சனி, மே 14, 2011

சத்தியமாக...சத்தியமாக, உண்மையாக......உண்மையாக, நான் சொல்வதெல்லாம் உண்மை.

பெரிய.பெரிய பத்திரிகைகளும்,சின்ன சின்ன பத்திரிக்கைகளும்.தமிழ்

நாட்டில் யார் வருவார் என்று அவுக,அவுக சார்பு கண்ணோட்டத்தில்

தேர்தல் கணிப்பு வெளியிட்டயிருந்தனர். அவர்களின் கணிப்புக்கு

நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. நர்னும் ஒருஆசையில்

தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் நேர்முக பேட்டி

எடுத்தேன்.அந்த பேட்டியில் சிவற்றை உங்களுக்கு................
----------------------

வில்லாதயுத ராமன் ஆண்டாலும்,அந்த ராமனின் பொண்டாட்டியோ

வப்பாட்டியோ ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் அந்த ராவணின்

வாரிசுகள் ஆண்டாலும்,புதுசா வந்திருக்கிற பழைய கள்ளுகள் ஆண்டா

லும் ஏழை பொதுமக்களுக்கும், ஏழைகுடிமக்களுக்கும், எந்தவொரு


சந்தோசமும் ஏற்ப்படபோதில்லையாம்.
-----------------------
நானு.- என்னங்கய்யா,ஓட்டுபோட்டபிறகு ரிசல்ட் வரப்போகுது.முடிவு


யாருக்கு சாதகமாக இருக்கப்போவுது, யாரு வந்தா நல்லாயிருக்கும்.

பொதுசனம்.- நீ கேக்கறத பாத்தா எரியிற கொள்ளியில எந்த கொள்ளி

நல்ல கொள்ளியின்னு இருக்கு.

நானு.- அப்படியா, கேட்டேன். சரிங்கய்யா! அப்படியே வச்சுகுங்க. எந்த

கொள்ளி நல்ல கொள்ளின்னு சொல்லுங்க.

பொதுசனம்.- அடபோப்பா.....நீவேற. இதே சோலியா இருப்பாங்கல்ல

அவுகள பாத்து கேளு

நானு.- சரிங்கஅய்யா!
------------------

நானு.- அக்கா, என்னக்கா, இன்னிக்கு வேலைக்கு போகலையா?

பொதுசனம்.- இல்ல தம்பி, இன்னிக்கு, தேர்தல் ரிசல்ட் சொல்றாங்கலாம்ல

அதனால, எங்க ஓனரு, லீவு விட்டுட்டாரு!

நானு-. தேர்தல்ல ஓட்டு போட்டிங்களா?

பொதுசனம்.- பின்ன, ஓட்டு போடலாட்டி செத்ததுக்கு சமம்மில்ல

நானு-. நானு ஓட்டு போடலியே யக்கா,நா செத்ததுக்கு சமமா?

பொதுசனம்.- சே.....சே.....நீதான் குத்துகல்லாட்டம் ஏ.....ம்.....முன்னாடி

ஒக்காந்து இருக்கியே!.ஆமா, ஏ.....ன்....ஓட்டு போடல?

நானு.- லிஸ்டுல ஏம்பேரு இல்லியாம்,, அதனால...எனக்கு ஓட்டு

இல்லேன்னுட்டாங்க, அதுசரிக்கா,யாரு வந்தா நமக்கு நல்லதுக்கா?

பொதுசனம்-. யாரு வந்தா, நமக்கென்னப்பா?.நமக்கு வேண்டியவங்க

வந்தா.. நம்மல்ல கோபுரத்துலயா து.ாக்கி வச்சுருவாங்க..கடவுளே!

வந்தாலும் நம்மபாடு தீருமா ,சொல்லு?
------------------


அ.தி.மு.க.சனம்-. அதிலென்ன சந்தேகம் அம்மாவின் பொற்கால

அருளாட்சிதான்.அம்மா வந்தாதான் இந்தநாடு உருப்படும்.குடும்ப ஆட்சியின


ஊழலை அம்மா ஒருவரால்தான் தண்டிக்கமுடியும். அரசு ஊழியர்களின்

கொட்டத்தை அடக்கமுடியும். புரட்சிதலைவரின் கனவை அம்மா

ஒருவரால்தான் நனவாக்க முடியும்.

நானு-. சரிங்கண்ணே, அம்மா வந்துட்டாங்க, உங்களுக்கு என்ன

நன்மையின கிடைக்கும்.

அ.தி.மு.க.அண்ணனின் மனைவி..- ங்ங்ங்.....இவருக்கு ஒருகட்டு பீடியும்

பாட்டில் தண்ணியும் கிடைக்கும்.............,பிள்ள ப்ளஸ்டூவுல பாஸயிருச்சு

அடுத்து,படிப்பா? கல்யாணமா?ன்னு வழியெக்காணோம்.

அ.த.மு.க.சனம்-. ஏய்....சும்மா இருடீடீ.....ஓ.....ஊத்தவாயவச்சுகிட்டு

அம்மாவின் ஆட்சியல வழி கிடைக்கும்..டீ.

அண்ணனின மனைவி-. ஆமப்பா,இந்த ஊத்தவாயன் சொல்றதுமட்டும்

வுடனே பழிச்சிரும்ப்பா?

அ.தி.மு.க.அண்ணன்-. உனக்கெல்லாம் என்னடி தெரியும். பொட்டநாயி!

அண்ணனின் மனைவி-. இந்த பொட்டநாயி இல்லேன்னா.,தெரியும்டா

உன்நாத்தம்
.
அ.தி.மு.க.அண்ணன்-. ஏ.....ய்.... என்னடீ.. வாயி நீலுதுது.....

நானு.- அண்ணே........அண்ணே......அண்ணே!!!!

--------------------------------------

தி.மு.க.அண.ணன்- தலைவர். இந்த மக்களுக்காக எவ்வளவோ செய்து

இருக்கார்.இன்னும் நிறைய செய்வார். தலைவர்தான் வருவார். வரனும்

ஏன்னா, தலைவர் எந்த பாகுபாடு பார்க்காமல் மாற்றுக் கட்சி தொண்ட

னுக்கும் டி.வீ கேஸ்அடுப்பு,காப்பீட்டு சிகிச்சை, வழங்கியிருக்கார்.

உங்க தெருவுல அய்ந்தாரு பேரு வீடு கட்டியீகருக்காங்கன்னா. அதுக்கு

காரணம் தலைவரின் நல்லாட்சிதான் அரசு ஊழியர்களுக்கு நடந்த

கொடுமைகளுக்கு பரிகாரம் கண்டவர் தலைவர்தான்.தலைவரின்

நன்மையை மறந்தவர்கள் நன்றி கெட்டவர்கள். ஆனால் நம் மக்கள்

நன்றி கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.இன்னும் சிறிது நேரத்தில்

தெரியப்போகின்றது.

நானு-. செய்நன்றி மறப்பது நன்நன்று இல்லீங்கன்னா!

. -----------------------------

நானு-. சார்,யாரு வருவாங்ன்ன..............னு.

அரசுஊழியர்-. யாரு,வருவாங்கன்னு இன்னிக்குள்ள தெரிஞ்சுரும்ல்

அப்புறம் என்னத்துக்கு?

நானு-. இருந்தாலும். உங்க.....கணிப்பு.....?

அரசுஊழியர்.- கலைஞர் ஆட்சியில,சம்பளம் மற்றும் உயர்வுக்கும்

வேலைக்கும் பிரச்னையில்ல. அந்த அம்மா வந்தாலும் பிரச்சினை

இல்லதான.ஆனால் அவுரோட ஒப்பிடமுடியாது.

---------------------------------

டாஸ்மாக் குடிமக்கள்.- டேய் கண்ணா போன தேர்தல்ல,காசுக்கும்

பஞ்சமில்ல, சரக்கும் வில கம்மியா இருந்துச்சு,தேர்தலும் கலகலப்பா

இருந்துச்சு. இந்த தேர்தல்ல காசும்கிடைக்கல,சரக்கும் விலை ஏறிப்

போச்சு,இந்த தேர்தல்ல சந்தோசம்மில்லப்பா?

நானு.- அப்ப,இந்த்த் தேர்தல்ல ஓட்டு போடலியா?

குடீமக்கள்-. ஏங்...கையப்பாரு, வச்சுட்டான் பாரு ஆப்பு,.