பக்கங்கள்

Saturday, January 03, 2015

தெரிந்த பிசாசும்...தெரியாத தேவதையும்...


மஹிந்த ராஜபக்ஷ மைத்ரிபால சிறிசேன
படம்- BBC தமிழ்
ஈழத் தமிழரின் ரத்ததை குடித்த  பிசாசு ... மீண்டும் மிச்சம் சொச்சமுள்ள ஈழத்தமிழரின் ரத்தத்தை குடிக்க தினவெடுத்து  கொலைகளத்தில்  குதித்து உள்ளது.

அந்த காட்டேறி தான் செய்த பஞ்மா பாதகங்கான இலங்கையின் கொலைக் களங்கள்-2 பற்றி எந்தவொரு பயமும் இல்லாமல் திமிராக  ஈழத்தமிழர்களிடம் வந்து உங்களுக்கு தெரிந்த இந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுள்ளது.

அந்த பிசாசு ஒரு பொன்மொழியையும் கக்கி உள்ளது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேல் என்று தனக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர்களை பற்றிக் கூறியுள்ளது.

தெரிந்த பிசாசு தெரிந்தே கொல்லும், தெரியாத தேவதை தெரியாமல் கொல்லும் என்பதே ஈழத்தமிழரின் மொத்த அனுபவமாக இருக்கிறது.

13 comments :

 1. இந்த பிசாசுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவதை பதில்
  சொல்லாததில் இருந்தே தெரிகிறது ,அதுவும் ஒரு பிசாசு தானென்று !

  ReplyDelete

 2. என்ன செய்ய எங்கும் பிசாசு எதிலும் பிசாசு

  த.ம.2

  ReplyDelete
 3. தெரிந்த பிசாசு அல்லது தெரியாத பிசாசு செய்யும் பிரச்சாரங்களின்
  இரத்த வாடை இங்கும் அடிக்குதய்யா!
  போதும் போதும் மூக்கை அடைக்குது அய்யா!
  மூட்டையை கட்டுங்க!
  புதுவை வேலு

  ReplyDelete
 4. பதில் சொல்லாத புதிய பிசாசை.. பழைய பிசாசு போட்டுத் தள்ளிவிடும் என்ற பயமாகக்கூட இருக்கலாம்

  ReplyDelete
 5. இந்த பிசாசுகளை ஒழித்துகட்ட யாரும் இல்லததால்தான்.. எங்கும் பிசாசு எதிலும் பிசாசாக இருக்கிறது

  ReplyDelete
 6. மூக்கை பிடித்தாலும் மூட்டையை கட்டினாலும், பிசாசுகளின் இரத்த வாடை அடிக்காமல் இருந்துவிடுமா...?

  ReplyDelete
 7. கேவலமானவர்கள் தங்கள் கேவலத்துக்குத்தான் அதிகமாக பழமொழியை பயன்படுத்துகிறார்கள்.

  ReplyDelete
 8. பிசாசு தன்னைப் பிசாசு என்று ஒத்துக் கொண்டதே அதை வரவேற்போம்.
  பிசாசு என்று தெரிந்தபின் அதை நாட்டில் வைத்திருப்பதா சுடுகாட்டில் வைப்பதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.
  நன்றி

  ReplyDelete
 9. முடிவு செய்வதற்கு மக்களுக்கு அதிகாரம் இருந்திருந்தால்..நான்தான் பிசாசுன்னு சொல்றவரைக்கும் அது இருக்குமா....?

  ReplyDelete
 10. தெரிந்த பிசாசு தெரியாத தேவதையை பொன்மொழி குழப்பமா தான் இருந்தது.இலங்கையில் எதிர் வேட்பாளர் ஒரு ஆண் ஆச்சே!இவரை தான் பெரிய தமிழ் கட்சி ஆதரிக்கிறது. சென்ற வருடம் வரை கூட தமிழகம் ஒரு தேவதையின் ஆட்சியின் கீழ் இருந்திச்சு.

  ReplyDelete
 11. எனக்கும் முதலில் குழப்பமாகத்தான் இருந்தது. எதிர்கட்சியில் இருந்த முன்னால் பெண்மணியைத்தான் குறிப்பிட்டுள்ளர். என்று நிணைத்தேன். தழிழகத்து தேவதை ஓய்வெடுத்து கொண்டு இருக்கிறது. அடிமைகள் செய்யும் பரிகாரங்களால் விடுதலையாக முழுவீச்சில் பறந்து வரும் திரு.வேகநரி அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com