வெள்ளி 27 2014

குஜராத்திக்காரருக்கு முன் தமிழ் பயின்ற முன்னோடி குஜராத்திக்காரர்.

மகாத்மா-காந்தி

56 இஞ்ச் மார்பு படைத்த குஜராத்தீ  வீரர்.. இந்தியாவின் பிரதமராக ஆவதற்கு முன் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலமாக வோட்டு பிச்சை கேட்டு போகும்போது. “வணக்கம்” “நன்றி” என்ற சில வார்த்தைகளை அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்றவாறு செண்டிமெண்ட்  பேசி, பிச்சையிடும் மகா சனங்களின் நெஞ்சை “டச்” பண்ணிவிடுவார்.

இதே மாதிரி, தமிழ் நாட்டுக்கு வந்தபோது, வணக்கம், நன்றி என்று தமிழிலில் கூறி தமிழக மக்களின் நெஞ்சங்களை “டச்” பண்ணினார்.

 இந்த அய்யாவுக்கு முன், அம்மா ஆனவர், தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை இவர்கள்  “டச்” பண்ணிவிடுவார்கள் என்ற   தன் அனுபவத்தால், தமிழக மக்களின் நெஞ்சங்களை வகுந்தெடுத்து
நெஞ்சே இல்லாமல் செய்து விட்டதால்.

அய்யாவின் நன்றி! வணக்கம். என்ற சென்டிமென்ட்- டச்- ஆக வில்லை என்று தேர்தல் முடிந்த பிறகே, அய்யாவுக்கு தெரிய வந்தது.

 பிரதமர் அய்யாவின் இந்த சென்டிமென்ட் உத்தியை, இவருக்கு முன்னே .இவரது மாநிலத்துக்காரர் ஒருவர். இந்த செண்டிமென்டை பயன் படுத்தியுள்ளார்.


அந்த குஜராத்திகாரரும். வயது போன  காலமான 78வது வயதில் தமிழ் மொழியை கற்க விறும்பினார். திருக்குறளின் மேன்மையை அறிவதற்க்காக தமிழ் மொழியை கற்க ஆசை இருப்பதாக விளம்பரபடுத்திக்கொண்டார்.

பிரதமர் அய்யா மாதிரி. வணக்கம். நன்றி என்று வாய்வழி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் “ திக்கற்றவர்களுக்கு தெய்வமே துனை” என்று மட்டும் தமிழில் எழுதவும் கற்றுக்கொண்டார். குஜராத்திக்கார வீரர்க்கு முன்னோடியான குஜராத்திக்காரர்.





2 கருத்துகள்:

  1. எப்படியெல்லாம் ஓட்டை பொறுக்கிறாங்கப்பா!
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. தொழிலே அதுதான் என்றபோது தொத்துலு கூட கில்லாடியாகத்தானே வளரும்.ஜீ

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...