சனி 16 2016

நண்பரின் பஸ் பயண அவஸ்தை.......




நண்பரின் நண்பர் வீட்டு விசேசத்திற்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நண்பரிடமும் என்னை கட்டாயம் அழைத்து வருமாறும் அவருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அந்த நாளில் நண்பர் என்னை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வந்திருந்தார். அவர் வந்த நேரம் எனது செல்போனில் அழைப்பு வந்தது. எடுத்து பேசியவர் நண்பர்.

நான் சாமி கும்பிட்டுவிட்டு நண்பரிடம் வந்தபோது.. நண்பர் விபரத்தை சொன்னார். எனக்கு வேலை கொடுக்கும் கம்பெனிக்கு உடனடியாக வரச் சொல்லியிருந்த்த்தை தெரிவித்தார்.

உடனே, நான் வேலையின் நிலைமையைச் சொல்லி, நண்பரின் விழாவுக்கு அவரை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

நண்பரும் நிலைமையை உணர்ந்து கொண்டு, நண்பரின் விழாவில் கலந்து கொண்டு நான் கலந்து கொள்ளா முடியாத விபரத்தையும் தெரிவித்து பிரிதொரு நேரத்தில் என்னை அழைத்து வருவதாக கூறிவிட்டு நண்பரிடம் விடைபெற்று வந்தார்.

மறுநாள் என்னைச் சந்தித்தபோது.  எல்லா விபரத்தையும் என்னிடம் சொன்னார் அவற்றில் ஒன்று  நண்பர்க்கு பஸ் பயணத்தின் போது ஏற்பபட்ட அவஸ்தை.........

நண்பரிடம் விடைபெற்று பஸ் நிறுத்தத்திற்கு வந்த நண்பர்க்கு சிறுநீர் கழிக்கத் தோன்றியது. ஒதுங்குவதற்கு முயன்றபோது.. பஸ் சில வினாடிகளில் வந்Jவிடும் என்பதால் வந்த சிறு நீரை அடக்கிக் கொண்டார். 

சில நிமிடங்களில் பஸ் வந்த்து. அந்த பஸ்ஸை விட்டால் அடுத்து இரவுதான் என்றார்கள். வந்தது தனியார் விரைவு பஸ் என்பதால் நண்பர் ஒரு மணி நேரத்தில் வீடு சென்று விடலாம் என்ற நிணைப்பில் வந்த சிறு நீரை அடக்கிக் கொண்டு டிரைவர்க்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து வந்தார்.

கால் மணி நேரம்  ஆகியது சிறு நீரை அடக்குவதற்க்கான முயற்சி பலன் அளிக்காத நிலையில் இருக்கையைவிட்டு எழுந்து பஸ்ஸின் கடைசியில் வந்து நின்றுகொண்டு இருந்தார்.

பஸ் விரைவாக செல்லுவதாலும்  பிரேக் போடும்போது ஏற்படும் அசைவாலும் ஆட்டத்தாலும் ஓரளவு சிறு நீரை அடக்க முடியும் என்பதால் நின்று கொண்டார்.

அரைமணி நேரமாகியது.. நண்பர் நிணைத்த மாதிரியே பஸ் விரைவாகத்தான் சென்று கொண்டு இருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர் வீடு வந்து சேர்ந்துவிடலாம்...ஆனால் ..விரைவாகச் செல்லும் பஸ்சின் அசைவாலும் ஆட்டத்தாலும் சிறிது நேரம்தான் தாக்கு பிடிக்க முடிந்த்து.

எந்த நேரத்திலும் தாக்கு பிடிக்க முடியாத நிலையே இருந்தது. பஸ்சில் கூட்டமும் கூடியிருந்தது. அருகில் நின்ற கண்டக்டரின் உதவியாளரிடம் அடுத்த நிறுத்தம் எது என்று கேட்டபோது. அந்த நிறுத்தம் சற்று கடந்து இருந்த்து. உடனே அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று   வண்டியை நிறுத்தச் சொல்லி உடனடியாக இறங்கினார்.

பஸ் நகர்ந்த சிறிது நொடிக்குள் பேண்ட் ஜிப்பை இழுக்க... அது வர மறுக்க அவசரம் அவசரமாக பேண்ட்டையே கழட்ட முயற்சிக்க... இனியும் பொறுக்க முடியாது என்றபடி  நண்பரின் பேண்ட் முழுவதும் நணைந்துவிட்டது. இடையில் நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போனது...

சிறிது நேரம் கழித்து சகஜநிலைக்கு வந்தபின்.. பேண்ட் நணைந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் சுற்றுப் புறத்தை கவனித்த போது  அது மரங்கள் அடர்ந்த காடாக இருப்பது தெரிந்தது.

சற்று பயபீதியடன்.  தூரமாக உள்ள பஸ் நிறுத்த்திற்கு வந்து  சில மணி நேரம் காத்திருந்த பின் வந்த வேறு ஒரு பஸ்ஸில் ஏறி... இரவு வீடு வந்து சேர்ந்தாக கூறினார். நான் உடன் வந்திருந்தால் தான் இந்த அவஸ்தை பட்டு இருக்க மாட்டேன என்றார். .


ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்பதை அனுபவம் மூலமாக தெரிந்து கொண்டீர்கள்.. என்றபோது பொய் கோபம் கொண்டார்.

குறிப்பு...எனது மொழியில் சாமி கும்பிடுவது என்பது காலைக்கடன் என்ற வெளிக்கு போவதை குறிக்கும்

5 கருத்துகள்:

  1. ஹாஹாஹா குறிப்பு முதலில் படித்தபோது எனக்கு குழப்பமாக இருந்தது முடிவில் தெளிவு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  2. நண்பர் நன்றாக 'சாமி கும்பிட்டு' கிளம்பியிருந்தால் இந்த அவஸ்தை ஏற்பட்டிருக்காது :)

    பதிலளிநீக்கு
  3. ஓட்டுநரிடம் சொன்னால் முணுமுணுத்தாலும் நிறுத்தி விட்டு காத்திருந்திருப்பாரே... இது அடிக்கடி பயணங்களில் காணக் கிடைக்கும் காட்சிதான்! எத்தனையோ சர்க்கரை நோயாளிகளும் பயணம் மேற்கொள்வார்களே..

    பதிலளிநீக்கு
  4. நானோ நீரிழிவு நோய்க்காரன்
    எனக்கும் - இப்படித்தான்
    பேரூந்தில் (Bus) இடம்பெற்றது.
    நானும் அடுத்த பேரூந்தில் (Bus) தான்
    பயணிக்க முடிந்தது...
    உண்மையில்
    ஆத்திரத்தை அடக்கினாலும்
    மூத்திரத்தை அடக்க முடியாது தான்!

    பதிலளிநீக்கு
  5. பேருந்தில் இப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைய ஏற்படும். ரயிலில் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்.
    த ம 4

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...