சனி 13 2014

"தோழர்" என்பதின் அர்த்தம் தெரியாதவர்களுக்கு....

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (camarade : தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

தமிழில் புதிதாக தோழர் என்ற சொல்லைப் பயன்படுத்த தொடங்கி இருப்பவர்கள் எல்லோரும் சமத்துவமான சமுதாயத்தில் நம்பிக்கை கொண்டவர்களா? நிலப்பிரபுத்துவ பிற்போக்குத் தனங்களை நிராகரிப்பவர்களா? ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை விரும்புகிறவர்களா ? இனிமேல் யாரையும் ஐயா, அம்மா, தலைவர், தளபதி என்று அழைக்க மாட்டார்களா???

9 கருத்துகள்:

  1. புரட்சி என்பதைப் போல் உதடுகள் மட்டுமே உச்சரிக்கும் வார்த்தையாகிவிட்டது 'தோழர் 'என்பதும் !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. அருமையான விடயத்தை சொல்லியுள்ளீர்கள் தோழரே...
    த.ம.2

    பதிலளிநீக்கு
  3. தோழர் என்ற சொல்லிற்கான பொருள் பொதிந்த அருமையான விவாதம். கடைசி பத்தியில் kamarade என்பதற்கு பதிலாக comrade என்றிருக்கவேண்டும், தோழரே.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் நண்பரே...எங்கும் எதிலும் போலிகள் அதிகமாகிவிட்டதுதான் காரணம்.

    பதிலளிநீக்கு
  5. சுட்டிக்காட்டி கருத்துரைத்ததற்கு நன்றி! ஐயா........

    பதிலளிநீக்கு
  6. தோழர் என்ற சொல்லை நான் மிக நேசித்து நட்பாடுகிறவர்களிடத்தில் பயன்படுத்தி இருக்கிறேன் வலிப்போக்கரே!
    ஆனால் இதன் பின்புலம் தெரியாது!
    இது புதிய அறிவு!
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பர் ஊமைக்கனவுகள் அவர்களே!

    பதிலளிநீக்கு

  8. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்