பக்கங்கள்

Friday, June 05, 2015

மூனு பட்டை போட்டு இந்(து)தீயர் என்று பெருமிதம் கொள்வோம்..

படம்- www.dinakaran.com

ஒம்பாடு தேவலை தோழர்
ஓட்டும் போடுவதில்லை
விரல் அடையாளமும் பெருவதில்லை
என்றார் ஓட்டு கேட்கும் கட்சியை
சேர்ந்த நண்பர் ஒருவர்..

என்ன வி்சயம் என்று
தோழர் கேட்டபோது
செய்தி ஏட்டில் வந்த
விபரத்தை சொன்னார்.

தேர்தலில் கள்ள ஓட்டு
போடுவோரை தடுப்பதற்கு
வாக்களித்தப் பின் நகமும்
சதையும் சேரும் இடத்தில்
இடது பெருவிரலில் அழியா
மை வைக்கப் படுகிறது. அந்த
அழியா மை ஓட்டு போட்ட
சிறிது  நேரத்தில் அழிந்து
விடுகிறதாம்.... இதைத் தடுக்க
இடது ஆட்காட்டி விரலில்
தொடங்கி விரலின் முதல்
மடிப்பு வரை அழியா மை வைக்க
ஓட்டுக்கு பணம் கொடுக்கும்
வல்லவர்களை அந்த நல்லவர்களை
வாழ்த்தி வழியனுப்பி வைத்துவிட்டு

ஓட்டுக்கு காசு வாங்கி
ஓட்டு போடும் வறியவர்களை
மிரட்டும் தேர்தல் ஆணையத்துறை
உத்தரவாம் தோழரே என்றார்

அது கேட்ட இன்னொரு நண்பர்
சே...அவ்வளோ நீளத்துக்கு மை
வைப்பது ரெம்பவும் ரிஸ்க்கான
வேலை.. வேண்டுமென்றால்
ஓட்டு போட்டவர்களின்  நெற்றியில்
மூனு பட்டையை போட்டு விட்டால்
முகம் பார்த்தவுடன் இவர் ஓட்டு
போட்டவர் என்றும் கள்ள ஓட்டு
போட முடியாதவர்  இவர் இந்திய
நாட்டு இந்(து)தீயர் என்றும் பெருமை
பட்டுக் கொள்ளலாம் அல்லவா....என்றார்.


.

22 comments :

 1. ஹா...ஹா ஒட்டு போடுறவங்க மூஞ்சியில திருப்பதி கோவிந்தா நாமம் போட்டுடலாம்

  ReplyDelete
  Replies
  1. பட்டையா..நாமம்மா ....என்று ஓட்டு போடுபவர்களின் விருப்பத்தினைக் கேட்டு போடலாம்..

   Delete
 2. ஓட்டுப்போடும் ஒவ்வொரு முறையும் நெற்றியில் பட்டைதானே!

  ReplyDelete
  Replies
  1. இந்த பட்டையால் அணைவருக்கும் தெரியுமே..அய்யா.....

   Delete
 3. ஏன் அப்படியே மொட்டையும் போட்டா?,,,,,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. ம்.ம்..இப்படியும் செய்யலாம்தாம்.... ஆனால் பெண்கள்...?????

   Delete
  2. ஆனால் பெண்களுக்கு?,,,,,,,,,,,,
   அய்யோடா, இப்படி வேற எங்களை மதிக்கிறீங்களா?
   நன்றி.

   Delete
 4. Replies
  1. யோசனை சொல்வது மட்டும்தான்.....

   Delete
 5. ஒரு முறை யானைக்கு இட வேண்டியது ,வடகலை நாமமா தென் கலை நாமமா என்று தலைபோகும் பிரச்சினை வெடித்ததாம் !ஆனால் ,மனுஷன் காசை வாங்கிகிட்டு எந்த நாமத்தையும் போட்டுக் கொள்ள தயாராய் இருக்கிறானே :)

  ReplyDelete
  Replies
  1. அதுக்குத்தான்திரும்பவும் ஓட்டு போடாமல் இருப்பதற்குத்தான் மூனு பட்டை யோசனை....

   Delete
 6. Replies
  1. ஏதோ நம்மலால முடிந்த தொண்டு.....

   Delete
 7. தேர்தலுக்கு மறுநாள் நாடு முழுக்க நெற்றியில் பட்டை. எப்படி இருக்கும் நினைக்கும் போது ஐந்து வருட பலன்களும் கிடைத்துவிடுகிறது.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. பலன் இல்லாமால்“ இருக்க கூடாது என்பதற்குத்தான் இந்த யோசனை.....

   Delete
 8. தோழரே!
  மூன்று போட்டால் ஓட்டு போட வில்லை என்று அர்த்தம் என்பது உமக்கு தெரியாதாக்கும்!
  எட்டு போட்டல் ஓ கே !
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. இனி மூன்று பட்டை போட்டால்.. ஏற்கனவே ஓட்டு போட்டுவிட்டார் என்று முடிவு நண்பரே

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com