வியாழன் 07 2014

தண்ணீர்க்காக நடு ரோட்டில் போராட்டம் நடத்திய குடிமகன்!!!


படம்redhillsonline.blogspot.com


காக்கி சட்டையும்,கைலியும் அணிந்த ஒருவர். ரோட்டு வழியாக மொபைட்டில் வந்தார். வந்தவர் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை கண்டார். கண்டதும் தன் வாகனத்தை விட்டு இறங்கினார். வாகனத்தை நடுரோட்டில்  குறுக்காக நிறுத்திவிட்டு, வண்டியின் அருகிலேயே  நின்று எஸ.பி. அலுவலகத்தை உற்றும் முறைத்தும் பார்த்துக் கொண்டு நின்றார்.

நடு ரோட்டில் நின்று கொண்டு இருந்ததால் போக்குவரத்து சிக்கல் ஏற்ப்பட்டது. ரோட்டின் ஓரமாக உள்ள கடைகளில் நின்று கொண்டு இருந்தவர்கள் “ஏய்....ஓரத்துக்கு வாய்யா...” என்று சவுண்டு கொடுத்தனர். ரோட்டில் போய்க் கொண்டு இருந்த வாகன ஓட்டிகளும் திட்டி சவுண்டு கொடுத்தனர்.

அவர்களின் சவுணடைக் கேட்டதும் அவரும் சவுண்டு விடத் தொடங்கினார்.

“ஊருக்கே தண்ணீர் தரும் மாநகராட்சியின் ஊழியரான தன் வீட்டிற்கு தண்ணீர் இல்லை வேண்டும், வேண்டும்,தண்ணீர் வேண்டும் என்றார். பிறகுதான் தெரிந்தது. அவர் கோஷமிட்டு போராட்டம் நடத்துகிறார் என்று...

 அவரின் போராட்டம் குறித்து எஸ்.பி. அலுவலகத்துக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் பரவியது.

தகவல் பரவியதால்  வந்த புதூர் போலீசு, கோஷமிட்டு போராட்டம் நடத்தியவரை  மோப்பமிட்டு ஆராய்ந்தது.  அப்படிமோப்பமிட்டதால் கோஷமிட்டவர் டாஸ்மாக் குடிமகனாக இருப்பதை  தெரிந்து கொண்டது.

டாஸ்மாக் வாடிக்கையாளர் என்பதால் அவருக்கு அருகில் சென்று அறிவுரை கூறி நகரச் சொன்னது. அந்தக் குடி மகன் நகராமல் கோஷமிட்டவாரே இருந்தார்..

தன் கொள்கை கோட்பாட்டின் படி குடிமகனை  இலேசாக கவனிக்கத் தொடங்கியது போலீசு,. போலீசின் கவனிப்பை கண்டவுடன் போதை தெளிந்த குடிமகன் அவ்விடத்தைவிட்டு  பறந்தார்.

இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் வரை பரபரபரப்பாக  இருந்தது. 


இந்த செய்தியை தினகரன் பத்தரிக்கை சொல்லிச்சி.....அத நான் உங்களுக்கு சொல்லீச்சீ..

6 கருத்துகள்:

  1. குடிக்கார பய பேச்சை நல்லா சொல்லிச்சீ!சீச்சி !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நானும் நீங்க சொன்னதை படித்து பாத்துச்சிச்ச்சி

    பதிலளிநீக்கு

  3. Photoவுல இருக்கிற ஆளை எங்கேயோ பார்த்தது போல இருக்கே நண்பா ?

    பதிலளிநீக்கு
  4. எனக்கு பார்த்த ஞாபகம் இல்லை நண்பா.....உங்களுக்கு ஞாபகம் இருந்தா எனக்கு தெரியப்படுத்துங்க நண்பா..........

    பதிலளிநீக்கு

  5. தண்ணீருக்காக
    போராட்டம் நடத்திய
    குடிமகனா? 'குடி'மகனா?

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....