ஞாயிறு 03 2014

ஒரு கும்மாளமும் அந்த கும்மாளத்தில் ஒரு கூத்தும்!!!

படம்-www.eegarai.net

 தமிழக சட்டப்பேரவை கும்மாளத்தின்போது “ மதுக்கடைகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருவதாகவும், அதனால் மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று ஒப்புக்கு ஒருவர் கேட்டார்.

அதற்கு மதுவிலக்குக்கு அத்தார்ட்டி ஆனவர் இப்படி பதில் அளித்தார்.

அண்டை நாடுகளான புதுச்சேரி, கேரளம்,கர்ர்நாடகம்,ஆந்தீரா போன்ற நாடுகளில்  மதுவிலக்கு அமுல் படுத்தவில்லை.

அந்தந்த நாடுகளில் மது விலக்கை அமுல் படுத்தினால் தமிழ்நாட்டிலும் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த தயராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆமமா...சாமீகளா...!!!............ அத்தார்ட்டிகாரர் சொல்வதும் சரிதான். நாள் ஒன்றுக்கு குறைந்தளவில் சம்பாதிக்கும்  பணத்தைக் கொண்டு குடிமகன்கள். பஸ ஏறி,ரயில் பிடித்து, அண்டை நாட்டுக்கு சென்று குடித்து விட்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு நஷ்டம் ஏற்ப்படுமல்லவா???

காசுக்கு காசும் போயி, கிக்கே இல்லாத சரக்கை குடித்து விட்டு வந்தால் அதை தமிழகம் எப்படி பொறுத்துக் கொள்ளும்.  அந்த குடி மகன்களின் கோபத்தைத்தான் அடக்க முடியுமா???   சொல்லுங்கோ..........

4 கருத்துகள்:

  1. மது விலக்கு நமக்கு முக்கியம் ,வசூல் இலக்கு அவர்களுக்கு முக்கியம் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அண்டை நாடுகளான புதுச்சேரி கேரளம் கர்ர்நாடகம் ஆந்தீரா போன்ற நாடுகளில்.....
    ஹி!ஹி!ஹி!
    அது சரி அது என்ன அப்படி ஒரு அளவுக்கு மீறிய கவர்ச்சி தமிழக குடிமக்களுக்கு மதுவின் மீது ஏற்பட்டது? உலகத்திலே மற்றவங்களை எல்லாம் விட மூத்த குடிமக்கள் தமிழக குடிமக்கள் என்பதினாலா?

    பதிலளிநீக்கு
  3. உலகத்திலே மற்றவங்களை எல்லாம் விட மூத்த குடிமக்கள் தமிழக குடிமக்கள் என்பதினாலா?

    நீங்கள் சொல்வதுதான் உண்மை வேகநரி...அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களுக்கு

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....