இந்தியாவை கைப்பற்றி கொடூர ஆட்சி புரிந்து வந்த ஆங்கிலேயர்கள். தங்களின் பாதுகாப்புக்காகவும், தங்கள் ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களையும் எதிர்ப்பவர்களையும், எதிர்த்து கருத்து கூறுபவர்களையும் ,கொடுமையான சட்டங்கள் போட்டு, அந்த சட்டத்தின் மூலம் மக்களை கைது செய்து அடித்து, உதைத்து,அடக்கி ஒடுக்குவதற்க்காக 1659 ல்உருவாக்கப்பட்ட படைதான் போலீஸ் படை. அந்தப் படையின் அலுவலகங்கள்தான் காவல் நிலையங்கள்.
சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட காலத்திற்குப் பின்பும்,இன்றுவரை அரசுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக.பாதுகாப்பு அரனாக இருந்து வருகிறது.
குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் என்று சொல்லிக் கொண்டு, ஆங்கிலேயனைவிட கூடுதலாக அதிக அதிகாரம் பெற்று செயல்படுவது காவல்துறை.
இந்தக் காவல்துறை தமிழ் நாட்டில் ஆண்ட.,ஆளுகின்ற அரசியல் கட்சிகளால் விரிவு படுத்தப்பட்டு 16 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 1452 காவல் நிலையங்களும், 196 மகளிர் காவல் நிலையங்களையும் சேர்த்து மொத்தம் 1,648 காவல் நிலையங்கள் இருக்கிறது.
355 ஆண்டுகளாக மக்களை ஒடுக்கி வந்த காவல் நிலையங்களுக்கு அடையாளமாக இருந்தது சிவப்பு நிறம். தற்போது இந்த சிவப்பு நிறத்தை விட்டு பச்சை நிறத்துக்கு மாறுகிறது.
கம்யயூனிச சிவப்பு என்றால் சிலருக்கு பயம். அதே காவல் நிலைய சிவப்பு என்றால் மக்களுக்கு அச்சமோ அச்சம்., இந்த காவல் நிலைய சிவப்பு அச்சத்துக்கு காரணம் அதன் கொடூரம்தான்.
எவ்வளவுதான் மக்களின் நண்பன்! நான் உங்களுக்கு உதவலாமா?, என்று ஒலறினாலும, மக்களிடம் நம்பிக்கையை பெற முடியவில்லை. ,மக்களின் அந்த அச்சத்தை மாற்றுவதற்க்குத்தான் என்னவோ.. கண்ணுக்காகவது பசுமையாக இருக்கட்டும் என்று காவல் நிலையங்கள். பச்சை நிறத்துக்கு மாறுகிறது போலும்
என்னதான் இருந்தாலும் நமது குலப் பெருமையை பரம்பரை சின்னத்தை விட்டு ஒரு அங்குலம் கூட மாறக்கூடாது என்பது போல திரும்பவும் பழையபடி பழைய சிவப்பு நிறத்துக்கு மாறும் அதே காவல் நிலையம். படம்
படம்-2-http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_362281441689.jpg |
இப்படி 355 ஆண்டாக மாறாத குணம் .நிறம் மாறுவதால் மாறவா போகப்போகிறது.
இதைத்தான் ஒருவர் அப்போதே பாடிவிட்டு போய் சேர்ந்துட்டார். காவல் நிலையங்கள் நிறம் மாறினாலும். அதன் மணமும் குணமும் மாறாது என்று..
“ மாறாதய்யா.....மாறாது...........
மணமும் குணமும் மாறாது ”
பதிலளிநீக்கு''போலீஸ் உங்கள் நண்பன்'' என்று சொன்னார்கள் ஆனால் ? எந்தநாட்டுக்கு ? இதுதான் எனது குழப்பம்.
எந்த நாட்டுக்கு என்பதைவிட... யாருக்கு நண்பன் என்று கேட்டால் குழுப்பம் தீர்ந்துவிடும் நண்பா......
பதிலளிநீக்குசிறந்த கருத்துப் பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!
பதிலளிநீக்கு