திங்கள் 30 2015

பார்ப்பனீய மதமான இந்து மதத்தில் பெண்களுக்கான பத்துக்கட்டளைகள்..!!!

படம்-ilakkiyainfo.com

1. கணவன் வெளியே சென்று வீடு திரும்பியதிலிருந்து உணவருந்தும் வரை      அவனது தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

2. கணவனது நோன்புகளையும் ,கடைபிடிப்புகளையும் மணவியும்         கடைபிடிக்க  வேண்டும்.

3.கணவன் அனுமதித்தால் மட்டுமே ,திருவிழாக்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ, யாகங்களிலோ, மதச் சடங்குகளிலோ கலந்து கொள்ளவேண்டும்.

4. கணவனின் அனுமதியின் பேரில்தான் விளையாட்டுகளில் பங்கெடுக்க வேண்டும்.

5.கணவனது நண்பர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

6. கணவனின் பெற்றோர்களுக்கு பணிவிடை புரிந்து அவர்கள் கட்டளைப்படி நடக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் பெண்கள் பேசக்கூடாது. அப்படி பேசினாலும் குறைவாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். சத்தமாக சிரிக்கக்கூடாது.

7. கணவன் வெளிநாடு சென்றுவிட்டால் மணைவியானவள், கட்டுப்பாட்டுடன் துறவியைப்போல் வாழ வேண்டும்.குறைந்தளவு அணிகலன்களையே அணிய வேண்டும். நோன்புகளிலும் மதச் சடங்குகளிலும் மனதை செலுத்த வேண்டும்.


8. மூத்தோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.

9. விழாக்கள்,துயர் (சாவு) நிகழ்ந்தாலன்றி உறவினர் வீடுகளுக்கு செல்லக்கூடாது. அவ்வாறு போக நேர்ந்தால் கணவனது உறவினர் துனையோடு செல்ல வேண்டும்.

10. எதாவது வேலையில்  வெளியே  சென்றால், விரைவில் வீடு திரும்ப வேண்டும்..

21 கருத்துகள்:

  1. சோம்பேறி,,,,,,,,,
    பொறாமை,,,,,,,,,,,,,,,,
    அப்பப்பா,,,,,,,,
    இன்னும் நிறைய இருக்கு திட்ட,,,,,,,,,,
    சொன்னவங்கல,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  2. அக்காலத்தில் அன்றைய சூழலுக்கு ஏற்றமாதிரி அப்படி சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்..அதன் பாதி இன்னும் நிலவிக் கொண்டதானே இருக்கிறது.

      நீக்கு
  3. வெறுமனே இப்படி பட்டியலிட்டிருப்பதை விட இந்த ஒவ்வொரு கட்டளை பற்றியுமான விமரிசனத்தோடு பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும், இந்து சமய வெறி மீண்டும் மேலோங்கி வரும் இந்நாளில் நீங்கள் இப்படி ஒரு பதிவு இட்டிருப்பது வரவேற்புக்குரியதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பெரிய தொடராக போய்விடும் என்ற பயத்தால் அளவோடு....நிறுத்திக்கொண்டேன். நன்றி!! தங்களின் கருத்துரைக்கு.....

      நீக்கு
  4. நன்றி! நாகரிகமாக திட்டியதற்கு.....

    பதிலளிநீக்கு
  5. பதிவு இட்டவர், இப்படியெல்லாம் இந்து சமயம் கூறுகிறது என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, இவை சரி என்றோ தவறு என்றோ எதுவும் கூறவில்லையே! அப்புறம் ஏன் உங்களுக்குக் குத்துகிறது? ஆக, இவையெல்லாம் தவறு என உங்களுக்கே தெரிகிறது; அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டாரே என உங்களுக்குக் கோபம், அப்படித்தானே? இப்பொழுது சொல்லுங்கள், இப்படி யாராவது எதிர்க் கேள்வி கேட்டால் என்ன செய்வதென முன்கூட்டிச் சிந்திக்காமல், உங்கள் மனப்பான்மை வெளியாகும் விதத்தில் ஒற்றை வார்த்தையில் மாட்டிக் கொண்ட நீங்கள் முட்டாளா அல்லது வலிபோக்கர் முட்டாளா?

    பதிலளிநீக்கு
  6. திரு. பெயரில்ல அவர்களே...திரு.இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களின் பதில் கருத்தரைக்கு தங்கள் பதிலைக் கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. பார்பன பெண்களுக்கு மட்டுமாக இருந்திருக்கும்.
    அவர்கள் ஏற்பார்களா இன்றும் என்பது கேள்வியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெண்களில் சிலர்தான் அந்த அடிமை தனத்திலிருந்து வெளி வந்துள்ளார்கள்... மற்றவர்கள் ரெம்பவும் விருப்பமுடன்தான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  8. பெயரில்லாத நண்பரே இப்படிக் கூறக்காரணம் என்ன ? விளக்கமாக கேள்வி கேட்கலாமே ? முடிந்தால் உங்களது ஆங்கிலத்திலேயே கேளுங்கள் பதில் தரப்படும்.

    பதிலளிநீக்கு
  9. # கணவன் வெளியே சென்று வீடு திரும்பியதிலிருந்து உணவருந்தும் வரை அவனது தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.#
    உணவருந்திய பின் தனி தனி அறையில் படுத்துக்கணும் என்று சொல்லி இருந்தால் கூட பொருத்தமாய் இருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவருந்திய பின் தனி தனி அறையில் படுத்துக்கணும் என்று சொல்லி இருந்தால் கூட பொருத்தமாய் இருக்கும் :)-- அந்தபொருத்தத்தையாவது சொல்லியிருந்தாலும் பொருத்தமாய்தான் இருந்திருக்கும்...

      நீக்கு
  10. பெயரில்லா நண்பர்க்கு தயக்கம் வேண்டாம் நண்பர். திரு. கில்லர்ஜி அவர்கள் சொல்படியும் கேளுங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  11. தோழரே...

    பெண்களுக்கான இந்த பத்து கட்டளைகளை இந்து மதம் மட்டுமல்ல, ஏறக்குறைய உலகின் அனைத்து மதங்களுமே கடைப்பிடிப்பதாக எனக்கு தோன்றுகிறது...

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. சாமானியன் சாம் அவர்களுக்கு.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்