பக்கங்கள்

Tuesday, January 06, 2015

காக்கையொன்று பெண் சிங்கமாக மாறியது.. ...

நான் சிங்கம்லே!... தமிழிசைக்கு குஷ்பு கொடுத்த பஞ்ச்
படம்--பெண்சிங்கம் 
அகில  உலக காங்கிரஸ் கட்சியின் 130 வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு..முன்னால் காக்கையும் இன்னால் சிங்கமாக மாறிய நடிகை  உறுமியதாவது.

 அகில ஒலக பா.ஜ.க.வின் தமிழகத்தின் தலைவி தமிழிசை சவுந்தரராஜன் நடிகை என்றால் மோசமானவர்கள் என்பது போல் பேசிவருகிறார்.. காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க ஆளும் மத்திய அரசில் கேபினட் அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இராணி ஒரு நடிகை இல்லையா..? மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது ரஜினி வீட்டுக்கு சென்று (டீ குடிக்க என்று சாக்கு சொல்லி) சந்திக்கவில்லையா..? அவரை பா.ஜ.கவுக்கு இழுக்க முயற்சி செய்யவில்லையா...?

அதே போல ஒங்க கட்சியின் தலைவர் அமித்ஷா  சென்னைக்கு வந்த     போது
நடிகர் நெப்பொலியன் , இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுமான் உள்ளிட்ட சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் பாஜகவில் சேரவில்லையா...????

என்னை யாருக்கும் தெரியாது  என்று சொல்லி இருக்கிறார் என்னை இந்த உலகத்துக்கே தெரியும் ( முதன்முதலில் எனக்குத்தான் கோயில் கட்டி வழிபட்டார்கள் என் ரசிகர்கள்) தமிழிசை. (நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது என்று இழிவு படுத்தியதை  மறந்து) தமிழக பாஜகவின் தலைவரானது தபால்காரரருக்கே இப்போதுதான் தெரியும்.

நான் காக்கை என்று மோதி பார்த்தார்.. நான் காக்கை அல்ல.. பெண் சிங்கம் என்று  உறுமிக் காட்டியதும் பயந்துவிட்டார்.
 

12 comments :


 1. ஏன் ? நண்பா, விபச்சாரிகளைப்பற்றி எழுதி வயிற்றெர்ச்சலை கிளப்புறீங்க அப்புறம் நான் எசக்கு பிசகா எழுதிடப்போறேன்
  இருந்தாலும் தமிழ் மணம் 1 நண்பா,,,,

  ReplyDelete
 2. முன்னால் காக்கையும் இன்னால் சிங்கமாக மாறிய நடிகை உறுமியதாவது,

  சிங்கம் உறுமியதை சொன்னீர்களே! சரி!
  காகம் கரைந்த கதையை ஏன் தோழரே அன்று சொல்ல வில்லை?

  எச்சமிட்டுவிடும் என்ற பயம் தானே?
  புதுவை வேலு

  ReplyDelete
 3. இவங்க கேட்டவைகள் சரியான கேள்விகளே.

  ReplyDelete
 4. பார்த்தவுடனேயே பயம் வந்து விடாதோ...? ஹிஹி...

  ReplyDelete
 5. யாராக இருந்தால் என்ன நண்பா...? அவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது ஜனநாயகத்தில் கருத்துரிமை நண்பா...? அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யவில்லையே நண்பா... எரிச்சலை குறையுங்கள் நண்பா.....

  ReplyDelete
 6. எச்சமிட்டுவிடும் என்ற பயமில்லை நண்பா... காக்கை கரைந்தததை பலரும் அன்று பதிவிட்டு உள்ளதால். கூட்த்தோடு சவுண்டு கொடுக்கவில்லையே தவிர..வேறு ஒன்றும் காரணமில்லை நண்பா....

  ReplyDelete
 7. பயப்பட வேண்டும் என்றுதானே சிங்கம் கர்ஜிக்கிறது நண்பரே....!! வலை சித்தரே ........

  ReplyDelete
 8. அவுக கேட்ட கேள்வியை கண்டுதான் சிங்கம் உறுமிகிறது என்று குறிப்பிட்டேன் திரு.வேக நரி அவர்களே!!

  ReplyDelete
 9. நியாயமான உறுமலுக்கு மதிப்பளிக்கும் சாமானியனுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. தங்களின் பாராட்டுக்கு நன்றி!!

  ReplyDelete
 11. Dont Mention the caste like nadar etc it will lead the problem to the different lane .

  ReplyDelete
 12. தமிழிசை நாடார் வகுப்பை சார்ந்தவர்.உயர் சாதியினரால் நாடார் வகுப்பை சார்ந்தவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இழிவுபடுத்தப்பட்டார்கள் என்பதை குறிக்கவே மறந்து என்று அடைப்புக்குள் குறிக்கப்பட்டுள்ளன அன்றி வேறு நோக்கம் இல்லை .

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com