திங்கள், செப்டம்பர் 12, 2011

நேற்று-இன்று-நாளை-நிரல்கள்


நேற்றைய நிகழ்ச்சிகள்.

சாதிவெறியும் அதிகார வெறியும் நிறைந்த பங்களா
நாய்களும்.சொரி நாய்களும் சேர்ந்து கடித்து குதறி
யதில் ஏழு அடிமைப்பட்ட மனித உயிர்கள் பலியாகின.

ஜனநாயகம்,மனித உரிமைகள் போன்றவைகள் என்ன
வென்றே தெரியாத தங்களின் சுகபோகத்திற்காக எள்ளு,
கொள்ளு என ஏகப்பட்டதை போட்டு இரு நாய்களையும்
சீமான்களும் சீமாட்டிகளும் அவர்களின் எடுபிடிகளும்
வளர்க்கின்றனர். தன் எஜமான்கள் ஏவிவிட்டாலும் ஏவி
விடாமாலும் இருந்தாலும். இந்த இரு நாய்களும் ஏழை
உழைக்கும் மக்கள் பணிந்து ஒதுஙகிச் சென்றாலும்
கடித்து குதறவே செய்யும்....இது இயற்கையின் நியதி.

இன்றைய நிகழ்ச்சிகள்.

பங்களா நாய்களாலும்,சொரி நாய்களாலும் கடித்து
குதறப்பட்ட மக்களுக்கு ஆறுதல்களோ, பண முடிப்
புகளோ,மற்றவைகளாலோ நிரந்தர தீர்வைத்
தருவதில்லை.கடித்து குதறிய நாய்களையோ,ஏவி
விட்டவர்களையோ.நல்லவர்களால்,நீதி மான்களால்
.தண்டித்துவிடமுடியாது.கடிக்காமல் இருக்கவும்
செய்யமுடியாது.நாயின் குணத்தை யாராலும் மாற்றி
விடமுடியாது காலங்காலமாகவும் நாகரிக காலத்திலும்
ஆண்டானுக்கு ஒருநீதீ! அடிமைக்கு ஒரு நீதீ இதுதான்
இன்றுவரை கோலோச்சுகிறது..இந்த அநீதீயை மாற்ற
ஒரேநீதீயைப்பெற ஒரே வழிதான் உண்டு. அது உழைக்கும்
மக்கள் ஒன்றாக திரண்டு புதிய ஜனநாயக அரசை அமைப்
பதுதான்.

நாளைய நிகழ்ச்சிகள்.

பங்களா நாய்களிடமிருந்தும்,சொரி நாய்களிடமிருந்தும்
சீமான் சீமாட்டிகளிடமிருந்தும் அவர்களின் எடுபிடிகளிட
மிருந்து எதிர்கால உழைக்கும மக்களின் வாரிசுகளை
பாதுகாத்திட பலவற்றை மற்றும் சிலவற்றை நம்பி
மோசம் போகாமல் புரட்சிகர இயக்கங்களில் அணி
திரள்வதே.சாலச்சிறந்தது..

2 கருத்துகள்:

 1. காணவில்லை - சீமான்..
  ஈழ தமிழர்களுக்காக உறுமும் சீமான் தமிழக தமிழர்களை தமிழர்களாய் எண்ணவில்லை போலும்..
  செத்தவன் தமிழன் தானே..

  பதிலளிநீக்கு
 2. மதுரைக்கு உருமியபடி வந்தாராம்,போனா நாய்கிட்ட கடிபடனுமுன்னு யாரோ சொன்னாங்களாம். அதனால
  பம்மிகிட்டு போயிட்டாராம்

  பதிலளிநீக்கு