பக்கங்கள்

Wednesday, May 10, 2017

கூடா நட்பு அல்ல...அது...

அந்தச் செய்தியைப்  படித்தவர்களில் பாதிப்பேருக்கு காரை ஏற்றிக் கொன்றவன் மேல் கோபம் வரவில்லை. செத்தவளின் மேல்தான் கோபம் வந்தது. அதுவும் அது நியாயமாக இல்லை. வேறு கோணத்தில்இருந்து 
பேசினார்கள்.

அட. ஆசிரியையா இருந்து  இப்படி கூமுட்டக் கழுதையாகவுல்ல இருந்திருக்கு...என்றுதான் கோபப்பட்டார்கள்.. செய்தி ஏட்டில் வந்த கூடா நட்பு கேடா முடியும் என்ற கருத்திற்கு மாற்றாக இருந்தது அவர்களின் கருத்து.

கட்டிட வேலையில் இருக்கும் சித்தாள்களை உதாரணமாகச் சொன்னார்கள்.கூடவே சினிமா நடிகைகளைப்பற்றியும் உதாரணமாக சொன்னார்கள்....

இன்றைய காலத்தில் வாய்ப்பு இல்லாதவர்கள் கிடைக்காதவர்கள்தான் விதியை நொந்து போக்கிடம் கிடைக்காமல் ஏக்கப்பட்டே கவலையால் பத்சாதினியாய் சாவார்கள், வாய்ப்பு உள்ளவர்கள்  அணைத்தையும் அனுபவித்து சந்தோசமாக சாவார்கள்....சாவில்கூட இதுதான் வித்தியாசம் என்றார்கள்..

அவர்களின் வீட்டருகில், தெருவில் கண்ட பார்த்த தெரிந்த காட்சிகளை தெரிந்த விபரங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு... மறைக்கத் தெரியாமல் செத்துபோனஅந்த ஆசிரியை யை திட்டித்தீர்த்தார்கள்..

அவர்கள் இப்படியும் பேசிக் கொண்டார்கள்.நம்ம தெருவில் எத்தன பேருடா யோக்கியமா இருக்காங்கஆ..அந்த பிள்ளை ரெண்டு மூனு பேருகூட தொடர்பு வச்சு இருக்கிறது..நமக்கு தெரிஞ்ச அளவுக்கு அந்த பிள்ள வீட்டுக்காரனுக்கு தெரியாதுல.....நாலோ அஞ்சோ படிச்சு இருக்கு எப்படி லாவகமா எல்லாப் பயலையும் சமாளித்து ஒரு..ஈ.காக்கா மூச்சுகூட வருதா.... இப்படி அவர்கள் தங்கள் குடியிருக்கும பகுதியில் உள்ளவர்களின் ஒவ்வொருத்தரின் யோக்கியத்தை அக்கு வேறு அணி வேறாக பிரித்து தொங்க விட்டதோடு  பேசிய பேச்சின் ஊடாக படித்தவளுக்கு புத்தி மட்டு என்று தங்களின் குடி மயக்கத்தினால் விளைந்த அறிவை  தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

தசரதனை கட்டிக் கொண்ட அறுபதாயிரம் மனைவியரை  உதாரனத்துக்கு
இழுத்து பேசினார்கள்... கடைசியாக அவர்களின் முடிவு 

கூடா நட்பால் வந்த சாவு அல்ல அது. பிறர்க்கு தெரிய செய்ததால் வந்த சாவு என்றார்கள் அவர்கள்,


7 comments :

 1. இரவுக்கு ஆயிரம் கண்கள் ....கூடா நட்பு வெளியே வராமல் போகாதே :)

  ReplyDelete
 2. காரை ஏற்றிக் கொன்ற காரோட்டி வேக கட்டுபாட்டை மீறியோ,குடித்திருந்தோ, கார் ஓட்டும் விதிகளை மீறியோ நடந்திருந்தால் குற்றம் அவருடையது இறந்தது நல்ல பெண்ணோ அல்லது கெட்ட பெண்ணோ.
  குற்றம் காரோட்டியினது என்பதால் இறந்த பெண் கெட்டவரானால் நல்லவராகிவிட மாட்டார். ஆனால் அதற்காக அந்த பெண்ணை திட்ட வேண்டியதில்லை. அதே போல் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தான் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதும் மிகபெரிய மோசடி பேச்சு.

  ReplyDelete
 3. தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும்

  ReplyDelete
 4. காரை ஏற்றிக் கொன்றவன் காமவெறியின் காரணமாகவே செய்திருக்கிறான் என்று தெரிகிறது. ஆஸ்பத்திரியில் இருப்பவன் பிழைத்துவந்தால் அவன் கதி என்ன ஆகுமோ தெரியவில்லை. செத்துப்போன பெண் மீது ஏன் குறை காணவேண்டும்? தான் விரும்பியவனோடு வாழ்வை நடத்த அவளுக்கு உரிமையுண்டு. இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணைத் துரத்தும் முக்கோணக் காமம் தமிழ்நாட்டுக்குப் புதுமை அல்லவே! இதற்காகத் தங்களின் ஒரு பதிவை வீணாக்கியிருக்கவேண்டுமா என்று பணிவோடு தெரிவிக்கிறேன்.

  இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

  ReplyDelete
  Replies
  1. குப்பையும் மற்றவர்க்கு பயன்படுமே..

   Delete
 5. இன்றைய காலத்தில் வாய்ப்பு இல்லாதவர்கள் கிடைக்காதவர்கள்தான் விதியை நொந்து போக்கிடம் கிடைக்காமல் ஏக்கப்பட்டே கவலையால் பத்சாதினியாய் சாவார்கள்,

  தங்களின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. இது என் கருத்தல்லவே...மற்றவர்கள் பேசியதை தெரிவித்தென் அவ்வளவே....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com