திங்கள் 14 2016

படுக்க..ஒரு இடம் தேடி......

படம-m.maalaimalar.com



எந்த மாவட்டம், எந்த ஊர், சொந்த பந்தம்  என எதுவும் எவரும் அவரிடம் கேட்டதில்லை. அவரும்  எவரிடமும் சொன்னதில்லை.ஒரு வேளை அவர் இந்த ஊர் என்று  நிணைத்து பார்ப்பதற்குக்கூட வழியில்லாமல் மறந்துவிட்டார்.

வயது முதிர்ந்த வயதில் யாருமற்ற அனாதை என்ற அடையாளத்துடன்தான் தமிழகத்தின் தலைநகரில் தன் வாழ்நாளை நகர்த்திக் கொண்டு வந்தார்.

அந்த தெருவில் உள்ள ஒரு  பலசரக்கு கடையின் வாசலில்தான்  இரவில் படுத்துக் கொள்வார். தஞ்சம் கொடுத்தற்க்கு பிரதிபலனாக  பகலில் அந்தக் கடைக்காரர் சொல்லும் வேலைகளை செய்து கொண்டு அவர்கள் கொடுக்கும் கூலியில் வயிற்றை நிரப்பிக் கொண்டு வந்தார். நோய் நொடி என்ற பிரச்சினை இல்லாமல் அவருடைய வண்டி ஓடிக் கொண்டு இருந்த வேளை..யில்..


நகரமே  மழையில்  ஒரு வாரமாக தத்தளித்துக் கொண்டு இருந்தது...ரோடுகள். ரோட்டில் உள்ள பள்ளங்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தாலும்.. யாரும் அதிக சிரத்தை எடுத்து முடங்கி விடாமல் இயங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

வழக்கம்போல் பலசரக்கு கடையின் வேலை நேரம் முடிந்து கடை அடைத்தபின் வழக்கமாக படுத்துறங்கும் இடத்திற்கு கடைக்காரரிடம் கேட்டு பெற்ற பழைய சாக்கை ஒன்றில் மழையில் ஈரமாகிப் போன இடத்தை துடைத்துவிட்டு , மற்றொரு சாக்கை விரித்து அசதியில் சிறிது நேரம் கண்ணயர்ந்தார்.முதியவர்

திடிரென்று கூக்குரலும் ஓலமும் சத்தமுமாய் அவரின் காதுக்கு கேட்டது முழித்து பார்த்தவர்..  வெகு வேகமாய் ஒன்று தன்னை  நோக்கிஆர்ப்பரித்து  வருவதைக் கண்டார். பதறியடித்து எழுந்திருக்க அவரால் முடியவில்லை...

ஆர்பாரித்து காட்டாற்று வெள்ளமாய் வந்த தண்ணீர் முதியவரை முழ்கடித்தது.. பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ளம்  சிறியவ்ர் பெரியவர் வசதியானவர் வசதி இல்லாதவர் என்ற  எந்தவிதமான  அந்தஸ்தும் பார்க்காமல் எல்லார் வீட்டிலும் புகுந்து  எலலோரையும் பயமுறுத்தி  அலைகழித்தது.

பெரு வெள்ளத்தில் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டி அந்தத் தெருவில் உள்ள மக்கள் எல்லோரும் பெரும் குரலெடுத்து பெரு வெள்ளத்திற்கு எதிராக அணி கோர்த்து பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர்.

தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முடியாமல் மூர்ச்சையாகமல் தண்ணீருக்குள் போராடிக் கொண்டு இருந்த முதியவரை ஒரு கை பிடித்து தூக்கி பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு இழுத்துச் சென்றது..இரவு முழுவதும் எங்கும் கூக்குரல்.. அழுகை..பகலிலும் தொடர்கதையாகத்தான் தொடர்ந்தது.

விடிந்த பொழுதுதான்   செம்பரபாக்கம் ஏரியில் இருந்து பெருவெள்ளம் வந்திருக்கிறது என்ற முழுவிபரம் அனைவருக்கும்  தெரிந்தது..மாடி வீட்டு பணக்காரனும், குடிசை வீட்டு ஏழையும் தங்க..குந்த வழியில்லாம்ல் ஒரு சேர அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர்.வெட்ட வெளியில் மழை தூறல்களில் நணைந்தபடி தவித்துக் கொண்டு இருந்தனர்.

சிலரின் முன்னெடுத்த போராட்டத்தால் மாநகராட்சி பள்ளிகளில் எல்லோரும் தங்கவைக்கப்பட்டனர். மழையும் நிற்கவில்லை, வெள்ளமும் வடியாததால் எல்லோரும் வாடிய முகத்துடனே உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி. குளிரை தடுக்க வழியின்றி வாடிக் கொண்டு இருந்தனர்

பெருவெள்ளத்தில்  இருந்து காப்பாற்றப்பட்ட முதியவர்  மூச்சுதிணறாலும். ஈரத்தில் நணைந்ததால் ஏற்பட்ட குளிராலும் பாதிக்கப்பட்டார். மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த அந்தப் பள்ளிக் கூட்டத்தில படுக்க ஒரு இடம் தேடி தத்தி தத்திஅலைந்தார்.. அப்படி அலைந்தும் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருந்த அந்தப் பள்ளியில் சிறு இடம் கிடைத்தது.

அந்த இடத்துக்கு சென்று கால்களை நீட்டுவதற்குக்கூட வழியில்லாமல் முதுகை சுவரில் சாய்ந்து  நெஞ்சோடு கால்களை மடித்து வைத்த வண்ணம். தனது இறுதி மூச்சைஇழந்து கொண்டு இருந்தார்.

கூடியிருந்த மக்கள்.கூட்டம் எல்லோரும் பெரு வெள்ள பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருந்ததால்.. முதியவர் தன் மூச்சை நிறுத்தியது தெரியாமல் போய்விட்டது அவர்களுக்கு.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மனிதாபமுள்ள மனிதர்கள் உணவுப் பொட்டலம். போர்வைகள் கொடுத்துக் கொண்டு வந்தபோதுதான். அனாதையான முதியவர்..கால்களைகூட நீட்டவழியில்லாமல். அந்த முட்டின்மேல் தலை கவிழ்ந்து   பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

மனம் இருந்தும் உதவ முடியாமல் தவித்து  நின்ற மக்களுக்கு. ஆபத்துக்கு உதவுபவர்களான நகரச்சுத்தி தொழிலாளர்கள்தான் அந்த முதிய அனாதை பிணத்தின்  மடங்கி கிடந்த கால்களை நிீட்டிக்கச் செய்து தூக்கிச் சென்றனர்..

8 கருத்துகள்:

  1. படுக்க ஒரு இடம் தேடி
    மனதை கனக்க வைத்ததே....
    யாருமில்லாத இவர்
    அனாதை இல்லை....
    அன்பில்லாதவர் தான்
    இங்கு அனாதை....

    பதிலளிநீக்கு
  2. வேதனையான விடயம் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

    பதிலளிநீக்கு
  3. உள்ளத்தைத் தொடும் அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  4. படுக்க ஒரு இடம் தேடி,, மனம் கனக்கும் பதிவு,,,

    பதிலளிநீக்கு
  5. இப்படி எத்தனை உயிர்களைப் பலி கொண்டதோ ,அந்த 'செயற்கை 'வெள்ளம் ?

    பதிலளிநீக்கு
  6. வேதனை வேதனை...கொடுமை..மனதை என்னவே செய்கிறது இதை வாசித்ததும்..

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....