விடிந்தது..... எழுந்து வழக்கமான உடலின் காலைப் கடன்களை முடித்துவிட்டு பேப்பர் பேனாவுடன் உட்கார்ந்து புகார் மனு எழுத ஆரம்பித்தேன். எப்போதும் உண்மை நிகழ்வுகளையே சொல்லி பழக்கமிட்ட எனக்கு புனைக் கதைகளை சொல்லி எழுதுமளவுக்கு எனக்கு அனுபமில்லை..அப்படி எழுதி யாசிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் நடந்த நிகழ்வுகளையே புகார் மனுவாக எழுத ஆரம்பித்தேன்... பத்து மணிக்கு வரச் சொன்னதால் ,பத்து மணிக்கு காவல் நிலையத்தில் இருக்க வேண்டும் என்ற முடிவுடன் மனுவை எழுதி முடித்தேன்...
மனுவில் அனுப்புநர், பெறுநர், பொருள் என்று எல்லாவற்றையும் எழுதி முடித்து இப்படி எழுதியிருந்தேன்.
ஐயா,
நான் மேற்க்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். சம்பவ நாளான்று என் வீட்டுக்கு அருகில் குடியிருந்து வரும் ஆண்டி என்பவரின் மகன் குமார் என்ற ராஜா முகம்மது .. அது அருந்தி அதிக போதையுடன் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டினுள் வேலை செய்து கொண்டிருந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அடிக்க பாய்ந்தான்... நான்.. அவனை தடுத்து வீட்டுக்கு வெளியே தள்ளி கதவை அடைத்த பின்பும் என் வீட்டு கதவை பலம் கொண்ட மட்டும் தட்டியும் என்னை பல வகையான எழுதத் கூசும் வார்த்தைகளால் என்னை திட்டிக் கொண்டே இருந்தான்... அவன் அதிக போதையில் நிற்கமுடியாமல் கிழே விழுந்தான்.. அவனை பார்த்தபோது முகம் மற்றும் கண்ணம் கைகால்களில் முன்பே காயம் ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் வழிந்தோடிக் கொண்டு இருந்ததால் என் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கில் என்னை தரங்கெட்ட வார்த்தைகளால் எனக்கு மன அழுத்தம் ஏற்ப்படும் வகையில் திட்டிக் கொண்டே இருந்தான்..
குறிப்பாக.. எனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக நான் திருமணம் முடிக்காமல் இருப்பதையே காரணமாகக் கொண்டு.. ஒம்போது, பொட்டை, பொண்டுகன் என்று திட்டினால்... அவனது வீட்டு ஆட்களும் என்னை திட்டுவதையும், என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைவதையும் ஆதாரித்தும் ஊக்கப்படுத்தியும் இருந்தார்கள்.... நிலைமையை உணர்ந்த அவசர உதவி எண் 100 க்கு போன் செய்து உதவி கேட்டேன்..அவர்கள் வந்து ராஜா முகம்மதுவை எச்சரித்தனர். அவன் இதுபோல் பலமுறை முயன்றபோது... அவன் குடியின் காரணமாக நான் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன்.... நாளாது அவனின் மிரட்டலும் வசவும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் எனக்கு மனதில் பயமும் தொற்றிக் கொள்கிறது.
ஆகவே, அய்யா அவர்கள் என் மனுவின் உண்மை தன்மையை பரிசீலனை செய்து இது பொல் மீண்டும் நடவாமல“ இருக்க ஆண்டி மகன் குமார் என்ற ராஜா முகம்மது மீது தக்க நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள .....
எழுதிய மனுவை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து விட்டு, பேருக்கு சிறிது பருக்கைகளை சாப்பிட்டுவிட்டு காவல் நிலையத்துக்கு சென்று விட்டேன்..
காவல் நிலையத்தில் கூட்டமாய் இருந்தது.. தயங்கி ஓரமாக நிற்காமல் .. நேராக உட்கார்ந்திருந்த ரைட்டரிடம் மனுவை கொடுத்து.. இருப்பிட முகவரியை சொல்லி இரவு நடந்த விபரத்தை சொன்னேன். பெற்ற மனுவை என்னிடமே திருப்பிக் கொடுத்து . அருகில் அமர்ந்திருந்த சிறப்பு காவல் ஆய்வாளைரை அனுகுமாறு கையை நீட்டினார்... நானும் பெற்ற மனுவை சிறப்பு சார்பு ஆய்வாளிடம் மனுவை கொடுத்தேன். அவர் மனுவை பெற்று படித்துப் பார்த்தார். படித்து முடித்தவுடன் எதிர் பார்ட்டி எங்கே? வந்திருக்கானா? என்றவர்..யார்டா ராஜா முகம்மது என்ற போது... அவனும் அவனது அண்ணன் மனைவியும் வந்தனர். அவனை சத்தம் போட்டபடி ஓரமாக உட்கார வைத்தார்... என்னிடம் இரவு எந்த எஸ் ஐ வந்தார் என்று கேட்டார்.. அவர் பெயர் தெரியவில்லை. அவர் எனக்கு போன் செய்த நம்பர் இருக்கிறது என்று போன் நம்பரை காட்டினேன்.
நம்பரை குறித்துக் கொண்டு அவரிடம் பேசினார் பின் என்னிடம் அவர் பெயரைச் சொல்லி..“அவரு நைட் டூட்டி பார்த்ததால் இன்று வரமாட்டார். இரவு எட்டு மணிக்கு மேல் அவரை வந்து பார்க்குமாறு தெரிவித்து. எனது மனுவை ரைட்டரிடம் நீட்டினார்.
பிறகு ராஜா முகம்மதுவை ரெட்டு தட்டு தட்டி சத்தமிட்டு, குடித்தால் சவுண்டு போடாமல் இருக்க வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்தார். பின் இருவரையும் இரவு எட்டு மணிக்கு மேல் வரச் சொன்னார்....
இப்படியாக..என்னையும் அவனையும் இரண்டு நாட்களாக அலையவிட்டார்கள்.. மூன்றாவது நாளில் சம்பந்தபட்ட விசாரனை அதிகாரி என்னிடம் முகம்மதுவை சத்தம் போட்டு எச்சரிக்கை செய்துள்ளேன். இனிமேல் உங்களை சத்தம் போடமாட்டான்... மன்னித்து விடுங்கள்...அவனன் உன் சித்தப்பனின் மகன் தானாம்மே..என்றார்
சித்தப்பனின் மகனாக இருந்தாலும் அவன் குடித்துவிட்டு, பயங்கரமான வாரத்தைகளால் ஏசி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து இருக்கானே அதுக்கு ஏதாவது பிரிவில் வழக்கு போடுங்கள் என்ற போது... அவன் மீது வழக்கு போட்டால் உன் மீதும் வழக்கு போட வேண்டியது வரும் என்றார்
என் மீது என்ன வழக்கு போடப்படும் என்று கேட்டபோது.. குடிபோதையில் இருந்தவனை அடித்து காயப்படுத்தியதாக என்றார். நான் அடிக்கவில்லையே என்ற போது... நீ அடிக்க வில்லைதான்... ஆனால் அவன் நீ அடித்து காயப்படுத்தியதாக புகார் கொடுத்து இருக்கான்... உன்னோடு சேர்த்து உன் வீட்டு இரண்டு பேர்களை சேர்த்து கொடுத்திருக்கான். என்றார். பேசாம நான் சொல்ற மாதிரி எழுதி கொடுத்திட்டு போ... என்றார்.
அவனுக்கு சார்பா...பேசியதிலிருந்து அவனிடம் விசாரனை அதிகாரி கையூட்டு பெற்று இருக்கிறார் என்பது எனக்கு தாமதமாக புரிந்தது...என் தொழிலை கெடுக்க வேண்டும் என்றும் என்ற அவர்களின் உத்தியும் புரிந்தது.
ஆக.. விசாரனை அதிகாரியின் முறைகேட்டை எதிர்க்க பணபலம் ஆள்பலமும் ..நேரமும் .இல்லாத காரணத்தால் ...அந்த அதிகாரியின் சொல்படி எழுதிக் கொடுத்து கண்ட கனவு பலிக்காமல் இருந்ததே போதும் என்ற மன நிறைவுடன்.. அடுத்த வேலையில் மனமும் கவனமும் சிரமமின்றி சென்றது.....
நியாயம் எங்கும் நிலைக்காது நண்பரே...
பதிலளிநீக்குலஞ்சம் பெறுவதற்காக தமிழக போலீஸு என்னவெல்லாம் செய்கிறது:(
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க வேதனையாகத்தான் இருக்கிறது நண்பரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்