ஞாயிறு 29 2017

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து........

அறிமுகமான அவரை பா்க்கும்போது  எனக்கு கைகால்  நடுங்கியது.. முகம் வீங்கி தலையிலிருந்து வடிந்த ரத்தம் கன்னங்களில் காய்ந்து இருந்தது.. சட்டை வேட்டி கழட்டப்பட்டு அன்றாயரோடு... நிற்க வைக்கப்பட்டு இருந்தார். அவரோடு பலரும் அவரைப்போலவே  கொடுமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

போலீசிடம்... வீட்டுப் பிரச்சினையில் அடி வாங்கி காதின் சவ்வு கிழித்தெறியப்பட்டகாது கேட்காமல் போன அனுபவம்  எனக்கு இருந்ததால்...போலீசின் கொடூரங்கள் தெரிந்திருந்தது.. 

போலீஸ்காரர்கள் அடித்த அடியில் காயம் ஏற்ப்பட்டதோடு... பினையில் வர முடியாதபடி வழக்கும் ஜோடிக்கப்பட்டது.அவர் மீது

உண்மையில் ஜல்லிக்கட்டுக்காக ரயிலை மறித்த நிகழ்வில..அவர்  கலந்து கொள்ளவே இல்லை..  அவருண்டு தான் வேலையுண்டு இருந்தவர்.. இப்போது..ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு ரயிலை மறித்தாக அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   அவர்தன்  நிலையை  பேசும் போதெல்லாம் அடியும் வசவுமு்தான் அவர்க்கு கிடைத்தது.

போலீசுகள் அடித்த அடியால் வீங்கிப்போன உடலோடு.. வலியால் அவதிப்பட்டு இருந்தவருக்கு என்னைக் கண்டதும்  வலிகளை பொறுத்துக் கொண்டு ஒரு செய்தி சொல்ல முயன்றார். அருகிலிருந்த ஒரு போலீசின் கொடூர பார்வையால் தன் பார்வையை  மூடிக் கொண்டார்.... அவர் திரும்பவும் தன்னைப் பார்ப்பார் என்று அவரைப் பார்த்துக் கொண்டு நின்ற போது.. போலீஸ்காரன் ஒருவன்  என்னை வெளியில் போய் நிற்கச் சொன்னான்.

அந்தக் காவல் நிலையத்தில்.... ரயிலை மறித்த இடத்தின் சுற்றி இருந்த வீடுகளில் குடியிருந்தவர்களே அதிகம் இருந்தார்கள்.....ஒருவர் கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்ற சட்டமே... அங்கு செல் அறித்து போய் போலீசின் கால்களில் மிதிபட்டுக் கொண்டு இருந்தது....

வெளியில் நின்று கொண்டு இருந்தபோது.... நான்கைந்து இளைஞர்கள் போலீஸ வண்டியிலிருந்து போலீஸ கூடராத்துக்குள்  இழுத்து செல்லப்பட்டனர்.  இவர்களுக்கும் அவர்கள் கதிதான் கிடைக்கும் என்று மனதில் தோன்றியது..

நெடுநேரம் கழித்து... என் நண்பரின் நண்பர் மற்றும் பெரிய கட்சியைச் சேர்ந்த நான்கைந்து பிரமுகர்கள் சூழ  தன் மகனை போலீஸ் கூடராத்திலிருந்து வெளியே மீட்டிக் கொண்டு வந்தார். அவர்களிடம் விடைபெற்று விட்டு என்னிடம் வந்த நண்பரிடம்.... எப்படி உங்கள் நண்பரின் மகனை வெளியே விட்டார்கள்  என்று கேட்டபோது... கைகளால் செய்கை செய்தபடி எல்லாம் காசு என்றார்.

எப்போதோ... நண்பர் .. வழைப்பழம் தின்னாத குரங்கு உண்டா? என்று சொன்னது நினைவுக்கு வந்தது...நண்பர் வேறு சில இடங்களுக்கு செல்ல அழைத்தபோது... எனக்கு வேறு வேலை இருக்கிறது..  நீங்கள்“ சென்று வாருங்கள் என்று சொல்லி விடை பெற்று வந்தவுடன்  முதல் வேலையாக போலீஸ் நிலையத்தில் பார்த்த நண்பரின் வீட்டுக்குச் சென்று...  அவர் காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருப்பதை  தெரிவித்துவிட்டு....சட்ட உதவிக்குழு வழக்கறிஞர் கூடம் எண் 96 , மாவட்ட நீதி மன்ற வளாகத்தை  அணுகுமாறு தெரிவித்தேன்..


பிறகுதான் தெரிந்தது..  வேலை விசயமாக அந்தப் பகுதிக்கு சென்றவரை போலீஸ் பிடித்து சென்று அடித்தது.. வழக்கு போட்டது.... இரவு வீடு வந்து படுத்தபோது....   என் தெருவுக்காரர்களாலும் உறவுக்காரர்களாலும்  சேர்ந்து என் வீட்டு இடப்பிரச்சனையால்... போலீஸ்காரர்களால் என் காது பாதிக்கப்பட்டபோது ஏற்ப்பட்ட வலி   வந்து சென்றது....

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து... எனதுகுடியிருக்கும் வீட்டு இடப் பிரச்சினையால் என் மீது கொடுக்கப்பட்ட ஒவ்வொரு புகாரில் எந்தப் போலீசும் நேர்மையாகவோ... சட்டப்படியாகவோ நடந்து கொண்டதே இல்லை... என்பதே எனது அனுபவம்..

6 கருத்துகள்:

  1. இன்னும் போலீஸ் துறை பிரிட்டிஷ் காலத்திலேயே உள்ளது ,என்று மக்களின் நண்பனாக மாறுமோ :)

    பதிலளிநீக்கு
  2. முன்பிருந்தே தமிழக போலீசு காட்டுமிராண்டிகள் கூட்டம்,லஞ்சம் வாங்கும் காட்டுமிராண்டிகள்.

    பதிலளிநீக்கு
  3. என்ன செய்வது நண்பரே
    சனநாயக நாட்டில் ஒவ்வொரு நம்பிக்கையாக தகர்ந்து கொண்டே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. உண்மை தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது..... உங்கள் அனுபவம் மட்டுமல்ல. பொதுவாக எங்கும் இதேதான்.

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...