பக்கங்கள்

Tuesday, January 06, 2015

“பிளாக்” ல குவார்ட்டர் விற்பனை.....?????

படம்--dinaex.blogspot.com


 இன்றைய  பத்திரிக்கையில் ஒரு செய்தி!!

“பிளாக்”கில் மது ( குவார்ட்டர்) விற்பனை

அட.... பாவிகளா... “பிளாக்” கிலும்  குவார்ட்டர்  விற்க ஆரம்பிச்சுட்டாங்களா...?

ஆமா.... எந்த   ”பிளாக்”ன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்கொள்வோம்ல.....

“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க”..................

“ ”காந்தி ஜெயந்தி,மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி அன்னிக்கி கடை அடச்சுடுவாங்கேலே........... அப்ப உதவும்லே.......

ஓ......நீங்க அந்த...... ரூட்ல..வர்ரீங்களா..........“.பிளாக்”கில வித்தவுகளத்தான் கைது பன்னி 31 பாட்டில்கள பறிமுதல் பன்னிட்டாங்கல...

ஒரு ”பிளாக்”ல மாட்டுனா..... அடுத்த “பிளாக்” ல விற்ப்பாங்கண்ணே..... கோவிக்காதீங்க. “எந்த பிளாக்”ன்னு கண்டுபிடிங்கண்ணே.,
உங்களுக்கும்.... கம்பெனி குடுப்போம்ல.ண்ணே..........

அதுக்குத்தாண்டா.லூசு நானும்,  கம்யூட்டர்ல ஒக்காந்து எந்த ”பிளாக்”கர்னு மாங்கு மாங்குன்னு தேடிக்கிட்டு இருக்கிகேன்.

 நல்லா தேடிப் பாருங்கண்ணே..... எங்கயாவது ரகசியமா  பதுக்கி வச்சு விப்பாங்கண்ணே............

                                              .............................

என்னடா..??ஃ.... கம்யூட்ர்ல தேடிக்கிட்டு இருக்கீங்க............

 “பிளாக்”ர்ல குவார்ட்டர் விக்கிறாங்க....... அது எந்த  ”பிளாக்”கர்ன்னு தேடுறோம்.

அப்படியா....!!!!!..என்னையும் உங்க குருப்புல சேத்துகிடுங்கடா.....????..


.


8 comments :


 1. நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன் நண்பா,,,
  த.ம 1

  ReplyDelete
 2. சிரமப்பட்டு தேடியிருக்கவேண்டாம் என்று பின்னர்தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. தேடினாலும் கிடைக்காது நண்பா... லீவு முடிஞ்சு.. கடையெல்லாம் திறந்திட்டாங்க....நண்பா....

  ReplyDelete
 4. ஒருசிலருக்கு தானுங்கய்யா...நெற்றிக்கண் திறக்கும் எல்லாருக்குமா..திறக்கும்..பின்னரும் தெரிந்திருக்க வாய்பில்லை... எந்த பிளக்கர்ல விக்கிறாங்கன்னு கேக்காமா இருந்தா.... சரி......என்று எனக்கு தோன்றுகிறது.

  ReplyDelete

 5. என்ன தோழரே!
  "பிளாக்"கைப் பற்றி சிகப்பும் சிந்திக்க தொடங்கி விட்டதே?
  கருப்பும் சிகப்பும் சேரந்தாச்சி
  பிளாக்கில் வாங்கி சோர்ந்தாச்சி
  குடிச்சி குடிச்சி கீழே விழுந்தாச்சி!
  டேய் மாப்பிளே!
  சரக்கு அடிச்சாலும் மப்பு இல்லே
  ஹி! ஹி! ஹி!
  புதுவை வேலு

  ReplyDelete
 6. செய்திய படிச்சவரு..பிளாக்கர்ல குவார்ட்டர் விறபனைன்னு படிக்கபோக அதப் படிச்சவரு மப்புக்காக எந்தப் பிளாக்கர்னு தேடிக்கிட்டு இருக்கிறார்..திரு.யாதவன் நம்பி அவர்களே!!!

  ReplyDelete
 7. இந்த சிரிப்பை..எந்த வகையில் சேர்த்துக் கொள்வது வலை சித்தரே...,????

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com