வியாழன் 21 2017

மீண்டும் தொடரும் இம்சைகள்.....

மாலை மூன்று மணி இரு காவலர்கள் அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வந்தார்கள். வந்தவர்கள் முன் அவர் ஆஜர் ஆன போது வந்தவர்கள் சொன்னார்கள். உங்கள் மீது குருசாமி மகன் செல்லமணி புகார் கொடுத்து இருக்கிறார் என்றார்கள்.. என்னவென்று அவர் கெட்டபோது.. அவர்கள் வீட்டை மராமரத்து செய்வதை நீங்கள் தடுப்பதாக என்றார்கள். அவர் மீது புகார் கொடுத்த தெரு கோயிலின் பூசாரி குருசாமியின் மகன் செல்லமணி மற்றும் அவனின் தம்பியின் இரண்டு மனைவி மார்கள் என்று ஒரே கும்பல் வந்து அவர்கள்  தரப்பு பொய்யை குப்பையாக கொட்டியது...அவர் அமைதியாக இருந்தார். வந்த காவலர்கள் அவரை பார்த்த போது அவர்கள் சொல்வதை முழுமையாக கேளுங்கள் பின் என் தரப்பை சொல்கிறேன் என்றார்.

ஒரு வழியாக புகார் கொடுத்தவனின் வீட்டு கும்பல்களின் சத்தம் சிறிது குறைந்ததும் அவர் சொன்னார். எனது இடம்  அதுவரை இருக்கிறது என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார். இவர்களுக்கு ஆள்பலமும் பண பலமும் இருப்பதால்  எனது இடத்திற்குள் ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளார்கள்.. நீங்கள் இறங்கி வந்த பாதையை இவர்கள் பாதை என்று என்வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டார்கள். இவர்கள் என் மீது தொடுத்த வழக்கு  எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றதும் பூசாரி சவுண்டு விட்டு தொடங்கி வைத்ததும் எல்லோரும் மீண்டும.. சலசல வென்று பேச ஆரம்பித்தனர்

வந்த காவலர்கள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவரிடம்  நீங்க எட்டு மணிக்கு வந்து எஸ்ஐயை வந்து பாருங்க..என்று விட்டு பூசாரி குருசாமியை பார்த்து நீங்களும் எட்டு மணிக்கு ஸ்டேசனுக்கு வாங்க என்று  நடையை கட்டினர்
அவர் வந்திருந்த காவலர்களுடன் மெயின் ரோட்டு வரைக்கும் வந்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

அவரைப் பார்த்து சார் நீங்க கம்யூனிஸ் கட்சியா என்று கேட்டார் வந்த இருவரில் ஒருவர் அவர் இல்லை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தில் உறுப்பினர் என்றார்.

நீங்க ..அவுங்க எல்லாம்  ஒரே சமூகமா என்றார்.  இல்ல சார்.. அவுங்க என் சொத்த அபகரிக்கிற சமூகம்..நான் என் சொத்த பாதுகாக்குற சமூகம் சார். என்ற போது இரு காவலர்களும் சிரித்தனர்.. பின் அவரைப்பற்றி கேட்டபோது அங்கு நின்று இருந்த பூசாரியை சுட்டி காட்டி.. அவர் சொன்னார். பெரிய இம்சை சார். அந்தாளு இம்சையினாலயே நான் திருமணம் முடிக்க முடியாமல்...ஆகிவிட்டது என் வீட்டில் இருந்தவர்கள் என் அக்காவின் மகன்கள். இந்தாளுவின் கூட்டத்துக்கு பயந்து..ஊரில் இருந்து வந்து வேலையை முடித்துவிட்டு ஊறுக்கு அனுப்பி விடுவேன் என்றபோது....வந்த காவலர்கள் மேற்க்கொண்டு விசாரணை செய்யாமல்  எட்டு மணிக்கு வந்திருங்க சார் என்று சென்றனர்

திரும்பி அவர் விட்டுக்கு வந்தபோது அவர்களின் வசவு சத்தம் ஒய்ந்த பாடில்லை....எதுவும் பேசாமல் விலகி வந்து வீடு சேர்ந்தார் பேருக்கு அன்றைய மதிய உணவை வயிற்றுக்குள் இறக்கி விட்டு. செய்து கொண்டிருந்த கை வேலையை முடித்துவிட்டு... அவரும்  ஒரு மனு எழுத ஆரம்பித்தார்



பெறுநர்:         காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்,
                             காவல் நிலையம், மதுரை
            
அய்யா,
         நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன். என் மீது குருசாமி மகன் செல்லமணி புகாரில் கூறப்பட்டுள்ள வீட்டில் செல்லமணி வசிக்கவில்லை அவரது தம்பி முருகன்தான் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.  மேற்படி வீட்டை செல்லமணியின் அப்பா குருசாமி கட்டும்போதே எனது இடத்தை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டுள்ளது  ..குருசாமியின் ஆக்கிரமிப்பை எனது தாயார் தடுத்தும் என் தாயாரையும் மீறி குருசாமி என்பவர் தனது ஆள்பலத்தால் பண பலத்தால் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டைக் கட்டி முடித்தார். .குருசாமியின் ஆக்கிரமிப்பை என் தாயார் எதிர்த்ததால்  குருசாமி  என் வீட்டுக்கு தீ வைத்தார்.இந்த பிரச்சனை நடந்த சிறிது காலத்தில் நான் குடியிறுக்கும் வீடு மற்றும் இடம் சம்பந்தமாக என் மீதும் என்தாயார் மீதும் அய்யணன் அம்பலம் என்பவர் மாவட்ட முன் சிப் கோரட்டில் சிவில் வழக்கு தொடுத்தார்.
         தற்போது  அய்யணன் அம்பலம் தொடுத்த வழக்கானது நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகிவிட்டது. தள்ளுபடியான நீதிமன்ற தீர்ப்பானையின் மூலம் அய்யணன் அம்பலம் பெயரிலுள்ள வீட்டுவரி ரசீது எனது தந்தை நாகன் பெயருக்கு மாற்றப்பட்டது.. மேற்படி எனது  வீடு சேர்த்து மொத்த இடத்தின் அளவு கிழமேல் 93அடியும் தென்வடல்29 அடியும் உள்ளது  இதற்கு ஆதாரமாக அய்யணன் அம்பலம் பெயரில் பதிவு பெற்ற பத்திரம் உள்ளது குருசாமியின் இடமானது   கிழமேல்30ஆகவும் தென்வடல்33ஆகவும் அவருடைய பத்திர ஆவணத்தில் உள்ளது. இந்த உண்மை நிலையை மறைத்து செல்லமணியின் அப்பா குருசாமி  எனது இடத்தின் வடக்கு பக்கத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி எனது இடத்தை ஆக்கிரமித்து  வீட்டை கட்டியுள்ளார். குருசாமியைத் . தொடர்ந்து குருசாமியின் அக்கா மகனும் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளனர். மேற்படி ஆக்கிரமித்த இடத்தை உறுதி படுத்திட வேண்டும் என்ற காரணத்துக்காவே வீடு பராமரிப்பு என்று சாக்கு போக்கு சொல்லி செல்லமணி என்மீது புகார் கொடுத்துள்ளார். இந்த குருசாமி என்பவர் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே “எனக்கு அங்கு வரை இடமுள்ளது இங்கு வரை இடமுள்ளது என்று பொய்யாக சொல்லி இடப்பிரச்சனையை காரணம் காட்டியே   எனது தாயாருக்கும் எனக்கும் பலவித தொல்லைகள் கொடுத்து  வந்துள்ளார்.
           இந்த நிலையில் எனது வீட்டிற்கு செல்லும் வடக்கு பக்க தெருவிற்கு பாதாளசாக்கடை,சிமெண்ட் தளம் அமைக்க மாநகராட்சியில் அதிகாரிகள் வந்த போது, குருசாமி என்பவரும், காமாயி என்பவரும் ஆளுக்கு ஐந்தடி ஐந்தடி போட்டு இருப்பதால் இந்த தெரு பாதை எங்கள் இருவருக்கும் சொந்தமான பாதை  என்று கூறி பாதாள சாக்கடை, சிமெண்ட்தளம் அமைப்பதை தடுத்துவிட்டனர்.
          இதை எதிர்த்து  எனது வீட்டிற்கு செல்லும்  மேற்படி தெரு மாநகராட்சி தெருவா.? தனியாருக்கு சொந்தமான தெருவா? என்று மாநகராட்சியிடம் மனு செய்து கேட்டபோது.. அது மாநகராட்சி தெரு என்றும் நான் பாதாளசாக்கடை இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று எனக்கு பதில் கடிதம் அளித்தனர்.
          அதைக் கொண்டு நான் எனது வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முயன்றபோது மேற்படி தெரு அவர்களுக்கு சொந்த மானது என்றும் மேற்படி தெருவில் நான் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கு கூடாது என்று  என்மீது வழக்கு போட்டு இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே அந்தத்தெருவழியாக போடப்பட்ட தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் குழாய் இணைப்பு பெற்று உள்ளேன். அதை உடைப்பதற்கு முயற்சி செய்வதை மாநகராட்சி அலுவலரிடம் முறையிட்டு உள்ளேன்.
         மேற்க்கொண்டு குருசாமி என்பவர்  மாவட்ட முன்சிப் கோர்ட்டில்  என்மீது போட்ட வழக்கை எதிர் கொண்ட போது,பல வாய்தா கொடுத்தும் விசாரணைக்கு குருசாமி ஆஜராகததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அந்த வழக்கை கோப்புக்கு எடுக்கச் சொல்லி வழக்கு போட்டார். அந்த வழக்கின் விசாரணையின் போதும் குருசாமி ஆஜராகததால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
          இந்த நிலையில் நான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடுத்து மேற்படி தெரு  குருசாமிக்கு சொந்தமானதல்ல, அந்தத் தெரு மாநகராட்சி தெரு என்று  உத்தரவு பெற்றேன்.  மேற்படி உத்தரவை குருசாமி என்பவர்  அவர் பெற்றதாக மோசடி செய்து பாதையில்லாத வாடகைக்கு விட்டுள்ள அவர் வீட்டுக்கு பாதை வேண்டும் என்பதற்காக. அவர் வீட்டு பாதாள சாக்கடை இணைப்பு குழாயை நான் இல்லாத நேரம் பார்த்து எனது இடத்தில் பதித்துவிட்டார்.. ஏற்கனவே, சிமெண்ட் தளம் போடாமல் விட்டதால் பள்ளமாக இருந்த தெருவை  பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கிறேன்  என்று திட்டமிட்டு மேலும் பலமுறை தோண்டி நான் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாதவாறு வேண்டுமென்றே தெருவை பள்ளமாக்கி பாதையை சுறுக்கி விட்டார்..
         தற்போது அவர் ஆக்கிரமித்து  கட்டியுள்ள வீட்டின்  எனது  இடத்தை அவர் இடம் என்பதை உறுதி படுத்துவதற்காக வீட்டு சுவர் பராமரிப்பு என்று  பொய் சொல்கிறார்.

         ஆகவே. அய்யா அவர்கள் நான் இணைத்துள்ள எனது இடத்திற்கான பத்திர ஆவணங்களையும். செல்லமணியின் அப்பா குருசாமியின் பெயரில்உள்ள பத்திர ஆவணங்களையும் பரிசீலனை செய்து
குருசாமி ஆக்கிரமித்துள்ள எனது இடம் பத்திர ஆவணங்களின்படி அவர்களுடையதாக இருந்தால் உரிய நீதி மன்றத்தின் மூலம்  உத்தரவு பெற்று பராமரிப்பு வேலை செய்யவும். எந்த உத்தரவும் பெறாமல் ஆக்கிரமித்துள்ள எனது இடத்திற்குள் பராமரிப்பு என்ற பெயரில்  அத்துமீறி மேலும் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்திட வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

மதுரை:                                   தங்கள் உண்மையுள்ள
19/12/2017

இணைப்பு நகல்கள்-
1.   அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள எனது இடத்தின் பத்திரம்
2.   நீதி மன்ற தீர்ப்பானையின்படி அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள
வீட்டுவரி எனது தந்தை நாகன் பெயரில் மாற்றிய உத்தரவு கடிதம்.
3.    எனது வீட்டுக்கு செல்லும்  தெரு பாதையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி மாநகராட்சி மைய அலுவலகம் அனுப்பிய கடிதம்.



நிணைவுக்கு வந்தவற்றை மட்டும் எழுதி இணைப்புகளை நகல் எடுத்து 
தயார் செய்து முடித்த போது மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. பின் முகத்தை கழுவி தயார் படுத்தி ஸ்கூட்டி வண்டியில் சென்றபோது குருசாமியின் மருமகள்கள்.. குருசாமியின் தம்பி பொண்டாட்டி காமாயி போன்றவர்கள் தெருவை ஆக்கிரமித்து கட்டியுள்ள கோயிலின் முன் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள். பல தடவை ஒலி எழுப்பியும் கேட்காதவர்கள் போல் கேட்டு மெதுவாக  ஏதோ அவருக்கு இரக்கப்பட்டு வழி விடுவது போல் வழி விட்டனர்

ஆக்கிரமிப்பு செய்யப்படாத தெரு.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மேற்கூறை அமைக்கப்பட்ட தெரு.

படம்--இரக்கப்பட்டு வழி விடப்பட்ட தெரு.முகப்பு .


தொடரும்....


3 கருத்துகள்:

  1. இவைகள் அனைத்தும் முன்பே அறிந்த நான் தொடர்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. நாகரிகம் தெரியாத மக்கள். என்ன செய்வது? அவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...