வியாழன் 04 2014

அரசின் கொள்ளை முடிவில் தலையிடும் நீதி அரசர்கள்...

judge-001


போதையால்  பெருங்குற்றங்கள், சீர் குலையும் குடும்பங்கள், இதனால் மது விலக்கை ஏன் அமலாக்கக்கூடாது ??? என்று சென்னை உயர்நீதி மன்ற நீதி அரசர்கள் சரமாரியாக  16 கேள்விக் கனைகள் தொடுத்ததோடு, அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்கள்.

இந்தச் செய்தி நாளேடுகளில் வந்தபோது. படித்தவர்கள் அதை சத்தம்போட்டு படித்தார்கள். படித்து முடித்தபோது, படித்தவர்களும் கேட்டவர்களும் சொன்னார்கள். படிப்பதற்கும். கேட்பதற்கும் நல்லாத்தான் இருக்கிறது.  .

அதோடு நீதி அரசர்களின் பஞ்ச் டயலாக்குகள் சூப்பர் ஸ்டாரின் டயலாக்கையே விஞ்சி விட்டதென்று...

நல்ல மனதுடைய ஒன்றிரண்டு நீதி அரசர்கள்.நாட்டில் நடக்கின்ற கொடுமைகளில் ஒன்றிரண்டு கொடுமைகளுக்கு சட்ட ரீதியாக பூட்டு போட்டாலும் ...

இந்த நீதி அரசர்களை விட பெரிய்ய்ய  அரசர்களான  உச்ச மன்ற நீதியரசர்கள் நேர்மையான நீதி அரசர்கள் போட்ட பூட்டை , பூட்டுக்குரிய சாவியைக் கொண்டோ, அல்லது மாற்றுச் சாவியைக் கொண்டோ, அல்லது கள்ளச் சாவியைக் கொண்டோ திறப்பதில்லை.. 

அதற்கு மாறாக  சுத்தியலால் ஒரே போடாக போட்டு பூட்டையே உடைத்துவிடுவார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி பூட்டை உடைத்த கதைகள் எண்ணிக்கையில் அதிகமிருந்தாலும். சமீபத்தில் இந்த பெரிய நீதி அரசர்கள் உடைத்த பூட்டு சம்பவம் ஒன்று உண்டு.

தமிழகத்து கொள்ளைக்காரியும்,வாய்தா ராணி என்ற அரும் பெரும் பட்டத்தை தனதாக்கி கொண்டவர்களின் வழக்கின் தீர்ப்பும், அந்த தீர்ப்பின் பூட்டை உடைத்து  பினை வழங்கிய பெரிய்ய்ய நீதி அரசர்களுமே..இதற்கு சாட்சியும் உண்மையுமாகும் (பார்க்க--http://www.vinavu.com/2014/11/20/background-for-jaya-getting-fast-track-bail/)


மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டும். இந்தீயாவுக்கு சுதந்திரம் வாங்கியதாக சொல்லப்பட்டு காலம் பல ஆகியும் ,  பேசும் அந்தந்த  மாநில மொழியை வழக்காடு மொழியாக்கவும், அந்த மாநிலத்தின்   மொழியில் நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவதற்கே  நீதி அரசர்களால் முடியாதபோது, தாங்கள் உத்தரவிட்டபின்னும் உத்தரவை நடைமுறை படுத்து மறுக்கும் ஆட்சியாளர்களின் மீதும்  நடவடிக்கை எடுக்க முடியாபோது...

நீதியரசர்களின் 16 கேள்விகளுக்கு அரசிடமிருந்து என்ன பதில் வரும்.

அரசின் பொதுத்துறை சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு தனியார்க்கு  தாரை வார்த்து கொடுப்பதை எதிர்த்து நீதியரசர்களிடம் முறையீடு செய்தபோது  நீதிமன்றத்தில் ஆட்சி புரிந்த நீதியரசர்கள் சொன்ன கொள்கை முழக்கம்தான் அரசின் கொள்ளை முழக்கமாக வரும்.

அரசின் கொள்ளை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று அன்று சொன்னதைத்தான் 16 கேள்விகளுக்கும்  ஓரே பதிலாக.“ அரசின் கொள்ளை முடிவில் நீதி மன்றம் தலையிட முடியாது” என்று  பதிலாக வரும்.

நீதியரசர்களின் கொள்கை முடிவுக்கும்,அரசின் கொள்ளை முடிவுக்கும்-- ஏதுவாக தீர்ப்பு வர ..ஒரு பதினெட்டு வருடங்கள் ஆகலாம். அல்லது நீதியரசர்களின்  கொள்கை முடிவை உயிரோடு சமாதியாக்கி விடலாம்.அல்லது அரசின் கொள்ளை முடிவுக்கு எதிராக ஒரு தீர்ப்பும் வழங்கப்படலாம்.

அப்படி வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள். தடையானையும் பிறப்பிக்கலாம். பிறகு அரசின் கொள்ளை முடிவில் தலையிட்ட நீதியரசர்களின் சட்டப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வரலாம்..




5 கருத்துகள்:


  1. இவங்கே எப்படி வேணும்னாலும் பேசுவாங்கே,,,, பாஸூ
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. நரம்பில்லா நாக்கு எங்தப்பக்கம் வேனுமில்லாலும் வளையும் மாதிரியில்ல இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. காசுக்கு விலை போகும் கள்ளத்தராசுகள்!

    ( ஓட முடியவில்லை வலிப்போக்கரே!
    கொஞ்சம் மெதுவாப் போங்களேன்.)
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. காசுக்கு விலை போகும் கள்ளத்தராசுகள்!

    ( ஓட முடியவில்லை வலிப்போக்கரே!
    கொஞ்சம் மெதுவாப் போங்களேன்.)
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. நான் ஓடவில்லை.. மெதுவாகத்தான் செல்கிறேன். ஒரு வலை தளத்தடன்.. திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...