பக்கங்கள்

Wednesday, December 03, 2014

இல்லாததை இருப்பதாக பாட்டெழுதும் காவிப் போரரசு..


படம்-tamilcinemareporter.com


அந்தக் காலத்தில் ஆளும் மன்னிடம் சென்று,அவனிடம் இல்லாததை இருப்பதாக ஏற்றி போற்றி, அவன் கொடுக்கும் சன்மானத்தில் வயிறு வளர்த்தார்கள் புலவர் பெரு மக்கள்...

அதன் தொடர்ச்சியாக வாழையடி வாழையாக. காவிக் கட்சியின் எம்பி ஒன்றிரண்டு வார்த்தைகளை அள்ளிவிட்டதற்க்காக, இல்லாத தமிழ்பற்றை இருப்பதாக ஏற்றி. அந்தக் காவிக்கு விழா எடுத்து  இப்போது பெருமைப் பட்டுக் கொண்டார் தமிழால் பாட்டெழுதி வயிறு வளர்த்த காவிப்  புலவர்

இந்த காவிப் புலவர்  அந்தக் காலத்தை நிணைவூட்டும்படியாகவே... இல்லாது இருக்கும் காரியகிறுக்கனை  இருப்பவராக காட்டிகொண்டு, ஒரு பாட்டெழுதி.தனது தமிழ்புலமையின் புல்லுறுவித்தனத்தை காட்டி  தன்னை மெச்சிக் கொண்டது.

காரிய கிறுக்கனின் படம் ஒன்று படையப்பா... அந்தப் படத்தில் காவி போரரசு எழுதிய பாடல்.....

ஓ...............ஓ.........கிக்கு ...ஏறுதே..
ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமக்கு மட்டும்
இதுதான் ரஜினி சித்தர் பாட்டு--------- என்று காரிய கிறுக்கனை சித்தராக ஏற்றி பாவித்து வார்த்தைகளை காவிப்போரரசு அடிக்கியிருந்தது.

இந்தப் பாடலில் காரிய கிறுக்கனை சித்தராக காட்டி பாடலில் புகழ்ந்துள்ளதால்  காரியக் கூட்டமெல்லாம் ஆகா....ஓகோ...வென  காவி போரரசுவை பாராட்டியிருக்கிறார்கள்.

அந்தப் பாராட்டு மழையில்  திளைத்திருந்த வேளையில், காரிய கிறுக்கன். 

காவியை போனில் அழைத்து. சித்தராக இல்லாத என்னை சித்தராக என்னை ஏற்றி போற்றி பாட்டெழுதியது எனக்கு கூச்சமாக இருக்கிறது. அதனால் அந்தப் பாட்டை மாற்றிக் எழுதுங்கள் என்று கேடக..

காவிப்போரரசு... ரஜினி என்ற வார்த்தையை மட்டும் தூக்கிவிட்டு, ஞானசித்தர் என்று பாட்டை  மாற்றி  எழுதியது. 

தருன் விஜய் தமிழுக்கு குரல் கொடுத்ததுக்கு விழா எடுத்த காவிப்போரரசு, பாடலுக்கு தன் பெயர் வரவேண்டும் என்று விறும்புகிற ஹீரோவுக்கு மத்தியில்.“ தன்பெயர் பாடலில் வரவேண்டாம்” என்று விறும்பிய காரிய கிறுக்கனின் குணம் போற்றத்தக்கது என்று வியக்கத்தக்கது என்று அப்பவே புளகாங்கிதம் அடைந்து காரிய கிறுக்கனை புகழ்ந்து தள்ளியது.

இதுதான்  இல்லாதததை இருப்பதாக  தமிழில் பாட்டெழுதி காட்டி. வயிறு
வளர்த்த காவிப்போரரசு என்ற புலவனின் பாட்டுபுலமை.. 

11 comments :

 1. வலிப்போக்கரே!
  உண்மையில் மனதில் உறுதி வேண்டும் அய்யா!
  நானெல்லாம் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேனே ஒழிய உம்மைப் போலெல்லாம் சொல்ல தைரியம் வராதைய்யா!
  நானெல்லாம் பார்த்து சொல்ல வேண்டியதைக் கூடச் சொல்ல முடியாமல் பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
  அதையும் கூடச் சத்தம் கேட்காமல் முடிந்தவரை அமைதியாக!
  என் பதிவின் பின்னூட்டத்தில் கூட அன்னாரின் பெயரை உரக்கச் சொல்ல முடியாத கோழைத்தனத்தை என்ன சொல்ல!
  நன்றாக இருங்கள் அய்யா!
  அது மட்டும் தான் எங்களைப் போன்றோரால் சொல்ல முடிந்தது.
  தம +1

  ReplyDelete
 2. ஊமைக் கனவுகளே!! நானும் ஒரு காலத்தில் அப்படித்தானய்யா இருந்தேன். வினவு தளத்தை படித்து படித்து தைரியமும் கூடிப் போய்விட்டதய்யா....!!!

  ReplyDelete

 3. நண்பரே,,, ஸூப்பர் இவனைப்பற்றி நானும் ஒரு பதிவு வைத்திருக்கிறேன்.... இவனெல்லாம் என்னைப்பொருத்தவரை தமிழனே இல்லை என்றுதான் சொல்வேன்
  த.ம 2

  ReplyDelete
 4. இவர்தான்'திரைப் படச் சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் 'என்று முன்னொரு காலத்தில் எழுதியவரும் கூட !
  த ம 3

  ReplyDelete
 5. வலிப் போக்கரே
  மனதில் உறுதி வேண்டும் என்று பாரதியின் பாடலை படித்தால் மட்டும் போதாது
  வாக்கினின்லே தெளிவும் வேண்டும் என்பதை இதன் மூலம் மிகவும் துணிவுடன் சொன்ன விதம் "சொக்கப் பானையிலே" தீபமாய் தெரியுதய்யா!
  வாழ்த்தொளிகள் வானுயர கேட்குதய்யா!
  பேசாத ஊமைகளையும் பேச வைக்குதய்யா!
  புதுவை வேலு

  ReplyDelete
 6. நண்பரே! கால தாமதம் செய்யாமல் தங்களின் பதிவை வெளியிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்..

  ReplyDelete
 7. ஆரம்பத்தில் புதிய வாயாக இருந்தது.போகப்போக ஊத்தவாயாக போனது.....

  ReplyDelete
 8. மன உறுதியோடு வாழ்த்திய திரு. யாதவன் நம்பி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 9. வயித்தெரிச்சலும் வன்மமும் இவையே உங்கள் எழுத்துக்கள். மற்றவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளல் கூடாது;
  'உன்னைத் திருத்திக்கொள் சமுகம் தானாகவே திருந்திவிடும்'

  நன்றி
  வழிப்போக்கன்

  ReplyDelete
 10. இவர் மட்டும் இல்லைங்க, தமிழ்கவிஞர்கள் பலர் பொய்களை தங்க இஷ்டத்திற்கு புகழ் பாடி அடித்து விடுவாங்க.அதை இரசிப்பதற்கும் பலர் இருக்கின்றனர்.

  ReplyDelete
 11. சினிமா கதாநாயகன் வில்லனை அடித்து துவம்சம் செய்வதை ...முடியாதவர்கள் ரசிப்பது போல்தான் இதுவும் திரு. வேகநரி அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com