பக்கங்கள்

Wednesday, April 06, 2016

தேசபக்தி தனியார் மயம்


படம்-www.4tamilmedia.com

இந்துத்துவா கும்பலுக்கும்
இந்தீய இராணுவ்திற்கும்
 மட்டுமே மொத்தமாய்
இருந்து         வந்த
இந்தீய   தேசபக்தி
தனியார் மயமாகிறது


நாட்டை ஆளும்
தேசபக்தி அரசால்
தேசபக்தி இராணுவத்தில்
தனியார் முதலீடுகளுக்கு
கதவு  திறக்கப்பட்டு
விட்ட படியால்..


பெரு நிறுவணங்கள்
தங்கள் பாதுகாப்புக்கு
இராணுவ  படையை
தொடங்கி விட்டது

முதல் கட்டமாக
இந்தீயாவின் பெரும்
பணக்காரர் முகேஷ்
அம்பானி பதினாறு
ஆயிரம் முன்னாள்
இராணுவ வீரர்களை
கொண்டு ஒரு
படையை உருவாக்கிவிட்டார்.


இனி, பெரும்
நிறுவணங்கள் தங்கள்
சொத்துக்களை காக்க
பெருக்க தேசபக்தி
இராணுவத்தோடு இணைந்தோ
தனித்தோ சத்தீஸ்கார்
மக்களையும் மட்டுமல்லாமல்
பிறமாநில மக்களையும்
கேட்க நாதியற்ற
காக்கை குருவிகள்
போல்  சுட்டு
வீழ்த்தப்  பட்டு
தீவிர வாதிகளிடமிருந்தும்
பயங்கர வாதிகளிடமிருந்தும்
நாட்டை காப்பாற்றும்
தனியார் மயம்.......


இனி மேல்
எதுக்கு தேர்தல்ல
ஓட்டு போட்டுகிட்டு
அதையும் தனியார்
மய மாக்கிவிட்டால்

தேசபக்தி  இந்தீயாவில்
தேச பக்தி மாதிரி
தேர்தலும் தனியார்
மயமாகி வீறு
 நடைபோடட்டும

7 comments :

 1. அமைதி படை செய்த வேலையை இவர்களும் செய்வார்களோ :)

  ReplyDelete
 2. நல்லது நடக்கட்டும் )))

  ReplyDelete
 3. இந்த திரு நாட்டில் திருடர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு....

  ReplyDelete
 4. நாட்டுப் பற்றும்
  தனியார் கைக்குள் வந்திட்டுதா

  ReplyDelete
 5. அப்படியா வலிப்போக்கன்? நிஜமாகவா? புதியதாய் இருக்கிறதே

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com