பக்கங்கள்

Saturday, February 06, 2016

பாம்பைக் கண்டவுடன் பதறி அடித்து....

shutdown-tasmac-ambur-bus-stand
படம்- வினவு.

நண்பா...கேள்

ஒன்னும் ஒன்னும்
இரண்டு என்று
சுலபமாக கண்க்கீடு
செய்யலாம் நண்பா..

ஆனால்...

டாஸ்மாக் போதையால்
சீரழிந்த  குடும்பத்தை
கணக்கிட  முடியாது

கணவனை இழந்த
விதவைகளின் துயரத்தை
சொல்லிவிட முடியாது

டாஸ்மாக்கால் விபத்தில்
உயிர் இழந்தவர்களை
பட்டியலிட  முடியாது

பாம்பைக் கண்டவுடன்
பதறி அடித்து
உயிர்.. தப்ப
பாம்பை அடித்து
கொல்வதைப் போல்

டாஸ்மாக்கை மூடினால்
அழிவிலிருந்து மீண்டு
வாழ முடியும்

வா..நண்பா..
வா  மூடு
டாஸ்மாக்கை சிறப்பு
மநாட்டுக்கு  வா
நண்பா வா.....

14 comments :

 1. உண்மையான கருத்து இதை கண்டிப்பாக தடுக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அதை தடுக்கும் முகமாகத்தான் .“.மூடு டாஸ்மாககை சிறப்பு மாநாடு”...நண்பரே

   Delete
 2. முடியுமா வலிப்போக்கரே,, நல்ல சிந்தனைப் பகிர்வு,,

  ReplyDelete
  Replies
  1. முடியும் என்பதால்தான்.. நண்பரே..“மூடு டாஸ்மாககை சிறப்பு மாநாடு”

   Delete
 3. அன்று ,காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாமா :)

  ReplyDelete
  Replies
  1. அன்று சரக்கடித்து வீதியில் வீழந்து கிடக்க வேண்டாமே ......

   Delete
 4. மா நாடு சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல்ல கருத்து!

  ReplyDelete
 6. மாநாட்டுக்கு வரமுடியா விட்டாலும் போதையை எதிர்க்கும் பாதைக்கு ஆதரவு தருவோம்.

  ReplyDelete
 7. மாநாட்டிற்கு வருவது கடினம் ஆனால் டாஸ்மாக்கிற்கு எதிராக எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு....

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!