செவ்வாய் 05 2014

திரைப்பட வீரர்கள் புழுதி பறக்க விட்ட தூசி வசனங்கள்..


முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் திரையுலகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசும் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன். (உடன்) நடிகர்கள் சூர்யா, சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் சீமான், நடிகர் விஜய், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், நடிகர்கள் விநய், மனோபாலா, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், நடிகர்கள் வையாபுரி, குண்டு கல்யாணம் உள்ளிட்டோர்.
படம்-www.dinamani.com

தமிழைப் பழித்தவனை ,தாய் தடுத்தாலும் விடேன் என்றுதான் கவிஞர் பாடினார். அந்தக் கவிஞரின் கவிதைக்கே திரைக்கதை வசனம் அமைத்து புழுதி பறக்க தூசி வசனம் பேசுபவர்கள்தான் திரைப்பட வீரர்கள். அதுவும் தமிழ்பட வீராதி வீரர்கள்.

இத்தனை நாட்களாக பதுங்கி இருந்து  தூங்கி குறட்டைவிட்டுக் கொண்டு இருந்த வீரர்களை ராஜ பட்சி எழுப்பிவிட்டது. அதனால்தான் பாய்ந்து வந்துவிட்டார்கள்.

இந்தத் தழிழ் திரைப்பட வீரர்களுக்கு,  சமஸ்கிருத்தை புகுத்தி  தமிழை,தமிழ் கல்வியை ஒழித்து  கட்டப்போவததோ தமிழ் ஒழிக்கப்படுகிறது என்பது பற்றியெல்லாம்  தெரியாது. ஆனால் இவர்கள் எல்லாம் தமிழ் திரைப்பட வீரர்கள்,

நீதி வெல்லும், என்று படமெடுப்பார்கள். மேடைகளிலோ பேசுவார்கள். ஆனால் நீதி வழங்கும் நீதி மன்றத்தையே , ஆட்டி படைத்து வாய்தா ராணி என்று பட்டம் வாங்கியவைரை தெரியாது. இலங்கை தமிழர் நலன்.தமிழக மீனவர் நலன் பற்றி பேரரசர் மோடி ஆட்சிக்கு வந்த அறுபது நாளில்  நாற்பதுக்கு மேல் கடிதம் எழுதி. கோரிக்கை வைத்தது மட்டுமே தெரியும். 

 அந்தக் கடிதத்தினால் ராஜபட்சியின் இழி செயலைக் கண்டு, தாயே என்று வாழ்த்தி வணங்கி வீழ்ந்து விடாமல் ராஜபட்சிக்கு எதிராக படை எடுக்குகிறார்கள்.  அறிவள்ள மடையனே கண்டு அதிசயக்கும் அளவுக்கு  திரை நடிப்புக்கும் நிஜ நடிப்புக்கும் வித்தியாசம் தெரியாதளவுக்கு நடிக்கிறார்கள்.


இவர்களின் சினிமா வழி வந்த தாய்க்கு ஆதரவாக , இலங்கையின்  சமஸ்தானத்தை ஆளும் ராஜபட்சிக்கு எதிராக..திரைப்பட வீரர்கள் படைகளில் புழுதி பறக்க விட்ட துாசி வசனங்களில் சில..

பாலூணர்வைத் தூண்டுகிற விதத்தில் இலங்கை அரசு வெளியிட்டு்ளள கருத்துக்கள் மன்னிக்க முடியாத வக்கிரச் செயலாகும்.

இது தாயை தவறாக பேசியது போல் இருக்கிறது. இது ஒட்டு மொத்த உலக தமிழரின் வருத்தம்.

இதயத்தில் ரத்தம் வழிகிறது. இதுக்கு மன்னிப்பு போதாது, தண்டனைதான் வேண்டும்.

இலங்கை துணை தூதரகம் இருக்கும் சாலைக்கு.தமிழ் ஈழச்சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்..

இந்தத் திரைப்பட வீரர்களின் அதாவது இந்த வீரர்களின் தாயாவனவர்.  தனது  நிரந்தர ஆட்சியில் 000விதியின் கீழ் தனது சபையில் திரைப்பட வீரர்களின் வசனங்களை  நிறைவேற்றுவாரா என்று பாருங்கள்.

10 கருத்துகள்:


  1. தங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    வழிப்போக்கன் உண்டு! வலிப்போக்கன் கண்டேன்!
    பழிபோகச் செய்க பதிவு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
    !

    பதிலளிநீக்கு

  3. வணக்கம்!

    வழிப்போக்கன் உண்டு! வலிப்போக்கன் கண்டேன்!
    பழிபோகச் செய்க பதிவு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
    !

    பதிலளிநீக்கு
  4. தங்களது கருரத்தரைக்கு நன்றி! கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ந்ன்றி! நன்றி!! திரு.கவிஞர்.கி. பாராதிதாசன் அவர்களே!...

    பதிலளிநீக்கு
  6. அம்மாவின் பார்வையை தங்க மீது திருப்புவதற்கான போராட்டம்.

    பதிலளிநீக்கு
  7. அம்மாவின் பார்வையை திரைப்பட வீரர்களின் திருப்புவதற்க்கான போராட்டம்

    பதிலளிநீக்கு
  8. சினிமாக்காரனுக்கு வசனம் பேச சொல்லியா தரனும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  9. சினிமா காரர்களுக்கு வசனம் பேசுவது,எழுதுவது. பிறப்பில் இருந்ததா, இடையில் வந்ததா ஜீ

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்