புதன் 06 2014

ஒரு மரம் மூன்று மரங்கொத்திகள்..

படம்-srbc2010.blogspot.com


பதவுரை-- 

வேறு ஒரு  மரங்கொத்திக்கு உரிமையான மரத்தை , உரிமையை இல்லாத மூன்று மரங் கொத்திகள்  அந்த மரத்தின் முழுச் சம்மதத்தோடு  பயன்படுத்தி வந்து கொண்டு இருந்தன்.

அப்போது அந்த மரத்தை பயன்படுத்திக் கொள்ள நான்காவதாக ஒரு மரங்கொத்தி வந்தது. அந்த மரத்துக்கு தொ்ல்லை கொடுத்து வந்தது. 

நான்காவதாக  சொந்தம் கொண்டாட வந்த மரங் கொத்தியானது மரத்துக்கு  உறவு முறையில் உடன் பிறப்பாக இருந்ததால், நான்காவது மரங்கொத்திக்கு மரம் சம்மதிக்கவில்லை .. 

நான்காவதாக வந்த மரங்கொத்தியும் மரத்தை விடாமல் தொல்லை கொடுத்து வந்தது..  

இதனால் கோபம் கொண்ட மரம் மூன்று மரங்கொத்திகளை அழைத்து. நான்காவதாக வந்த மரங்கொத்தியின் தொல்லையை சொல்லி.. போட்டுத்தள்ள உத்தரவிட்டது. 

மரத்தின் உத்தரவை தலைமேல் ஏற்ற  மூன்று மரங்கொத்திகளும் நான்காவதாக சொந்தம் கொண்டாட வந்த மரங்கொத்தியை  போட்டுத் தள்ளியது.

செத்த மரங்கொத்தியை பரிசோதனை செய்த போது மரங்கொத்தி கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. , 

கொண்டு போட்ட மூன்று மரங்கொத்திகளை கைது செய்து விசாரித்து போது... 

மூன்று மரங்கொத்திகளும் தங்கள்  வாக்குமூலத்தில் மரத்தின் உத்தரவால்தான் நாங்கள் அந்த  நான்காவதாக வந்த மரங்கொத்தியை கொண்டு போ்டடோம் என்று தெரிவித்தன.

இதனால் மூன்று மரங்கொத்தியுடன் மரமும் கைது செய்யப்பட்டடு சிறையில் அடைக்கப்பட்டது.


  தெளிவுரை-------

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி,சடைமுனியன்வலசையை சேர்ந்த நாகராஜன் மனைவி அனிதா. இவரிடம் சடைமுனியன்வலசையைச்சேர்ந்த பிரபாகரன், சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த கரணாகரன், இளங்கோ ஆகிய மூவரும் அனிதாவிடம் காதல் தொடர்பு வைத்திருந்தனர்.

இதற்கிடையே சடைமுனியன்வலசையை சேர்ந்த பால கிருஷ்ணன் நாலாவதாக அனிதாவிடம் காதல் தொடர்பு வைக்க முயன்றார்.

இவர் அனிதாவுக்கு  உடன்பிறப்பு முறை என்பதால் காதல் தொடர்பை தவிர்த்து வந்தார். இருந்தபோதும் பாலகிருஷ்ணன் அனிதாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்.

இந்தத் தொந்தரவை தாங்க முடியாத அனிதா, தன் காதலர்கள் மூன்று பேரிடம் பால கிருஷ்ணன் தொந்தரவைப் பற்றி கூறி, போட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டார்.

காதலியின் உத்தரவை கேட்ட மூன்று காதலர்களும் கோபத்தடன் கொதித்தெழுந்து பாலகிருஷ்ணனுக்கு தண்ணி வாங்கி கொடுத்து ஏமா்ற்றி பாலகிருஷ்ணனின் கதையை முடித்துவிட்டார்கள்.

 கதையை முடித்தவர்கள் பிடிபட்டபோது, தங்கள் வாக்குமூலத்தில் கதை முடிக்க உத்தரவிட்டது அனிதாதான் என்று சொல்ல...

கதை முடிக்க உத்தரவிட்டவரும்,கதையை முடித்தவர்களும் இப்பொழுது ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

6 கருத்துகள்:

  1. உத்தம பத்தினியின் கட்டளையை சிரம் மேல் ஏற்று உடன் செயல் பட்ட வீராதி வீரர்களுக்கு உரிய பரிசுதான் இது !

    பதிலளிநீக்கு

  2. மரங்கொத்தியின் பேச்சை கேட்டு மனிதனை குத்தி விட்டார்களே...
    விளக்கவுரை அருமை நண்பா....

    பதிலளிநீக்கு
  3. வீராதி வீரர்களுக்கு உரிய பரிசுதானா இது!!!

    பதிலளிநீக்கு
  4. ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன், மூன்று காதலன், சகோதர முறையானவரும் காதலனாக வர விரும்புகிறார் கலாச்சாரத்திலே முன்னேறினவாங்களோ!

    பதிலளிநீக்கு
  5. பார்த்தால்..மகாபாரதம் மாதிரி தெரியுது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்