வியாழன் 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-17

வலிப்போக்கன்





நண்பர் ஒருவர் என்னைக் கண்டவுடன்  “வாங்க தலைவரே” என்றார்...

“தலைவரா...நானா...“...தலைவராவதற்கு தகுதியே இல்லாத என்னைப் போயி தலைவரே” என்கிறீங்க... இது ரெம்ப அநியாயம்.. என்றேன்..

“ யார் சொன்னது நீங்க தலைவராவதற்கு தகுதியில்லையென்று”...

“ வேறு  யார் சொல்வது நான்தான் சொல்கிறேன்....நமது நாட்டில் தலைவராவதற்கு   ஒன்னுக்கு ரெண்டு மூணு மனைவிகள் இருக்க வேண்டும், அதற்கு வழி இல்லையென்றால்..சின்ன வீடு பல இருக்க வேண்டும் அதுவும் இல்லை என்றால்.. ஊரை அடித்து உலையில் போட்டு இருக்க வேண்டும்.. இது எதுவுமே இல்லை என்றால்....சாதி வெறியனாக..மத வெறியனாக இருக்க வேண்டும். இத்தகைய எந்த தகுதியுமே இல்லாத என்னைப் போயி தலைவராக அழைப்பதற்கு.....”

“அய்யா..சாமி.....” தெரியாமல் அழைத்துவிட்ட இந்த அப்பாவியை மன்னித்து விடுங்கள்....”


“ என்னது அய்யா ..சாமியா..? ..ஏன்.? சார் .என் பெயரையே  மாத்திருங்க.....”

“ அய்யோ...இன்னிக்கு யாரு?  முகத்தில முழிச்சேன்னு  தெரியலைய்யே”


“ அது தெரியாமலே..போகட்டும்....    சார்,  என்னை தலைவரே  ன்னு கூப்பிட்டதற்கு காரணத்தை சொல்லுங்க... சார், 



“அது பெரிய ரகசியம் எல்லாம் இல்லா சார்....,நாமா..கடைசியா சந்திச்சப்ப.... நம்முடைய வேங்கை மகன்... வயித்து வலி தீர... ஆயிரம் ரூபா கொடுத்து  தனியாக ஏமாந்த கதையை நீங்க பதிவிட்டதை படிச்சேன் சார்.... அத படிச்சல இருந்து   நீங்க எனக்கு  தலைவரா தெரியிறிங்க ... தலைவரே.....!!!


“ ஆ.... அப்படியா...!! வேங்கை மகன் கதையைத்தானே.. எழுதினேன்.... அதுக்கு தலைவர் பட்டமா...???..சே.... தலைவர் பட்டம் தருகிறவருக்கு....

“ அறிவு எல்லாம் இல்லாமலா...? அதுல... ஒத்தையில ஏமாந்த வேங்கை மகனா...ஒங்கள பாவிச்சு எழுதியிருக்கீங்களே!  அது ஏன்?...

“  ஓ..... கதையின் நாயகன் வேங்கையின் மகனாக என்னை பாவித்து எழுதிய மேட்டரா...? அய்யா வேங்கையின் மகன பத்தின கதையை சொன்னவருக்கு.... வேங்கையின் மகன பத்தி இருந்த பயத்தை.. எனக்குள்ளும் பரப்பி விட்டுட்டார்
அந்த பயத்தில்  வேங்கையின் மகனாக என்னை பாவித்து எழுதிவிட்டேன்... 

”சென்ற முறை சந்திப்பில்  வேங்கையன் மகனே...... அந்தகதையை சொல்லி விட்டானே...?..

“ வேங்கையன் மகன் சொன்னபிறகுதானே.. பயம் ஒளிந்து,.. வேங்கையன்  ஒத்தையில..“ வயற்றுவலி தீர.. ஆயிரம் ரூபா கொடுத்து ஏமாந்த கதை” எழுதின விபரத்தை சொன்னேன்...

“ நீங்க எங்க.. எங்க சொன்னீங்க..... வேந்தன்ல சொன்னான்... 

அவருக்கும் பயம் தெளிந்து விட்டதனால்தான்... நான் எழுதினதாக சொன்னார்.

“ அய்யா. என்னை தலைவர் என்று சொன்னது தப்பு... வாபஸ் . வாங்குங்கள்
அந்தக் கதைப்படியே.. ஏமாந்தாவன் எல்லாம் தொண்டானாகத்தான் இருப்பான் தலைவனாக இருப்பனா.. அய்யா..  . தற்போதைக்கு வேங்கையனையே தாங்கள் தலைவர் என்று அழைக்கலாம்  ..

“ அவன்தான் உங்கள் அகராதி படி ஏமாந்தவனாச்சே.... அவனை எப்படி..?


“ ஏமாந்த வேங்கையன் என்னை மிரட்டுகிறாரே..??”

“ எழுதியதற்க்காகவா...?”

“ வேங்கையனை ஏமாற்றிய  பெண்ணுடன் நான் பேசியதற்க்காக....?”

“என்னது நீரும் ஆயிரம் ரூபா கொடுத்து ஏமாந்தீரா..?...


“ அதில்லய்யா..”

“பின்ன.. எதுய்யா..ஹா.....ஹா....ஹா....”

“ வேங்கையன் பின்னால..நிற்கக்கூட தகுதியில்லாதவன்ய்யா.... அழகிலும், பணத்திலும் அவரேங்க... நானேங்கே....”

“ யோவ்.... ஏமாறுவதற்கு... ஆசையும் மண்டையில களி மண்ணும் இருந்தாலும் போதும்ய்யா...”

“ நா... சொல்ல..வந்தது... என்னான்னா...”

“ ம்ம்ம்... சொல்லுங்க..... அங்க என்ன பார்வை.....ஓ...புரிஞ்சு போச்சு

 “ வேங்கையன ஒத்தையில ...ஏமாத்தின அந்தப் பொண்ணு, எங்கம்மா இறந்து போனத பத்தி விசாரிச்சது... எங்கம்மா இறந்து ரெண்டு வருசமாச்சே..இப்ப கேக்குறீங்களேன்னு கேட்டு... விபரத்தை சொல்லிகிட்டு இருந்தேன்... அத வேங்கையன் எங்கிருந்தோ பாத்துகிட்டு இருந்துகிட்டு இருந்திருக்காரு.... அந்தப் பொண்ணு போனப்பிறகு...வந்து வேங்கையன் என்னை சத்தம் போட்டாரு...

”சட்டுபுட்டுன்னு பேசிட்டு ..போயிருந்தா வேங்கையன் மகனுக்கு கோபம் வந்திருக்காதுல.....அரைமணி நேரமா பேசிக்கிட்டு இருந்தா... பாசமா வரும்...

அட.... நீ எப்படா ..வந்தே....

.இவர.. அங்க என்ன பார்வைன்னு கேட்டீங்கள..அவரு என்னத்தான் பாத்தாரு..... எனக்கு பின்னால வந்த பொம்பளய பாக்கல..நீங்கதான்  அந்த பொம்பளய பாத்துகிட்டு... இவர கேட்டீங்க.......”

“ ஏன்னடா..உங்களுக்கெல்லாம் பொடனியில..கண்ணு இருக்குமோ..டா..?”

“ உங்களுக்கு தெரியலைன்னா நா..என்ன செய்வது. அது இருக்கட்டும்..... சாரு..என்ன சொல்ல வர்ராரு.....

அந்தப் பொண்ணு கிட்ட பேசியதை கண்டு வேங்கையன் சத்தம் போட்டதைதான் சொல்லிகிட்டு இருக்காரு சாரு....  சத்தம் போட்டதின் காரணத்தைதான் நீ.... சொல்லிட்டியே..

”சாரு..அந்தப் பொண்ண கரைட் பன்னுகிறதா நிணச்சு ..வேங்கையன் சார சத்தம்.... போட்டாருக்காரு...!!!!

“ அதப்பத்திதாண்டா.. சாரு  ..... அந்தத் திறமையெல்லாம் தனக்கு கிடையாது. அந்தத் திறமையை அடைவதற்க்கான  அழகு, பணவசதி. போன்ற தகுதியெல்லாம் தனக்கு கிடையாது. என்று சொல்லிக்கிட்டு இருக்காரு...

“ ஆமா..ஆமா..சாரு சொல்வதிலும் உண்மை இருக்கிறத நீங்க நம்மித்தான் ஆக.. வேண்டும்... சார..பத்தி.... நாம வேங்கையனிடம் சொல்லனும்....

”அழகும் அறிவும், செல்வாக்கும் உள்ள வேங்கையன் ஆன நீயே... ஏமாந்திருக்கும்போது... எந்தத் தகுதியும் திறமையும் இல்லாத, விடிந்தா வேலையும்  இரவு அடஞ்சா தூக்கமும் உள்ள சாரு...எப்படியப்பா  உன்ன ஏமாத்தின அந்தப் பொன்ன கரைட் பன்னுவாரு” ன்னு எடுத்துச் சொல்லனும்.

“ வேங்கையனிடம் சொல்லும் போது ஆண்மையும் வீரமுனு்னு சேர்த்து சொல்லனும்டே...””
“அப்போ..எனக்கு  ஆண்மையும்... வீரமும் இல்லேங்கிறீங்களா...???” சார்....


“ அது இருக்கா.. இல்லையான்னு உங்களுக்கே.... தெரியாதபோது,  எங்களுக்கு எப்படி  தெரியும்.....அ்பபடி..இப்படின்னு சின்ன வீடு, குச்சி வீடுன்னு  ஏதாவது வச்சிருந்தா...?  காத்து வாக்கில...எங்களுக்கு வந்திருக்கும்.....  உங்க உறுப்ப..... ஒண்ணுக்கு  கழிக்கிறவதாக்கும் பயன்படுத்தி இருக்கிங்களான்னு எங்களுக்கு சந்தேகமாக இருக்கு.... சார்.”

“ சார் ஒன்ணுக்கு போகலலேன்னா....இன்னேரம்““““”””""

“ பரலோகம் போயிருக்பீங்களா....??? அங்கெல்லாம் உங்களுக்கு இடம் கிடையாது சார்.. கல்யாணம் ஆனவாங்கள்தான் சந்நியாசம் எனும்போது. உங்களுக்கு அதுவும் கிடையாது  சார்,”

“ அப்போ... காயடித்த மாடு”ன்னு சொல்றீங்களா?  சார்.....

“சே... சே....அந்த தகுதியெல்லாம்  உங்களுக்கு கிடையாது சார்,.. அங்க. பாருங்க வேங்கையன் வருகிறான்.....  என்ன வேங்கையா....  ஒத்தையில நிக்கிறீங்க.. வாங்க......  சார.... சத்தம் போட்டீங்களாமே.....சார பாத்து பயப்படலாமா.... வாங்க  சார்......


“ சார்.. உங்கள பத்தின எழுதிய கதையை படிச்சி்ங்களா  வேங்கையன்... இல்லையா...... இந்தா படிங்க...... மொதல்ல....மத்தத அப்புறம் பேசிக் கெல்லாம்
                                        

2 கருத்துகள்:

  1. இம்சைகள் இன்னும் வரட்டும்...

    பதிலளிநீக்கு
  2. நமது நாட்டில் தலைவராவதற்கு முதல் தகுதி ஊரை அடித்து உலையில் போட தெரிந்து இருக்க வேண்டும்.மக்களையும் கவர முடியும்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...