வியாழன் 28 2015

அராஜகத்துக்கு மறுபெயர் ஜனநாயகம்

படம்-மகஇக..


வீதி வழி போய்க்கொண்டு இருந்த பேனா கட்சிக்காரர் ஒருவர். போகும் வழியில் தன் நண்பரும் போலிகளின் ஒன்றான இடது கட்சியின் தோழரான ஒருவர் கொடியுடன் தனியாக நிற்பதை பார்த்துவிட்டு. அவரை நோக்கி வந்தார்.

இடது கட்சியின் கொடியுடன் நின்றவரும் தன் நண்பர் தன்னை நோக்கி வருவதைக் கண்டு முகம் மலர்ந்து.

“ என்னது இந்தப் பக்கம்” என்றார்.

அவரும், பதிலுக்கு.“ நீங்க உங்க கட்சி கொடியுடன் தனியாக நிற்பதைப் பார்த்து விட்டு போகலாம் என்று இந்தப் பக்கம் வந்தேன் ” என்றார்

“ நண்பர்க்கு இன்னும் நக்கல் அடிக்கிற பழக்கம் விட்டுப்போகவில்லை போலிருக்கு ” என்றார்.

தாங்களும், வெளிநாட்டுக்காரனிடம்  கேட்க வேண்டிய கேள்வியை உள்நாட்டு காரனிடம் கேட்கும் பழக்கம் இன்னும் விட்டுப் போகவில்லை  போலிருக்கு” என்றார்.

அய்யா சாமி... உங்களிடம் வாய் கொடுக்க முடியாது சாமி” என்றுவிட்டு சிரித்துக் கொண்டார்

சில நிமிடங்கள். தங்கள் தொழில், குடும்பம், போன்ற விபரங்களை பரிமாறிக் கொண்டுவிட்டு..மீண்டும் நடப்பு விசயத்துக்கு வந்தனர்.

நண்பர் மட்டும் கொடியுடன் நிற்பதைக் கண்டு, மற்றவர்கள் யாரும் குறித்த நேரத்துக்கு வருவதில்லையா...? என்று கேட்டார் பேனா கட்சிக்காரர்

அதை ஏன்? கேட்க்குறீங்க.... பத்து மணிக்கு கூட்டம் என்று முடிவு செய்தால்..கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு, மணி பதினொன்னாவது  இப்ப வரைக்கும் ஒருத்தரும் வரவில்லை..என்பதிலிருந்து..  நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்றார்.

அப்போ..உங்க கட்சியில்  ஜனநாயகம் பூத்து குலுங்குதாக்கும்” என்றார்.

உங்க“பேனா கட்சியில் ஜனநாயகம்  எப்படி  பூக்குது..??

உங்க..கட்சியில இருக்கிற மாதிரி...இங்க பூத்து குலுங்க வில்லை... பத்து மணி என்று முடிவு செய்யப்பட்டால்... பத்தரை.. முக்கால் மணிக்கெல்லாம் ஒவ்வொருத்தாரா வந்து சேர்ந்திடுவாங்க  ” 

 இக்கரைக்கு அக்கரை பச்சைதான் போலிருக்கிறது..என்றார்.


அந்த கரை பச்சை எல்லாம் எனக்கு தெரியாதுங்க..... குறிப்பிட்ட நேரத்துக்கு வராததும் ஒரு அராஜகம்தான்  என்று தெரிவித்து விட்டு விடை பெற்றார் பேனா கட்சிக்காரர்.

18 கருத்துகள்:


  1. பேனா கட்சிக்கும்
    பேனர் கட்சிக்கும்
    உரையாடல் காட்சி கொடிகட்டி பறக்குது!
    பதிவில் பளிச்சென்று தெரிகிறது!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம +1

    பதிலளிநீக்கு

  2. பேனா கட்சிக்கும்
    பேனர் கட்சிக்கும்
    உரையாடல் காட்சி கொடிகட்டி பறக்குது!
    பதிவில் பளிச்சென்று தெரிகிறது!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம +1

    பதிலளிநீக்கு
  3. சந்தேகமே இல்லை... மிகப் பெரிய அராஜகம் தான்...!

    பதிலளிநீக்கு
  4. குறித்த நேரத்தில் எதுவும் நடப்பதில்லை என்பதை விளக்கும் சிறுகதை!
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. அருமையான கருத்து
    வேறு எங்கேயோ இடிப்பது போல இருகிறதே ..

    பதிலளிநீக்கு
  6. குறித்த நேரத்தில் பதிவில் வந்து கருத்து சொல்லாவிட்டால் அராஜகம் தான் போங்க, நமக்கு தெரிந்தது இது தான் வலிப்போக்கரே, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அராஜகம் எதுவென்று புரிந்து கொண்டதற்கு நன்றி!!!

      நீக்கு
    2. தங்கள் பதிவின் வழி புரிந்துக்கொண்ட அராஜகம்.

      நீக்கு

  7. அராஜகத்துக்கு மறுபெயர் ஜனநாயகம்
    இல்லை
    ஜனநாயகத்திற்கு மறுபெயர் அராஜகம்
    தீர்ப்பு
    ஆண்டவன் கையில்...

    பதிலளிநீக்கு
  8. நல்லது..இப்படியும் மாத்தி போட்டுக்கலாம்... ஆண்டவன் பெயரால்...

    பதிலளிநீக்கு
  9. தாமதம் ஊழலை உருவாக்கும் என்று கொள்கை முழக்கம் போடத்தான் இந்த கூட்டமா :)

    பதிலளிநீக்கு
  10. சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...