செவ்வாய் 09 2014

இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வுளவு பாதுகாப்பு...




இலங்கை அதிபர் ராஜபக்சே ..திருப்பதி கோயிலில் வரும் பத்தாம்“ தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். முன்னதாக அவர் நாளை திருப்பதிக்கு வருகிறார். 

இதையொட்டி இலங்கை அதிபர் வந்து செல்லும் ரேணி குண்டாவிமானநிலையம்,திருப்பதி மலைபாதைகள், ஓய்வெடுக்கும் பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகை,திருப்பதிகோயில், வராகசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பாதுகாப்பு பணிகளை திருப்பதி ஏஎஸ்பி சுவாமி ஆய்வுசெய்தார்--இவ்வாறு ஒருவர்  பத்த வச்ச பீடியில் புகை இழுக்க மறந்து செய்தி பத்திரிக்கையை வாசித்து முடித்தார்.

அருகில் ஓசி தீப்பெட்டி கேட்பதற்க்காக இவர் வாசிப்பதை பொருமையுடன் கேட்டு கொண்டு இருந்தவர் இப்படிக் கேட்டார்.

“ இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வளவு பாதுகாப்பு“ என்று கேட்டார்.

பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவர். அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு “ ஓசி தீப்பெட்டி கேட்கிற ஒனக்கெல்லாம், சந்தேகம் வந்திருச்சா” என்று நிணைத்தபடி கவுண்டமணி பாணியில்  விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு கொலய செஞ்சவன. கோர்ட்டுக்கு போகயில் போலீஸ்காரன் எப்படி  அவன சூட்டிட்டு போவாங்கே..என்று தெரியுமா..? என்று கேட்டார்.

“கையில விலங்கு மாட்டிட்டு, முன்னாடியும் பின்னாடியும் ரெண்டு போலீஸ்காரங்க துப்பாக்கியுடன் போவாங்கே..” என்றார்.

“ஒரு கொல செஞ்சவனக்கே ரெண்டு  போலீஸ் பாதுகாப்புனா..... ஒரு இனத்தையே அழிச்சவனுக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போடுவாங்கே” யோசிச்சு பாரு....???

கேள்வி கேட்டவர் பேசாமல் இருந்தார்.

மீண்டும் அவரே .பேசினார். வர்றவனக்கும்..இங்கிருக்கிறவனுக்கும் வாயும் வயிறும்தான்  வேற வேற.... ஆனா “ கொல்லும் சிந்தனை மட்டும் ஒன்னு”ப்பா என்று விட்டு.  அணைந்துபோன பீடியை திரும்ப பத்த வச்சு ..புகையை வெளியே விட்டார்.

ஓசி தீப்பெட்டி கேட்டவர். புகையை விட்டபடியே சொன்னார்.  நீங்க..சொல்றதும் உண்மைதான் “கொலகாரனையும் கொள்ளக்காரனையும் பாதுகாக்கத்தான் போலீசு இருக்குது”



6 கருத்துகள்:

  1. பதவியில் இருக்கும் வரைதானே இந்த பாதுகாப்பு ?அப்புறம் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இவிங்களுக்கு சாவு வரைக்கும் இல்லாமல் ..இதுக்கும் தாண்டி இவிங்க செத்து புதைக்கபட்ட சுடுகாட்டுக்கும் பாதுகாப்புங்க..ஜி

    பதிலளிநீக்கு

  3. இவ்வளவு பாதுகாப்பு ஓவருதான்...
    த,ம.2

    பதிலளிநீக்கு
  4. நமக்கு தெரியுது..... அதுகளுக்கு பெரிய கவுரம்.....

    பதிலளிநீக்கு
  5. அதானே! சூடு சுரணையற்ற தமிழர்கள்...!
    தமிழ்மணம் +1

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. நம்பள்கி அவர்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்