பக்கங்கள்

Tuesday, April 05, 2016

உச்ச கட்ட பாதுகாப்பு என்றால் என்ன....???

“அய்யா........”

“.......................”

“ அய்யா........”

“என்னய்யா.....”

“ ஒரு சந்தேகம்......”

“என்ன   சந்தேகம்மா.....”

“ ஆமங்கய்யா.......”

“ என்மேலேயா...... இல்ல உம் பொண்டாட்டி மேலேயா்....!!!!”

“ரெண்டு பேரு மேலேயும் இல்லங்கய்யா.....”

“ இல்லீயா...... அப்ப என்ன சந்தேகம்...”

“ அது..... வந்துங்கய்யா.......”

“ அதான் வந்திட்டிங்கள....... சொல்லுங்கய்யா...”

“ அது வேற ஒன்னுமில்லங்கய்யா..... உச்ச கட்ட பாதுகாப்பன்னு  பேப்பர்ல போட்டு இருக்காங்காய்யா..... அப்படின்னா என்னங்கய்யா....????“

“ ஓ.........ஓ.... அதுவாங்களய்யா......”

“ ஆமங்கய்யா..........”

“ அது வந்துங்கய்யா.........ம்...ம்....ம்....... அதாவதுங்கய்யா.......நம்ம தெரு இல்ல... நம்ம தெரு வேணாம்...... ”     ” அய்யா..... இந்த மெயின் ரோட்ட உதாரணமாக எடுத்துக்குங்க.......”

“ சரிங்கய்யா....”

“இந்த மெயின் ரோட்டுல இருக்கிற சாராயக் கடைக்கு பாதுகாப்பாக.... ரெண்டு போலீசோ..மூணு போலீசொ நிப்பாட்டி இருக்கிறத பாத்து இருக்கீங்களா...அய்யா....”

“ஆங்.....ஆமாங்கய்யா......“ மக்கள் அதிகாரம்“ அய்யாவுக.... இந்த சாராயக்கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்தினப்போ....ஒரு பெரிய போலீசு பட்டாளத்தையே நிப்பாட்டி வச்சத பாத்து இருக்கேன்ய்யா...”

“ ஆகா...நீங்க....பாத்தது வசதியாப் போச்சுங்கய்யா....”

“............................................”

“வேற..ஒன்னுமில்லங்கய்யா.....நீங்க பாத்திங்களே  ....போலீசு பட்டாளம்  அந்த பட்டாளத்தோடு... இன்னும் கூடுதலாக நூறு போலீச சேத்து பத்தடிக்கு ஒருத்தர நிக்க வச்சு... அவர்கள் கையில் உருட்டு கட்டையும் துப்பாக்கியையும் கொடுத்து ரெண்டு புகைக்குண்டு லாரி வண்டிகளை நிப்பாட்டி   ஒரு.. ஈ... காக்கா கூட இந்த பக்கம்  ..வராம.. தப்பியும் .பறக்க விடாம.....இந்த மெயின் ரோட்ட பாதுகாப்பதான் அய்யா.... உச்ச கட்ட பாதுகாப்பன்னு சொல்றது....”


“ ..... அப்போ  ஈ..காக்கா.... வந்தா.....”????

“ வந்தா...என்ன...... குண்டடிபட்டு சாக வேண்டியதுதான்....”

“ஆ..............ஆ.....ஆ.... இதுதான் உச்ச கட்ட பாதுகாப்பு என்கிறதுங்களய்யா...”

ஆமாங்கய்யா...., இப்போ...உங்க   ..சந்தேகம் தெளிஞ்சுடுங்களாய்யா....”


“ நல்லா...தெளிஞ்சுடுங்கய்யா........”..

7 comments :

 1. ஆஹா நானும் வெவரமா தெளிஞ்சுகிட்டேன்யா.....

  ReplyDelete
 2. நல்ல விளக்கம்
  மிகவும் இரசித்தேன்
  (குடிகாரர்களுக்குக் கொடுத்த
  பாதுகாப்புதானே )

  ReplyDelete
 3. நயமாய் சொல்கிறீர்கள். நன்றி

  ReplyDelete
 4. 'குடி'மகன்கள் அன்று 'ஒரு நாள் முதல்வன் 'ஆகி விட்டார்கள் :)

  ReplyDelete
 5. ஒஒஒ அப்படியா,,, சரி சரி நல்ல பாதுகாப்பு தான் வலிப்போக்கரே,,

  ReplyDelete
 6. அட போங்க ஐயா நீங்களும் உங்க பாதுகாப்பும்...

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!