கிளாரா ஜெட்கின் |
மார்ச்8 ஆம் தேதி மகளிர்தினத்தை நம்மூர் தொலைக்காட்சிகளும். வலது, இடது போலிகளும் நடத்துகின்ற பெண்கள் அமைப்புகளும் பெண்களை கவுரவிக்கிற தினமாக மாற்றி விட்டனர்.
இதன் விளைவு... மே தினத்தை கொண்டாட்ட தினமாக மாற்றி சீரழித்தது போல பெண்களின் சமஉரிமைக்கான தினமான மார்ச் 8யும் கொண்டாட்ட தினமாக மாற்றிவிட்டனர்.
அன்றைய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆண்களுக்கு நிகராக உழைப்பில் ஈடுபட்ட போதிலும், ஆண்களுக்கு நிகரான உரிமைகள் வழங்கப்படவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகம் நிலை நிறுத்திய போதிலும் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.
கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கையில் ஆசான்கள் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்சொல்லுவதைப்போல பெண்கள் ஒரு உற்பத்தி கருவியாகத்தான் பார்த்தது முதலாளித்துவம்.
இதனை எதிர்த்து 1857 முதல் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்கள் போராடி வந்திருந்த போதிலும்அந்தப் போராட்டங்களில் புரட்சிகர அரசியல் உள்ளடக்கமோ, அமைப்பு வடிவமோ இல்லாமல் தன்னெழிச்சியானவையாகவே இருந்தது.
இந்தச் சூழலில் கிளாரா ஜெட்கின் போன்ற கம்யூனிஸ்டுகளின் மு்ன் முயற்சியால் 1910 ஆம் ஆண்டில் ஜெர்மன்நாட்டின் டீகான்ஹெகன் நகரில் நடைபெற்ற “சர்வேதேச பெண்கள் மாநாடு” பெண்களுக்கு அனைத்து நடவடிக்கைளிலும் சம உரிமை வேண்டும் என பிரகடனம் செய்தது.
சம உரிமை பிரகடனம் செய்து நூற்றாண்டை கடந்து விட்டநிலையிலும் சர்வதேச மகளிர் மாநாடு அறிவித்த ஆண்களுக்கு நிகரான சம உரிமை இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
முன்னேறிய நாடுகளான ஏகாதிபத்திய நாடுகள் துவங்கி இன்னமும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக பம்மாத்து செய்து வரும் இந்தியாவரையிலும் இதுதான் நிலைமை.
பெண்கள் மீதான ஆணாதிக்க அடக்குமுறை, பாலியல் வன்கொடுமை, ஈவு இரக்கமின்றி சுரண்டப்படுவதோ நின்றபடில்லை.
எத்தனை எத்தனைஅடக்கு முறைகள். அவமானங்கள். வன்முறைகள் போன்றவற்றை சந்தித்து வருகின்ற பெண்கள்.. மன நிம்மதிக்காக ஆன்மீகத்தில் புகலிடம் தேடினால் , அங்கும் அவர்களுக்கு அவமானம்தான் கிடைக்கிறது.
சபரிமலை கோவிலுக்கு .. மாதவிலக்கு அடைகின்ற பெண்கள் வந்தால் பிரம்மச்சாரி ஐயப்பன் கோவில் தீட்டாகிவிடும் என்று சபரிமலை நிர்வாகம் ஆணாதிக்க திமிரை காட்டுகிறது.
முஸ்லீம் மதத்திலோ.. பர்தா எனும் கருப்பு உடையில் காலம் முழுவதும் அடைத்து வைக்கிறது.
கிறிஸ்துவ மத்திலோ..பெண்கள் ஒரு போதும் மத்த்தலைவராக முடியாது, கன்னியாஸ்திரிகளாக மாறினால் மட்டுமே தேவனுக்கு சேவை செய்ய முடியும். திருமணமான பெண்களுக்கு அந்தத் தகுதியும் கிடையாது.
இப்படி இந்து மதம் மட்டுமல்ல.. உலகில் உள்ள எல்லா மதங்களும் பெண்களை இழிவாகவும், இரண்டாந்தர குடிகளாகவும்தான் நடத்தி வருகின்றன.
இந்த அவலத்தையும் அவமானத்தையும் அடக்குமுறையையும் துடைத்தெறிய வேண்டுமென்றால்... பெண்ணடிமைத்தனத்தில் முழ்கி கிடப்பதோ,நவநாகரிக உடை, நகைகள், கை நிறைய ஊதியம் என்று மனம் நிறைவடைவதோ பெண்களுடைய சம உரிமைகள் கோரிக்ககைகள் நிறைவேறாது.
ஆணுக்கு பெண் நிகர் என்கிற சமத்துவ பண்பாட்டை படைக்க சமூக மாற்றித்திற்க்கான பயணத்தில் தம்மை இணைத்துக்கொள்வதின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்
மகளிர் தின சிந்தனைகள்;- |
பதிவின் அனைத்து கருத்துகளும் உண்மையான விடயமே நண்பரே
பதிலளிநீக்குகொடுமைக் குறைவதாகத் தெரியவில்லை ,கொண்டாடுபவர்கள் அதைக் கண்டு கொள்வதும் இல்லை !அன்று ,அனைவரும் சீருடைப் போல் சேலைக் கட்டிக் கொண்டால் போதும் என நினைக்கிறார்கள் !
பதிலளிநீக்குஉண்மைகளை நேர்மையுடன் எடுத்து சொல்லும் சிறந்த பதிவு.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குவிரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குத ம 4
சுருக்கமாக எனினும்
பதிலளிநீக்குயதார்த்தமாக அருமையாக
ஆணித்தரமாக...
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பதிவும் பதிவின் கருத்தும் அருமை நண்பரே...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு வலிப்போக்கரே,,
பதிலளிநீக்குநல்லதகவல்கள் நண்பரே கருத்துகள் உட்பட..
பதிலளிநீக்கு