பக்கங்கள்

Wednesday, May 27, 2015

பெரிய மனிதரின் தீர்ப்பை மாத்தி சொன்ன ஊர் நாட்டாமை...

குன்ஹா க்கான பட முடிவு                   குன்ஹா க்கான பட முடிவு                                 குன்ஹா க்கான பட முடிவு
படம்-tamil.oneindia.com
முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட ஒரு வீட்டின் சொந்தக்காரர், சமையல்காரியை அழைத்து தோட் டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை பிடித்து சமைக்கச் சொன்னார்களாம். தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து அடித்து சமைத்த பெண்ணுக்கு அதை சுவைக்க ஆசை ஏற்பட்டதாம். முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து சாப்பிட்டாளாம். மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம். மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள்.

நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது என்று வாதிட்டாளாம் அந்த பெண். வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம். விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு கால்கள்தான். இந்த பெண் எதையோ மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாராம். தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், வழக்கை ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.

அந்த பெண் என்ன பண்ணினாரோ? ஏது பண்ணினாரோ? தெரியவில்லை?! விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும் முயலுக்கு மூன்றே காலென்று தவறாக கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம்.

தீர்ப்பைக் கேட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும் சிரிப்போடும், திமிரோடும் ஊர் மக்களைப் பார்த்தா ராம்.

நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம் முழுசாக மறுநாள் தான் மக்களுக்கு தெரிய வந்ததாம்.

தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம் இரண்டு கால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள். எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான். எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம். இப்ப நீங்க சொல்லுங்க!

முயலுக்கு மூன்று கால்களா? நான்கு கால்களா? அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா? அந்த பெண்ணு க்கு தண்டனை தரவேண்டுமா? வேண்டாமா?
## வாட்ஸ் அப் பில் பரவி வந்த
குட்டிக் கதை .

20 comments :

 1. ஊர் இன்று சிறிக்கிறது இதை சரி செய்யா விட்டால் உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கும் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. 100க்கு பத்து பேர்களான நல்லவர்களை 90 பேர்களான கெட்டவர்கள் பார்த்து சிரிக்கிறார்கள்..இப்படித்தான் தெரிகிறது நண்பரே.......

   Delete
 2. முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று சொல்லி திரியும் படித்த கோமாளிகளும் உள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. படித்த காரியக் கோமாளிகள் நண்பரே....!!

   Delete
 3. உலகம் முழுக்க முயலுக்கு நாலு கால்கள்தான். எங்க தமிழ்நாட்டு முயல்களுக்கு மட்டும் இப்போ மூணு காலுதான். அதெல்லாம் தனிக் கணக்கு!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. மூத்த குடி என்பதால் அது தனி கணக்காக்கிவிட முடியும் நண்பரே....

   Delete
  2. நீங்க இருவரும் சொன்னது சரியே.
   எங்க தமிழ்நாட்டு முயல்களுக்கு மட்டும் இப்போ மூணு காலுதான்.
   மூத்த குடி என்பதால் அது தனி கணக்காக்கிவிட முடியும் நண்பரே....

   இதை மூத்த குடியை சேர்ந்த நண்பர்களுக்கு அவங்களும் படிச்சு பெருமை கொள்ளட்டுமே என்றுஅனுப்பிவைத்துள்ளேன்.நன்றி இருவருக்கும்.

   Delete
  3. நன்றி!! தங்களுக்கும்.......

   Delete
 4. 3 / 4...? சந்தேகம் வந்து விட்டது... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம் வந்துவிட்டால்....சந்தேகத்தை உடனே தீர்த்துவிடவேண்டும்...

   Delete
 5. எல்லாம் சரி, தாங்கள் சொல்லுங்கள் முயலுக்கு எத்தனைக் கால்கள்.எங்க வாத்தியார் நாட்டாமை மாதிரி 2 என்றார். 3 இல்லை. சரியா? என்ன குழப்பமா? இதைத் தான் நாங்க எதிர்பார்த்தோம்.
  இப்ப பாருங்க கணக்கு சரியா வரும்.

  ReplyDelete
  Replies
  1. 2யைம் 3யைம் கூட்டினால் 5 வருகிறது. பெருக்கினால்6 வருகிறது. கழித்தால் 1 வருகிறது..இதைத்தானா எதிர்பார்த்தீர்கள். பேஷ் பேஷ் கணக்கு நன்றாக இருக்கிறது.

   Delete
  2. கழிக்க முடியுமா வலிப்போக்கரே,

   Delete
  3. “பழையன கழிதல்” என்ற ஒரு சொல் வழக்கு இருக்கிறதே நண்பரே..

   Delete
 6. நான் நினைக்கிறேன் நொண்டி முயலுக்கு 3 ¼ தானே அப்படீனாக்கா ? கணக்கு சரிதானே இதைப்போயி பெரிசா எடுத்துக்கிட்டு....

  ReplyDelete
  Replies
  1. உங்க கணக்குபடி பார்த்தால் நொண்டி முயல் ஓடக்கூடாதே... ஆனால்.. நடப்பு நொண்டி முயல் ஓட்டமா..ஓடுதே... நண்பரே...

   Delete

 7. பெரிய மனிதரின் தீர்ப்பை
  மாத்தி சொன்ன ஊர் நாட்டாமை
  கொடுத்த தீர்ப்பு - பலரை
  சிந்திக்க வைப்பதாக
  பிந்திக் கிடைத்த செய்திகள்
  தெரிவிக்கின்றன...

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே பிந்திதானே தெரியவரும் நண்பரே....

   Delete
 8. முயலுக்கு மூணு கால்னா நம்புற முட்டாள்களும் இருக்கிறார்களே :)

  ReplyDelete
  Replies
  1. முட்டாள்களின் தேசம் என்பது சரியாகத்தான் இருக்கிறது

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com