படம்- |
இந்தியாவுல ஏன்? அல்லாரும் ஏழையாக இருக்கிறார்கள் என்று கேட்டால் அறிவுள்ள அறிவியலார்கள் என்ன சொல்வார்கள். அவர்கள் எல்லாம் கடுமையாக உழைக்காததினால்தான் ஏழையாக இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்
அம்பாணி,. டாட்டா, பிர்ர்லா, சிந்தாலலு, மீட்டேல்லு இவுக எல்லாம் கடுமையாக உழைத்ததினால்தான் இந்தியாவில் கோடீஸ்ஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்று நீண்ட சரடுகளை அவிழ்த்து விடுவார்கள்.
இப்படித்தான் அந்தா மொக்கா.. இந்தா மொக்கான்னு படித்த அறிவாளிக எல்லாம் தாங்கள் பேசுகிற மேடையிலே முழுங்குகிறார்கள். கடுமையாக உழைத்தால் எல்லாரும் எல்லாத்திலேயும் வெற்றி அடையலாம் என்று ஒரு சிலர் கோல்மால் செய்து உயர்ந்ததை சுட்டி காட்டி பினாத்துவார்கள்.
உதாரணத்துக்கு ஒரு டீ வித்தவர் இந்திய பிரதமரா வந்திட்டாருப்பே என்று வாயும் பல்லும் கூசாமல் சொல்லுவார்கள். பல்லு குத்திக் கொண்டு இருந்த பில்லு கேட்சையும் இழுத்து வந்து காட்டுவார்கள்.
அவர்கள் சொன்ன மாதிரியே, எல்லாரும் கடுமையாக உழைத்தால், சுலபமாக கோடீஸ்ஸ்வரர்களாக ஆகலாம்... என்று ஒரு நண்பர் எனக்கு மட்டும் கோடீஸ்வரராக ஆகும் அந்த ரகசியத்தை சொன்னார்.
நான் கேட்ட ரகசியம் பலருக்கு போய் சேர வேண்டும் என்று என்னிடம் கேட்பவர்களுக்கு மட்டும் இந்த ரகசியம்.
ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆயிரம் அடி அளவுக்கு பள்ளம் தோண்ட வேண்டும்.
அதில் மேற்படியாளர்களை எல்லாம் புதைக்க வேண்டுமா? ......என்று முந்திரிக் கொட்டைத் தனமா..முந்திக் கொ்ண்டு கேள்விக் கேட்கக்கூடாது. சொல்வதை மட்டும் கவனமா கேட்க வேண்டும்.
என்ன சொன்னேன். ஆ...ங்..... ஆயிரம் அடிக்கு பள்ளம் தோண்ட வேண்டும் தோண்டியாச்சா.....சரி. அடுத்து , எடுத்து வைத்திருக்கும் கரித்துண்டை் அந்த ஆயிரம் அடி தோண்டிய பள்ளத்தில் போட்டு பாதுகாப்பாக மூட வேண்டும்.
மூடிய பிறகு, ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து. அந்த ஆயிரம் அடியை தோண்டி எடுத்தால் வைரம் கிடைக்கும். பிறகு என்ன .நீங்கள் கோடீஸ்ஸ்வரர்தான்.
குறிப்பு -- போங்கய்யா... வெண்ணைய்களா....“என் அப்பன் கால்த்துல கட்டிய கூரை வீட்டை மேய்வதற்க்கு இரவும் பகலுமாக கடுமையாக உழைத்தும் மாத்த முடியாமா? நாற்பது வருடம் கழித்துதான் கூரையை மாத்தி ஓடு போட்டு வீட்டையே சரி செய்தேன்”.. இதுக்கே, சுத்தியிருந்த பாசக்கார பயபிள்ளகளின் பாசப்போராட்டம் வேற..இதுல் கடுமையாக உழைத்தால் புண்ணாக்க ஆகலாமாம்.. சும்மாருங்க..இல்ல...வாயில நல்லாவே வந்துரும். (இத நான் சொல்லலப்பா என் மனசாட்சி சொல்லிச்சி)
நீங்க யதார்தத்ததை சொல்ல தெரிவு செய்த படம் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் சிகரம் பாரதி...நெடுநாளைக்குப்பின் தலை காட்டியிருக்கிறீர்கள்
பதிலளிநீக்குபத்து தடவை தோற்றுப்போயி பதினோறாவது தடவை ஜெயிப்பவன். அப்படித்தான் யதார்த்தபடமும்..வாழ்த்திய தங்களுக்கு நன்றி! திரு.வேகநரி..
பதிலளிநீக்குஒரு திமிங்கிலம் அந்த சைசுக்கு வளர எத்தனை ஆயிரம் மீன்களை தின்னுச்சோ.
பதிலளிநீக்குதின்ட மீன்களில் பலவகைள் கணக்கில் வராமாலே..அந்தத் சைசில் இருக்கிறது
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. ஜெயதேவ் தாஜ் அவர்களே!
சிறந்த கருத்துப் பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!!!
பதிலளிநீக்குநான்/நாம் ஆயிரம் ஆண்டுகள் முன்பு போட்ட கரி இன்று வைரமாகி விட்டது ,ஆனால் அதை எடுக்கும் உரிமை டாட்டா ,பிர்லாக்களுக்கு அரசு தாரை வார்த்து விட்டதே !
பதிலளிநீக்குத ம 2
இனி போட்டா... டாட்டா,பிர்லா வின் வாரிசுகளுக்குத்தான் போய் சேரும்.ஜீ
பதிலளிநீக்கு