புதன் 25 2015

அந்த மார்ச் 23ம் நாள்.... மறைக்கப்பட்ட வரலாறு..

FB_IMG_1427033084672.jpg ஐக் காண்பிக்கிறது
படம் உதவி. மூன்று மாவீரர்கள்.

மணி இரவு  7.30

லாகூர் சிறைச்சாலை அறை ஒன்றில் மாவீரர்களான பகத்சிங் ,ராஜகுரு சுகதேவ் மூவரும் கைளிலும், கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டு  அடைக்கப்பட்டு இருந்தார்கள். பகத்சிங் “லெனின்” எழுதிய “ அரசும் புரட்சியும் ” என்ற நூலை படித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது சிறை வார்டர்கள் அறைக்கதவை திறந்தார்கள். வந்தவர்களை பகத்சிங் ஆச்சரியத்தடன் பார்த்தார்.

“சர்தார்ஜீ! உங்களை தூக்கிலிடுவதற்க்கான ஆணை வந்திருக்கிறது. இதோ! “தயவு செய்து தயாராகுங்கள் ” என்றார் சிறை அதிகாரி.

“ நாளை 24ந்தேதி அல்லவா...எங்களை தூக்கிலிட வேண்டும் என்று உத்திரவு...?” என்று பகத்சிங் கேட்டார்.

“ஆமாம், அது முந்திய உத்திரவு. இப்போதே தூக்கிலிடும்படி இந்த உத்திரவு”.. என்று சிறை அதிகாரி பதில் சொன்னார்.

மாவீரர் -பகத்சிங் மெல்ல நகைத்துவிட்டுச் சொன்னார்.
“ பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எங்கள் மீது கருணை பிறந்திருக்கிறது! அதனால்தான் இந்த அடிமை இந்தியாவில், இன்னும் 12 மணி நேரம் கூட நாங்கள் அடிமை பூச்சிகளாக இருக்கக்கூடாது என்று கருணை காட்டி, இன்றைக்கே கொன்றுவிடத் தீர்மானித்து விட்டது . ஆகட்டும் நாங்கள் தயார்” என்றார்.

அப்போது அதிகாரிகள் “பகத்சிங்”கைப் பார்த்து அதிசியப்பட்டார்கள்.

மூன்று வீரர்களும். சிறை அறைக்குள்ளிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்கள்.

“சர்தார் ஜீ! சிறைச்சாலை விதிப்படி மரண தண்டனை நிறைவேறுவதற்கு முன்னால், உங்கள் ஆத்மா சாந்தி அடைய உங்களுக்கு மதச் சடங்குகள் முடிக்க வேண்டும். குருக்களும் வந்திருக்கிறார்கள், செய்யலாமா?“ என்று கேட்டார் சிறை அதிகாரி.

மாவீரர்- பகத்சிங், அதை மறுத்தார், “நாங்கள் நாத்திகர்கள், எங்களுக்கு ஆத்மா, சடங்கு, சம்பிரதாயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லை, வேண்டாம் என்று மறுத்தார். அதிகாரிகள் ஒப்புக் கொண்டார்கள்.

உடனே, அவர்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டினார்கள், கை விலங்குகளை அகற்றிவிட்டு, கைகளை பின் பக்கமாக துணியால் கட்டினார்கள். பின்பு தூக்கு மேடை நோக்கி அழைத்துச் சென்றார்கள்.

அப்போது, பெரிய அதிகாரிகளோடு, ஜெயிலர், துணை ஜெயிலர், மற்றும் பல வார்டர்களும் துப்பாக்கி ஏந்தியபடி அவர்கள் பின்னால் வந்தார்கள்.

பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஏகாதிபத்திய அராஜக ஆட்சிக்கு எதிராக , இந்திய மக்களின் உரிமைக்கும், சம வாழ்விற்கும், தன் மானத்திற்கும் வெஞ்சமர் புரிந்த மாவீரர்கள் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டார்கள்.

மாஜிஸ்திரேட் அவர்களிடம் கேட்டார்.

“ குற்றவாளிகளே !!! உங்கள் கடைசி என்ன ? இருந்தால் சொல்லுங்கள் என்றார்.

அதற்கு “மாவீரர்- பகத்சிங் சொன்னார்.,“ எங்களுக்கு  ஒரே ஆசைதான்!! நீதிமன்றத் தீர்ப்புப் படி நாங்கள் பிரிட்டிஷ் மன்னரை எதிர்த்து யுத்தம் புரிந்தவர்கள்!!! எனவே, எங்களை யுத்தக் கைதிகளாக நடத்த வேண்டும். சாதாரண சமூக விரோதிகளைப் தண்டிப்பது போல் தூக்கிலே போடக்கூடாது. ராணுவ வீரர்களை வரவழைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும்.” “இதுதான் எங்கள் கடைசி ஆசை” என்றார்.

அதை மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்துவிட்டார்., “உங்களை தூக்கில் போட வேண்டும்” என்றுதான் உத்தரவு, அதை நாங்கள் மாற்ற முடியாது.... வேறு என்ன ஆசை..??? என்று கேட்டார் மாஜிஸ்திரேட்.

“.....எங்கள் கண்களை மூடியுள்ள கறுப்பு துணியை எடுக்க வேண்டும், நாங்கள் பிறந்த இந்த  மண்ணைப் பார்த்தபடியே சாக விறும்புகிறோம் ”. என்றார் மாவீரர் பகத்சிங்.

மூன்று பேருடைய கண்களிலும் கட்டப்பட்ட கறுப்புத் துணியை அகற்ற ஆணையிட்டார் மாஜிஸ்திரேட்!!!

 மாவீரர்களில் முதலாதவதாக பகத்சிங்-ன் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டினான் கொலையாளி ஒருவன்.

 மாவீர்ர்-பகத்சிங்  உரத்த குரலில் தனது தோழர்களிடம் கூறினார்.

” தோழர் ராஜகுரு வருகிறேன்! தோழர் சுகதேவ் வருகிறேன் ! என்று பிரியா விடை பெற்றார்.

விசை அழுத்தப்பட்டது. தொங்கிய மாவீரரின் உயிர் பிரிந்தது.

உணர்ச்சிப் பிழம்புகளான மாவீரர்கள் ராஜ குருவும், சுகதேவும்... ஒரே குரலில்

 “ புரட்சி ஓங்குக.!”
“பகத்சிங் வாழ்க ! ”
“ ஏகாதிபத்தியம் ஒழிக !”
“யூனியன் ஜாக்கொடி வீழ்க! ”

என்று விண்ணதிர முழங்கினார்கள்,


பகத்சிங்கை அடுத்து ராஜகுரு, அடுத்து சுகதேவ், என்று  அடுத்தடுத்து மூன்று பேரும்  பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கும்  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் விசுவாசிகளுக்கு ஆதரவாகவும்  காவு கொடுக்கப்பட்டார்கள்.



வழக்கத்துக்கு  விரோதமாக மாவீரர்கள் மூவரும்  இரவிலே தூக்கு போட்டதை அறிந்த மொத்த கைதிகளும்...

“ பகத்சிங் வாழ்க !”
“ ஏகாதிபத்திய்ம் ஒழிக ! ”
என்று முழக்கமிட்டார்கள்.


இந்த முழக்கம், சிறைச்சாலை முழுவதும் எதிரொழித்தது. அப்போதுான் மற்ற கைதிகளுக்கும் விசயம் தெரிந்தது.

சிறைச்சாலை டாக்டர் , அந்த மூன்று மாவீரர்களின் உடல்களை தொட்டுப் பார்த்தார். உயிர் பிரிந்து விட்டது என்று சான்றிதழ் கொடுத்தார்.

 அந்த மூன்று மாவீரர்களின்  கண்கள் “ நெருப்பு மலர்களாக-  அக்கனி புஷ்பங்களாக” இருந்ததாக அந்த  டாக்டர் சொன்னார்.





17 கருத்துகள்:

  1. நல்ல பதிவு ,ஒரு குறை ..#ஆகட்டும் நாய்கள் தயார்#இதை சரி செய்யுங்கள் தோழரே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறை சரி செய்தவிட்டேன் ஜி, தவறை சுட்டிக்காட்டிய தங்களுக்கு என்றும் நன்றி!

      நீக்கு
  2. படிக்கும் பொழுது மனம் கணத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  3. விடுதலை தூக்கிலடப்பட்ட அங்கே ஒரு நிமிடம் நானே சாட்சியாய் நின்ற உணர்வு !

    ஒன்றுக்கும் உதவாத எத்தனையோ தினங்களை கொண்டாடுபவர்களில் எத்தனை பேருக்கு இந்த தினம் தெரியும் ?... அதன் அருமை புரியும் ?

    எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  4. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பற்றிய கருத்துகள்
    நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. அந்த நெருப்பு வரலாற்றை எழுத இருந்தேன் பல்வேறு பணிகளுக்கிடையில் இயலவில்லை என்று ஒரு வருத்தம் இருந்தது. தங்கள் பதிவில் மறைந்தது. நன்றி. வீரர்களை இளைய தலைமுறைக்கு காட்டியதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நெருப்பு வரலாற்றை தங்கள் பாணியில் எழுதுங்கள். இளம் தலை முறைக்கு பல வழிகளில் தெரியட்டும். நன்றி! ஜீ

      நீக்கு
  6. பாலமகி பக்கங்களில் இலக்கணம்.

    பதிலளிநீக்கு
  7. எங்கே வலிப்போக்கர் என் வழியில் கானோம். அங்கு வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்க பதிவு பகத்சிங்கை நிறைய தெரிய வைத்திருக்கிறது.
    பிரிட்டிஷ் காலத்தில் சமூக விரோதிகளுக்கு தூக்கு மரண தண்டணை, யுத்தக் கைதிகளுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டணை!!! மரணதண்டணைக்கு எதிர்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா மானிலம் ஒன்று விஷ ஊசி கிடைக்காவிடில் சுட்டு கொன்று மரண தண்டனை நிறைவேற்ற சட்டம் இயற்றியுள்ளது.
    https://www.youtube.com/watch?v=qKVMi-U8Ts8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தகவலுக்கு நன்றி! திரு. வேகநரி அவர்களே!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்