ஞாயிறு 03 2016

சூப்பர் ஸ்டார்...என்ன கொக்கா....சூ..என்றவுடன் பறந்து போக...

மனித கடவுளின்...   மனி்த பக்தனிடம்.......

அரசர்களுக்கெல்லாம் அரசர்களான நீதியரசரிடம் இருந்து  மனிதக் கடவுளுக்கு ஒரு ஓலை வந்திருக்காமே.....?  என்ன விசயம் என்று மனிதக் கடவுளின் ரசிகரிடம் .. கேட்டபோது  ..

பக்தர் சொன்னது...

பெங்களுருச் சேர்ந்த பொதுநல வாதி ஒருவன். மனிதக் கடவுளின்  “வீர அவதாரங்கள்” திரைக்கு வரும் வேளைகளில் பக்தர்கள், ரசிகமாமனிகள் மனிதக் கடவுளின் கட்அவுட்டுக்கு..


கோமாதாவின் பாலைக் கொண்டு பாலாபிசேகம் செய்வதை கண்டு பொறாமையால் பொறுக்க மாட்டாமல்... மனிதக் கடவுளின் மீது பொது நல வழக்கு என்ற பெயரிலே வழக்கு ஒன்றைத் தொடுத்தான்

அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதியரசர் . மனிதக் கடவுள் பதில் அளிக்க ஓலை அனுப்பி உள்ளார்.

மனிதக் கடவுளான சூப்பர் ஸ்டார் என்ன கொக்கா...? சூ...என்றதும் பறந்து போக..  ஓலை அவர் கைக்க்கு கிடைத்ததும் படப்பிடிப்பின் இடைவேளையின் போது தக்க பதிலை கொடுப்பார்.

“கோயில் கற்சிலைகளில் மேல் பால் ஊற்றும்போதுமட்டும் அந்தக் கோமாதாவின் பால் வீணாகுவது தெரியவில்லையா  ? என்று மனிதக் கடவுள் பதில் சொல்வார்”என்று  நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது...

எதுக்கு.!. எங்க.?...எப்படி?பதில் தரனும்முன்னு மனிதக் கடவுளுக்கு தெரியும் என்றார்

மனிதக் கடவுளின் மனித பக்தரிடம் மேற்கொண்டு எதுவும் என்னால் பேச முடியவில்லை...


www.tamilcinetalk.com




7 கருத்துகள்:

  1. மனித பக்தர்களின் ப்ளெக்ஸ் பேனரில் ...மநாகர ,மவாட்ட என்று தவறுகள் ..இதுக்கு பாலாபிஷேகம் இரு கேடா :)

    பதிலளிநீக்கு
  2. என்றாவது திருந்துமா இந்தக்கூட்டம் ?

    பதிலளிநீக்கு
  3. இந்த தனி மனித ஆராதனைகள் சீக்கிரமே மாறவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கலாச்சாரத்தை மாற்றமுடியுமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
  5. சாணி கரைத்து அபிஷேகம்
    செய்தாலும் திருந்தமாட்டானுங்க....
    வீட்டில் தாயோ, தந்தையோ
    படுக்கையில் பரிதவித்தாலும்...
    மானங்கெட்டவனுங்க இந்த
    பரதேசிக்கு பாலாபிஷேகம்
    செய்றானுங்க...இதெல்லாம் எங்க
    வெளங்க போகுது....

    பதிலளிநீக்கு
  6. பசியால் துடிக்கும் பச்சிளங்குழந்தைக்கு ஊற்றுவதை கட்-அவுட்டில் ஊற்றுபவர்கள்..... என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....