முன் கனவு -யை படிக்க
எப்போதும் போல் ஒரே மனநிலையில் இல்லாமல் பதற்றமாகி இருந்தது. என் அக்கா..என் அம்மா மற்றும் சிலர் என்னிடம் யாருக்கும் சாபம் விடாதே! அது பலித்து விடும் என்று பல தடவை எச்சரித்து இருந்தார்கள்...அதைப்பற்றி கேலியும் கிண்டலுமாக பேசினபோது.... டேய் நிஜமாத்தாண்டா....உனக்கு என்னடா தெரியும் நீ எதாவது சொன்னா... அது பலிக்குதுடா என்றார்கள்..

அன்று அவர்கள் சொன்னது..இன்று எனக்கு சம்பந்தமில்லாமல் என் நிணைவுக்கு வந்தது. பலித்துவிடுமோ என்று?? எந்த வேலையிலும் மனது ஒட்டவில்லை...அமைதியாக உட்கார்ந்து யோசனை செய்யலானேன்... கனவில் வந்தது மாதிரி...கட்டையன் திட்டி தீர்த்து அடிக்க வந்தால் என்ன செய்வது, தப்பிப்பது எப்படி என்று யோசித்தேன்.....
முதலில் யோசனையே வர மறுத்துவிட்டது..எப்படி முயன்றும் எந்த யோசனையும் வரவேயில்லை... கடைசியாக.. கோயிலில் போய் அமர்ந்து யோசிப்போம் என்று முடிவெடித்தேன்... ஏற்கனவே..வயிறு வேறு பயத்தில் கலக்கிவிட்டுக் கொண்டிருந்தது.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழியைப் போல வாழியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு கோயிலில் சென்று அமர்ந்தேன்....அதன். பலனாக அய்ந்தாறு வழிகள் தோன்றின....
அந்த அய்ந்தாறு வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன்.....அதில் குட்டையன் ராஜா முகம்மது.. போதையில் வந்து திட்டும்போது...வழக்கம் போல் கதவை அடைத்துக் கொண்டு பேசாமல் இருப்பது... வீட்டில் உள்ளவர்கள் எவரும் பேசாமல் இருக்க வேண்டும் என்று வலியுருத்தி சொல்வது என்று முடிவெடுத்து சொல்லி ... கனவில் கண்டதை நிணைத்து அசை போட்டபடியே இருந்தேன்....
அதை விட்டு மனம் வேறு எதிலும் செல்ல வில்லை....இப்படி எதையாவது நிணைத்து மனம் புழுக்கமாகி இருக்கும் தருணங்களில் பைபாஸ் ரோட்டுக்கு சென்று பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்து போவோர் வருவோரை வாய் பார்த்து இருப்பேன் மனம் எல்லாவற்றையும் மறந்திரும். ஒரு நேரத்தில்..... இப்பொழுது அப்படிச் செல்லவும் மனம் வரவில்லை......
நேரமும் மெதுவாக சென்று கொண்டிருந்தது. உணவு உண்ணவும் விருப்பமில்லை...கனவில் வந்த அந்த நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டு இரக்கத்தான் தோன்றியது.... தொலைக்காட்சியை பார்க்கலாம் என்று பார்த்தால்... அதில் கொலை கொலையாக விழும் “யுத்தம் செய்” என்ற படம் வந்தது. “அய்யோ..அம்மா..”என்று அது என்னை மேலும் பயமுறுத்தியது தொலைக்காட்சியில் ஓடும் படத்தை பார்ப்பதை தவிர்த்துவிட்டு.... அமைதியாக குட்டையனை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இரவும் அது குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தது. இரவு வந்த சிறிது நேரத்தில் சரியாக குட்டையன் ராஜா முகம்மது என்ற குமாரு வழக்கமான வசவுகளில் கத்திக் கொண்டே வந்தான்... வாசலில் உட்கார்ந்திருந்த நான் எழுந்து வீட்டுக்குள் வந்து அமர்ந்து விட்டேன்.... வசவு சத்தம் அதிகமாக கேட்டது... ஓம்போது....பொட்டப்பயலே...என்பவையுடன். ஆண்குறி, பெண்குறி வசவுகளும் சேர்ந்து வந்தது. வந்த சத்தம் திடிரென்று என் வீட்டு வாசலில் இருந்து கேட்டது.. அதிர்ச்சியில் அவனைக் கண்டு நான் எழுந்தபோது குட்டையன் குடி போதையில் நிற்க முடியாமல் மல்லாக்க விழுந்தான்..
சில வினாடிகளில் எழுந்தவன்... என்னடா பொட்ட..தள்ளி விடுற என்றபடி திட்டினான்.....பதற்றத்துடன் அவனை பார்த்தபோது.. முகம், கண்ணம், கை,கால்களில் எல்லாம் அடிபட்ட காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.. போதையில் நிற்க முடியாமல் தள்ளாடியபோதும் என்னை திட்டும் வசவு வார்த்தைகளை மட்டும் ஏற்ற இறக்கம் திக்கல் திணறல் பிசிறு எதுவுமில்லாமல் சுத்தமாக வந்தது .
அவன் போதயைில் பொத்பொத்தென்று கிழே விழுவதும்..பின் பெரு முயற்சி செய்து எழுந்து நிற்பதுமாய் இருந்தான்..... இவன் நிலைமையை பார்த்தால் வாசல் முன்னே நான் அடிக்காமலே செத்து என் மேல் பழியை போட்டு விடுவானோ என்று நிணைத்து... கனவு பலித்து விடுமோ...?? என்று பயந்தேன். முன்னரே நிணைத்திருந்தபடி கைகள் நடுங்க அவசர உதவியான நூறுக்கு போன் செய்தேன்....அதைக் கண்ட அவன்.....
போலீசிக்காடா பன்னுற...பன்னுடா....எந்த மயிராண்டி ஒன்ன காப்பாத்த வருவான் என்று பார்க்கிறேன் என்றான்..... இந்தவாட்டி என் வீட்டுக் கதவை இறுக பிடித்துக் கொண்டு கீழே விழாமல் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வர முயற்சித்தான்.....
பல தடவை நூறுக்கு அடித்து பார்த்தும் ரிங் செல்கிறது..யாரும் எடுக்கவில்லை.... விடாமல் முயற்சி செய்து கொணடிருந்தேன்...இந்நிலையில் வீட்டுக்குள் வர காலை எடுத்து ரெண்டடி வைத்த போது என் கை அவன் மேல் படாமல்... அவன் பிடித்திருத்த கதவை அடைத்தேன்.. பின் செல்போனை பார்த்தேன் .எடுத்து காதில் வைத்து கேட்டபோது எதிர் முனையில் பேசியவர் என்ன விவரம் என்று கேட்டார்.. அவரிடம் நடந்த விபரத்தை கூறினேன்....பேசிக் கொண்டிருந்தபோதுஃஃ என்ன சத்தம் என்று கேட்டார் என்னை திட்டிக் கொண்டு இருப்பதையும், அடைத்துவிட்ட கதவை தட்டுகிறான்... என்றேன்...
கவனமாக இருங்கள்.. காவலர்கள் வந்துவிடுவார்கள் என்றுவிட்டு, என் பெயர், முகவரி, நான் இருக்கும் தெருப் பகுதியின் காவல் நிலையம் ஆகியவற்றை கேட்டுவிட்டு தொடர்பை துண்டித்தார்...
வசவுகளால் திட்டியபடியே... கதவை படார் படரென்று தட்டிக் கொண்டிருந்தவனிடம்.... இங்கேயே நில்லுடா மகனே.....உன்ன பார்க்க போலீசு வறுதுடா..மகனே..என்று சொல்லி விட்டு...என் படபடப்பை அடக்க சிறிது நேரம் அமைதியாக நின்றேன்..
என்னை பேசியது போல் போலீசைப் பற்றி தரக்குறைவாக பேசி கத்தினான்.... என் போனில் அழைப்பு மணி ஒழித்தது... ஆமாம் சார் நான்தான் போன் செய்தேன்... ஆமா சார்.. அந்த வழியே வாங்க..... என் வீட்டு முன்னாடிதான் நிக்கிறான் வாங்க சார்.. என்று நான் பேசியதை கேட்டவுடன்.. கதவை தட்டுவதை நிறுத்திவிட்டு வசவு சவுண்டு மட்டும் விட்டபடியே அவன் வீட்டுக்கு நகர்ந்தான்....
அவனின் சவுண்டு சத்தம் குறைந்ததும் கதவைத் திறந்த நான் தெருவின் மெயின் ரோட்டு நுழைவாயிலை நோக்கிச் அவன்சென்றேன்.. ஒவ்வொருத்தரும் அவரவர் வீட்டு வாசல்களில் நின்றபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..
தெருக்கோயிலின் ரோட்டின் முகப்பில் இரண்டு காவலர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு அவர்களை அழைத்துக் கொண்டு ... நேராக அவன் வீட்டுக்கு சென்றேன்..
வீட்டில் படுத்திருந்தவனை பெயரைச் சொல்லி கூப்பிட்டார்கள். எழுந்திருக்காமல் இருந்தான்.. லத்தியால் தரையை தட்டினார்கள்... வீட்டில் இருந்த பெண்களிடம் எழுப்பிவிடச் சொல்லி லத்தியால் மீண்டும் தட்டினார்கள்....எழுந்தவன்..நிற்க முடியாமல் கீழே விழுந்தான். அவன் முகம் வீங்கி கைகால்கள் எல்லாம் காயங்களாக இருக்கிறதே...என்றபடியே என்னை பார்த்தார்கள்... அவன் வீட்டில் உள்ளவர்களும் குடிதிருந்தவனை இப்படி அடித்திருக்கான் என்றார்கள்....பொய் சொல்கிறார்கள்...அவன் குடித்து விட்டு என்னை திட்டுவதை கேட்டு ரசிப்பார்கள்..குடித்திருப்பவனை அடிக்க கூடாது என்பதால்தான் நான் நூறுக்கு போன் செய்தேன் என்ற போது.....
வந்திருந்த காவலர்களில் சிறப்பு எஸ் ஐ என்னை பார்த்து அதிக போதையில் இருக்கிறான் காவல் நிலையத்துக்கு கூட்டிக் கொண்டு போக முடியாது..என்றார். திரும்பவும் என் வீட்டிற்குள் வந்து பிரச்சினை செய்தால் என்ன செய்வது என்றேன்..
அவர்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் அவனிடமும் சத்தம் போட்டு, சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார்கள்... சத்தமே போடக்கூடாது... மீறி சத்தம் போட்டால் சிறைதான் என்றார்கள்.... என்னைப் பார்த்து “ அவன் சத்தம் போட மாட்டான்.. காலையில் பத்து மணிக்கு மேல் காவல் நிலையம் வந்து புகார் மனு எழுதி கொடுங்கள்..அவனையும் காலையில் காவல் நிலையத்துக்கு வரவேண்டும். என்றுவிட்டு.. என் வீட்டையும் ஒரு சுற்று பார்வையிட்டு சென்றார்கள்.........
ஓரளவுக்கு கனவு பயம் அகன்று நிம்மதியாக இருந்த பொழுதும் அன்றிரவு தூக்கம் திருப்தி கரமாக இல்லை... ....மற்றவர்கள் என்மீது பொய்ப் புகார் கொடுத்த போது காவல்நிலையம் செல்வது..போல்ஃஃஇந்த முறை நான் உண்மைப்புகார் கொடுப்பதற்க்காக காவல் நிலையம் செல்வதற்காக..படுத்திருந்த படியே விடியலை எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.....
..தொ.....தொ....தொடரும்.......................
முன் கனவு பற்றி படிக்க......

நிகழ்வுகள் பயமுறுத்துகிறதே நண்பரே
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குஅடுத்தப் பதிவிற்காக....