வியாழன் 14 2017

அவன் எனக்கும் மூத்தவன்..



”நாங்க வொயர்லெஸ்ல தொடர்பு கொண்டோம். யாருமே உதவிக்கு வரல்ல படகு கவுந்து போச்சு அதுல கிடந்த கம்பானை பிடிச்சிக்கிட்டு தொங்கிட்டிருந்தோம். நாங்க 8 பேர் அதுல எனக்க அண்ணனுக்கு வயது 60க்கு மேல ஆள் நல்ல பலசாலி. ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு அவரோட உயிர் பிரிய ஆரம்பிச்சிட்டுச்சு. என் மகனும்  கம்பானை பிடிச்சிட்டு கிடந்தான்.  “லே பிள்ள பெரியப்பாவ பிடியடா”ன்ணேன். ஒரு கைல கம்பானை பிடிச்சிட்டு இடது கைல அவரை ஏந்தி பிடிச்சிருந்தான். நானும் போய் ஒரு கைய கொடுத்து அவரை ஏந்திக்கிட்டேன். ஆனா அப்படியே உயிர் போயுடுச்சு. மூணு மணி நேரம் மிதந்துக்கிட்டு கிடந்த போட்டு மூழ்க ஆரம்பிச்சுது நான் எங்க அண்ணனை அப்படியே விட்டுட்டேன் (பேச முடியாமல் அழுகிறார்) அவன் முங்கிப் போய்ட்டான். அப்புறம் நீந்த ஆரம்பிச்சோம் ஒவ்வொரு ஆளா செத்தாங்க. கண்ண தொறக்க முடியாது ஒவ்வொருத்தர் பேர கூப்பிட்டு கூப்பிட்டு சவுண்ட் கொடுப்போம் பதிலுக்கு சவுண்ட் வந்தா உண்டு இல்லண்ணா இல்ல.. ஒரு இரவு ஒரு பகல் முடிஞ்ச பிறகு ஒவ்வொரு சவுண்டா இல்லாம போச்சு ஒரு சில போட் வந்துச்சு, ஹெலிகாப்டர் சத்தம் எல்லாம் கூட தூரத்துல கேட்டுச்சு ஆனால் யாரும் மீட்கல்ல. 

மகனுக்கா உதடும் , கண்ணும் உப்பி வீங்கிடுச்சு அப்போ ஒரு கப்பல் சத்தம் கேட்டுச்சு. ஆனால் அது ஆழ் கடல்ல கேட்டுது. அந்த சத்தம் வந்த திசைல தவள மாதிரி நீந்தினோம், நீந்த முடியல்ல. செத்துடோம்ணு நினைச்சோம். ஆனால் அந்த கப்பல் காரங்க எங்கள்ல சிலரை மீட்டாங்க. அது  ஜப்பான் நட்டு கப்பல்.

“என் அண்ணன் என் கைல செத்தாம்லியா அவந்தான் எனக்கு கடத்தொழில் சொல்லிக் கொடுத்தான்.எனக்கு  சொல்லிக்கொடுத்தவன் என் கைல இருந்தே கடலமக்கி கிட்ட போயிட்டான்”...மவுனமாக  அந்த இடது கையை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் எதுவும் பேசவில்லை...!

- அருள் எழிலன்,
பத்திரிக்கையாளர்.

3 கருத்துகள்:

  1. மனம் கனக்கிறது தனக்கு வந்தால்தான் துயரம் என்று மக்கள் நினைக்கும்வரை இந்த நாட்டு மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...