சனி 21 2014

இந்தியாவை தூக்கி நிறுத்தட்டும் இந்தீ......

படம் புதிய தலைமுறை











தப்புத் தப்பாய் என் மொழிகள்
என் தாய் மொழியில் தேற
முடியா என்னிடம் இடை
சொறுகலாய் ஆங்கிலமும்
இந்தீ யும்...................


வாதியும் தமிழர்
பிரதிவாதியும் தமிழர்
வழக்காடுபவரும் தமிழர்
வாதங்களை கேட்பவரும்
தமிழர்.........


இதில் வழக்கும் வழக்கு மொழியும்
ஆங்கிலமாக கோலோச்சும்போது.
ஆங்கிலத்துக்கு துனையாக இந்தீயும்
அலுவல்.மொழியாக இருந்து---

ஏழு கடல் தூரத்துக்கும்
ஏழுமலை உயரத்துக்கும்-
இந்தீயாவை தூக்கி
நிறுத்தட்டும் ...........

இந்தப் பெருமையில்
வந்தாரை வாழ வைக்கும்
தமிழர்கள் முழ்கி திளைத்து
ஆங்கிலத்தையும் இந்தியையும்
ஏற்று தமிழ் மொழியை தாரை
வார்த்து அழிக்கட்டும்.

ஒழிக! தமிழ்!

வாழ்க! ஆங்கிலம்!

வளர்க! இந்தீ!!




3 கருத்துகள்:

  1. //தமிழர்கள் தமிழ் மொழியைத் தாரை வார்த்து அழிக்கட்டும்//...அழியட்டும்.

    தமிழை அழியவிட்டு வேடிக்கை பார்க்கும் தமிழனின் அழிவு நிச்சயம். கொஞ்சம் நாளாகலாம்.

    பதிலளிநீக்கு
  2. வேறு என்ன செய்வது நண்பரே! பூவோடு காயும் நாறுவைப்போல மானமுள்ள தமிழனும் அழியட்டும்.

    பதிலளிநீக்கு
  3. இதில் போராடும் தமிழனும் தனியாக கத்தி கத்தியே சாகட்டும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...