வியாழன் 14 2016

எழுபதை தொட்ட அறுபது

 சாராய நாட்டில் வாழும் குடிமக்களுக்கு எந்த பஞ்சம் ஏற்ப்பட்டாலும் சாராயத்துக்கு மட்டும். பஞ்சமே ஏற்பட்டதில்லை. நிணைத்த நேரத்தில் குடிமக்களுக்கு  சாராயம் கிடைத்திட , சாராய நாட்டை ஆளும் சாராய ராணி பஞ்சமில்லாமல் நாட்டை ஆண்டு வந்த நாளில்

ஒருநாள் இரவில்  அறுபது வயதுள்ள குடிமகன் தள்ளாடி தள்ளாடி தன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தது தன் வீட்டுக்கு அருகில் வந்ததும். பக்கத்துவீட்டில் கணவனை இழந்த எழுபது வயது மூதாட்டி தனியாக படுத்திருந்ததை கண்டது. தள்ளாடிச் சென்ற அது.. ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்தது... .. மெதுவா... நடை நடைந்து.. சட்டென்று மூதாட்டியின் வீட்டிற்க்குள் நுழைந்தது.

சாராய ராணி ஆளும் நாட்டில் சாராயத்துக்கு பஞ்சம் இல்லாது இருப்பது போலவே  ..சாராய குடிமகன்களுக்கும் சுயசிந்தனை எதுவும் இல்லாமல் காம சிந்தனை அதிகமாக இருக்கின்றது என்பதற்கு.  பல சான்றுகளில் இதுவும் தான்..

நுழைந்த மறுநிமிடம் அறுபது வயதுள்ள சாராய குடிமகன் தனியாக படுத்திருந்த எழுபது வயதுள்ள மூதாட்டியை பாலியல் பலத்காரம் செய்தது. மூதாட்டி குடிமகனின் பொல்லாத செயலைக் கண்டு  அய்யோ ..குய்யோ என்று அக்கம் பக்கம் கேட்கும் அள்வுக்கு அலறினார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர். தத்தம் வேலைகளை போட்டுவிட்டு மூதாட்டியின் வீட்டை நோக்கி   ஓடி வந்தனர்.அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்தக்குடிமகனுக்கு அப்போது மட்டும் சிந்தனை வந்துவிட்டது போலும்  .பயந்து போய் ஓடி மறைந்து விட்டான்.....

 மூதாட்டியின் புகாரின்படி... சாராயகடை வியாபாரத்தை தங்கு தடையின்றி பாதுகாக்கும் போலீசார்  எழுபதை தொட்ட சாராய ராணியின் அறுபது வயதான குடிமகனை கைது  செய்து விசாரனை செய்து வருகின்றனர்

சாராய பாதுகாப்பபு படையின் விசாரனை சாராய குடிமகனிடம்  எப்படி இருக்கும் ??????

5 கருத்துகள்:

  1. உனக்கெப்படி அந்த நேரத்தில் சிந்தனை தெளிந்தது என்று பெண்டைக் கழட்டி விடுவார்கள் :)

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்க
    சாதாரணவிஷயமாகிவிடுமோ எனப்
    பயமாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. கண்ணையும் அறிவையும் மறைக்கும் போதை..

    பதிலளிநீக்கு
  4. போலீஸைப் பார்த்ததும் போதை தெளிந்து விட்டதோ

    பதிலளிநீக்கு
  5. என்னத்தச் சொல்ல.. நிலைமை அப்படித்தான் இருக்கு..!
    த ம 5

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...