பக்கங்கள்

Tuesday, September 02, 2014

கதை கேட்ட தயாரிப் பாளரும்.,கதை சொன்ன இயக்கு நாரும்


படம்--babyanandan.blogspot.com

அவர் நடிகராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர்.

இவர் தயாரிப்பாளராக இருந்து இயக்குநாராக வளர்ந்தவர்.

ஒரு நாள் அந்த இயக்குநர் இயக்கிய படம் ஒன்று, சினிமா வரலாற்றிலே..சும்மா கண்ணு மூக்கு தெரியாமல் ஓடி சாதனை படைத்து வசூலை அள்ளி குவித்தது.

இதைக் கண்ட அந்தத் தயாரிப்பாளர், இந்த இயக்குநரிடம், தனக்கும்,இப்படியான கண்ணு மூக்கு தெரியாமல் ஓடி சாதனை படைத்து,வசூலை அள்ளி குவிக்கும்படியான ஒரு படத்தை இயக்கி தருமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்க்காக. அந்த பெரிய்ய்ய தயாரிப்பாளரும், இந்த புகழ் பெற்ற்ற இயக்குநரும், பெருமை வாய்ந்த ஐந்து நட்சத்திர உணவக விடுதியில் கதை விவாதம் நடத்திக் கொண்டு இருந்தனர்.

பல காலமாக யோசித்து,அதே சிந்தனையாக இருந்து சித்திரமாக வடிவமைத்தாக ஒரு கதையைக் கூறினார் இயக்குநர்.

தயாரிப்பாளர்- இயக்குநர்- முன்னே அதி உயர்ந்த அயல்நாட்டு சாராய பாட்டில்கள் கலர் கலராக அறை வெளிச்சத்தில் மின்னின. அதன் அருகில் விலை உயர்ந்த நீண்ட சிகரெட் பாக்கெட்டுகளும் இருந்தன்.

சற்று தள்ளி.. இருவர்களின் உதவியாளர்களும். இவர்களின் கூப்பிடு குரல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர்.

தயாரிப்பாளர் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தபடி, இன்னொரு சிகரெட்டை இயக்குநரிடம் நீட்ட, பெற்றுக் கொண்ட இயக்குநர்.

வாய் வழியாக புகையை இழுத்து, வாய் வழியாக கொஞ்சுண்டு புகையை வெளியே விட்டு, அதிகமான புகையை மூக்கு வழியே விட்டார்.

அப்படி... மூக்கின் வழியே புகையை விட்டபடியே .கதையின் ஓன் லைன்னை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு நதி, அந்த நதியில் தண்ணீர் பயமுறுத்தும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வெள்ளமாக மாறி விட்டால்,  அது நகரத்தை அழித்துவிடும். அதை தடுக்க

 கதை நாயாகின் தந்தையும், அந்த நகரத்து தந்தையுமானவர், அந்த நகரத்து மக்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கிறார்.

எப்படி .....?

இப்படி!!

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கட்டுமஸ்தான உடல் கொண்டவர்கள் ஒருவர் வந்து நகரத்தை அழிக்க வரும் வெள்ளத்திலிருந்து நகரத்தை காப்பாற்ற, வெள்ளத்தை தடுக்கஃஃஃ நதிக்கரையில் மண்ணைக்கொட்டி  தடுக்க உதவ வேண்டும் என்று...........

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆட்கள் சென்று, நதியின் கரையை பலப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.

அப்போது. அந்த நகரத்தில் வடை சுற்று,கொண்டு இருந்த மூதாட்டிக்கு உறவுன்னு சொல்லிக் கொள்ள யாருமில்லாததால், வெள்ளத்தை தடுக்க, தன்வீட்டிலிருந்து செல்ல யாருமில்லையே என்று கண் கலங்குகிறாள் அந்த மூதாட்டி--- அபபோது அந்த மூதாட்டியின் கண்ணீரை துடைக்க வருகிறான் கதை நாயகன்.

கதையை நிறுத்தி இடைவெளி விடுகிறார் இயக்குநர், அந்த இடைவெளியல் உதவியாளர்களால் உயர் ரக சரக்கு பரிமாறப்படுகிறது. அதனுடே இறக்குமதியான புத்தம் புதியதான்  சிற்றுண்டி அயிட்டங்கள் காலியாக்கப்படுகின்றன.  எல்லாம் முடிந்த பின் புகையை விட்டபடியே அமைதியாக இருந்தனர்.

 கதை தொடர்கிறது.

கதையின் நாயகன் உதவுவதாக சொன்னதைக்  கேட்டதும், மூதாட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. நாயகனுக்க ஏராளமாக வடை சுற்று பரிமாறுகிறாள்.

வடை தின்ற நாயகன் மூதாட்டியிடமிருந்து விடை பெற்று நதிக்கரைக்கு வருகிறான். பரபரப்பாக வேலை நடப்பதைக் கண்டதும் தானும் வேலையில் முழுமமூச்சுடன் ஈடுபடுகிறான்.

 முழு வீச்சில்  வேலை நடந்து கொண்டு வரும்பொழுது.   நதியை பார்ப்பதற்க்காக  நகரத்து தந்தையின் மகள் தந்தைக்கு தெரியாமல் கதை நாயகி தன் தோழிகளுடன்  வருகிறாள். ஒவ்வொரு இடமாக பார்த்து வரும்போது ஒரு இடத்தில் கதை நாயகி எதிர்பாராவிதமாக தடுமாறி, பாய்ந்தோடும் நதியில் விழுந்து விடுகிறாள். வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் சத்தமிடுகிறார்கள். கட்டமஸ்தான உடல் உள்ளோர் யாரும் பாந்தோடும் நீரில் குதித்து கதையின் நாயகியை காப்பாற்ற தயங்கிக் கொண்டு இருக்கும் பொழுது கதை நாயகன் மட்டும் சிறிதும் தாமதிக்காமல் பாய்ந்து செல்லும் நீரில் குதித்து வேகமாக நீந்தி கதையின் நாயகியை எந்தச் சேதாரமும் இல்லாமல் காப்பாறுகிறான்.

இந்த நிகழ்வில் நாயகன் நாயகியை பார்க்க,நாயகி நாயகனின் தழுவலை நிணைக்க.இந்த நிணைவுகளுடனே மிதக்கிறார்கள்.

நாயகன் நாயகியை பிரிய மனமில்லாமல் நாயகியை நிணைத்து மெய்மறந்து   வேலை செய்யாமல் படுத்திருக்க...அப்போது  அங்கு வந்த நகரத்து தந்தை  நாயகன் வேலை செய்யாமல் படுத்திருப்பதைக் கண்டு, நாயகனை அடிக்க , அந்த அடி , நாயகிக்கு வலிக்க...

வலி பொறுக்க முடியாமல் நாயகி நாயகனை தேடி வர.. நாயகனை தன் தந்தை அடிப்பதை தடுக்க முயன்றபோது ,நாயகி நதியில் விழ, அப்போது நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து  ஆக்ரோசத்துடன் ஓடி வர.... இயக்குநர் கதை சட்டென்று நிறுத்தினார்.

ஒருவித பரபரப்புடன் கேட்டுக் கொண்டு இருந்த தயாரிப்பாளர்.. அடுத்து என்ன என்று கேட்க..

அடுத்து என்ன கிளைமேக்ஸ்தான் என்றார். இதில் நாலு பைட், ரெண்டு குத்து பாட்டு, ஒரு சீன் பாட்டு,இரண்டு டூயட்,..

வெளிநாட்டு சிறப்பு வரைகலை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தண்ணிரீலே ஆரம்பித்து தண்ணீரே முடித்து பின்னி பெடல் எடுத்துவிடலாம்.  வசூலையும் அள்ளி குவித்து விடலாம் என்றார் இயக்குநர்.

தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கதையின் ஓன் லைன் தனக்கு ரெம்பவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார்.

இருவருக்கும் சரக்குகளை பரிமாறிக் கொண்டிருந்த உதவியாளர் ஒருவர் தன் சக உதவியாளரிடம் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்.  இந்தப் பாவிய பாறேன் புட்டுக்கு மண் சுமந்த கதையை எப்படி லவிட்டி விட்டுருக்கான் .. அந்தப் பாவியப் பாரேன் ரெம்ப நல்லாயிருக்கன்னு குதிக்கிறத....
.

6 comments :

 1. புராணக் கதைகளை லவட்டுவதில் அந்த இயக்குனர் கில்லாடி ஆச்சே !
  த ம 1

  ReplyDelete
 2. கதை கேட்ட தயாரிப்பாளரும்.,கதை சொன்ன இயக்குநரும் என நன்றே கதை பகிரும் பதிவு

  ReplyDelete
 3. திருட்டு தனத்துக்கு கில்லாடி பட்டமாக்கும்

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 5. இப்படித்தான் நடக்குது...

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!