பக்கங்கள்

Friday, September 23, 2016

சேதி தெரியுமா.....????????

நடந்து சென்ற
என்னை எதிரே
வந்தவர் தடுத்தார்
தடுத்தவர் யாரென்று
நான் யோசிப்பதற்குள்
கடையில் உடகார்ந்து
ஒருவரை காட்டி
அவர் உங்களை
அழைத்தார் என்றார்.

கை சைகையால்
வா ..என்று
அழைத்தார்
கடைக்கார அண்ணன்

இருக்கையில் அமரச்
சொன்னவர் ஒரு
சேதி தெரியுமா..?
என்றார் என்ன
சேதி என்று
கேட்ட போது
இன்று பேப்பர்
பார்த்தாயா..என்று..

இல்லை என்று
தலையாட்டிய போது
தொலைக்காட்சி பார்த்தாயா..
என்றார் இல்லை
என்று சொன்ன
பதிலைக் கேட்டு
அப்படி என்னைய்யா
வேலை என்றார்

பிறகு அவரே
அந்தச் சேதியைச்
சொன்னார். நாகராஜனை
19வட்ட செயலராக
நியமித்த அவரோட
அம்மாவுக்கு நள்
இரவில் திடீர்
மூச்சு திணறல்
ஏற்பட்டு அப்பலோ
ஆசுபத்திரியில அவசர
பிரிவில் சேத்து
இருக்காங்க என்றார்.

வண்டியை விட்டிருமா
ஏற்கனவே நாசக்
காடாக இருக்கும்
தமிழ்நாடு இன்னும்
மோசக் காடாக
ஆயிறுமா என்று
 நான் கேட்ட
போது அவர்
சொல்ல முடியாது
எம்ஜியார் கதை
மாதிரி நடந்தாலும்
நடக்கலாம் என்றார்

அப்போ.. அடிமைகள்
கூடி இருப்பது
சோகமாக இருந்தது
உள்ளாச்சிக்கு அல்லாமல்
இதற்க்குத் தானா....
என்றேன் வியப்புடன்.

1 comment :

  1. விடிந்தால் தெரிந்து விடும் ,இது வியப்புக் குறியா ,
    கேள்விக் குறியாவென்று :)

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com