்பதை மறுத்து ஒன்றாக அமர்ந்து உண்ணுமாறு உத்தரவிட்டார்.
அலுவலகத்தில் எல்லோருக்கும் பொதுவாக குடிநீர் பாத்திரம் ஏற்பாடு செய்தார்.
பிரசவ வலியால் துடித்த அருந்ததியினப் பெண்ணைக் காப்பாற்ற பலத்த எதிர்ப்பை மீறி அக்ரகாரம் வழியே அப்பெண்ணை ஆஷ்துரையும் அவர் மனைவியும் கொண்டு சென்றனர்,குதிரை வண்டியை மறித்த இளைஞர்களை சாட்டையால் விளாசினார்,அடிவாங்கி ஓடிய இளைஞர்களுள் ஒருவர் வாஞ்சிநாதன் என்கிறது ஒரு செய்தி.
வாஞ்சியின் இறுதிக் கடிதத்தில் இருக்கும் பஞ்சமன்,கோமாமிசம் உண்ணும் மிலேச்சன் போன்ற வார்த்தைகளும் வாஞ்சியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலே கூறிய செய்திகள் உண்மையாக இருப்பின் ஆஷ்துரையை சிறப்பிக்க சமத்துவநாயகன் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.
இன்று ஆஷ்துரையின் நினைவு நாள்,சமத்துவ நாயகனை போற்றி வணங்குகிறேன். Prince Ennares Periyar திராவிடப் புரட்சி

6 கருத்துகள்:

  1. இனையம் இல்லையெனில்
    இந்த செய்தி பரவலாக அறியமலே போயிருக்க கூடும்.
    "எப்பொருள் யார் யார் வாய் கெட்கினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் கான்பது அறிவு"

    முன்பு செய்தி தருமம் என்று
    இந்த செய்தி இருட்டடிக்கப்படு
    இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. முன்பு இருந்த கொஞ்ச நஞ்ச ஒழுங்கும் நாசமா போச்சு சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  3. புதிய செய்திதான்.
    இருபக்க நியாங்களையும் பார்க்காமல்,
    நடத்தப்படுகின்ற பல என்கவுண்டர்களில் அநேகமாய் செத்ததில், புதைக்கப்பட்டதில் உண்மையும் ஒன்றாக இருக்கக் கூடும் என ஏற்கனவே நினைத்திருக்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமை. இந்த மாதிரி மறைக்கப்பட்ட உண்மைகள் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ???...

    பதிலளிநீக்கு
  5. புதைக்கப்பட்டவைகளை தோண்டும் போதுதான் உண்மைகள் தெரியவரும் ஊமைக்கனவுகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. தோண்ட தோண்ட இன்னும் வரும் என்று நிணைக்கிறேன் ஏலைன் நண்பரே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...