திங்கள் 15 2014

எபோலா வைரஸ் கொலையும் ஆதிக்க சாதிவெறி படு கொலையும்.




எபோலா வைரஸால் தாக்குண்டு,கடும் காய்ச்சல் காரணமாக லைபீரியாவிலள்ள மன்ரோவிய நகரச்சாலையில் மயங்கி விழுந்து கிடக்கும் சிறுமி எஸ்தர் (படம்)

சாவோடு போராடிக் கொண்டிருக்கும் அச் சிறுமியைத் தூக்குவதற்கு மனது துடித்தாலும், அருகில் சென்று தூக்கினால், தம்மையும் எபோலா வைரஸ் தொற்றிக் கொண்டுவிடும் என்ற பயத்தின் காரணமாக, 100அடி தூரம் ஒதுங்கி நிற்கும் அந்நகர மக்கள்.

இப்படி பயந்து ஒதுங்கி நின்றவர்களில் எஸ்தரின் அப்பாவும் ஒருவர். இது லைபீரியா நாட்டில்..

  ஆதிக்கச்சாதிவெறிகாட்டுமிராண்டிகளின்  தேசத்திலோ, பெற்று சீராட்டி பாராட்டி வளர்த்துவிட்ட பெண்களை சாதிமாறி காதலித்தற்க்காக சாதி வெறி கொண்டு தந்தையாலும் தாயாராலும்  படுகொலை செய்யப்பட்டு.சுவடே இல்லாமல்  சுட்டு சாம்பலாக்கி விடுகிறார்கள்.

முன்னதுக்கும் பின்னதும், பின்னதுக்கு முன்னதும் ரெம்பவும்  கொடியதாகத்தான் இருக்கின்றன.
எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி.

ஆதிக்க சாதிவெறி பிடித்த பெற்றோர்களால் எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி. 



6 கருத்துகள்:

  1. கற்காலம் நோக்கிப் போகிறோமோ என்று சிந்திக்கவைக்குமளவு உள்ளன இவை போன்ற நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  2. நோயால் சாவதை ஏற்றுக் கொள்ளலாம் ,பெற்ற மகளையே எரித்துக் கொள்வது எப்படி ஏற்றுக் கொள்வது ?சாதி வெறிக்கும் ஒரு அளவில்லையா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. எம்மதமும் சம்மதம் எ்ன்று பேசுபவர்கள்..சாதிவெறியைப்பற்றி கேட்டால் வாய் மூடிவிடுகிறார்கள் ஐயா.......

    பதிலளிநீக்கு
  4. சாதி வெறிக்கு அளவில்லாமல் இருப்பதால்தானே..சாதிவெறிகொலையும் நடக்கிறது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்