வியாழன் 06 2014

இவர்கள்......இப்படியும்..............தப்பிக்கலாம்.......

திண்டுக்கல் மாவட்டம். வீரம் படத்தில் டைட்லில் காட்டப்படும் ஒட்டன் சத்திரம் அருகே ஆனைமலையான் பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்் இவரது மனைவி சின்னகருப்பத்தாள்.

இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிருக்கு முன் சற்றுத்தள்ளி அமர்ந்த பேசிக் கொண்டு இருந்தனர்.இருவரும் பேசிக் கொண்டு இருப்பதைக் கண்ட மர்ம நபர் ஒருவர். இவர்கள் வீட்டிற்க்குள் நுழைந்தார்.

மர்மநபர் ஒருவர், நைசாக தங்கள் வீட்டிற்க்குள் நுழைந்ததை சின்னகருப்பத்தாள் பார்த்துவிட்டார்.

கனவனும் மனைவியுமான இருவரும்.அய்யோ! குய்யோ! என்று சத்தம் போடாமல் வீட்டீற்கு அருகில் வந்து மர்ம நபரை கவனித்து உள்ளனர்.

வீட்டீற்குள் நுழைந்த மர்மநபரோ , நேராக சென்று பீரோவை திறந்தார். இதைக் கவனித்த தம்பதினர் இருவரும். கமுக்கமாக  மர்ம நபர் தப்பிக்க முடியாதவாறு ,வீட்டின் கதவை  வெளிப்புறமாக அடைத்து பூட்டி விட்டு, பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தனர்.

தங்கேவேல் வீட்டிற்குள்  புகுந்த திருடன்   மாட்டிக்கிட்டான் என்ற விசயத்தை கேள்விப்பட்டதும் வீட்டின் முன் கூட்டம் கூடியது.

தான் வந்த வேலையின்போது தான் மாட்டிக்கிட்டதை உணர்ந்த மர்ம நபர், வீட்டின் முன் கூடியுள்ள கூட்டத்திடம் மாட்டிக்கிடாமல்  தன் உயிரை சுமந்த உடலை போட்டு விட்டு  தப்பித்துவிட்டார்.

வீட்டீற்கு வெளியே நின்றவர்கள் மெதுவாக கதவை திறந்து.மர்ம நபரை பாத்தபோது, வீட்டிலிருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து  இறந்திருப்பதைக்  கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரனை செய்ததில்.அந்த நபர் அம்பிளிக்கை அருகே உள்ள ஒத்தையூரைச சேர்ந்த பெரிய்ய..சாமி என்றும் இவர் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்ததாம்.

ஆக........பல திருட்டு வழக்குகளில் அனுபவம் பெற்ற மர்மநபர்  தப்பிக்க வழியின்றி தானே தூக்கு மாட்டிக் கொண்டு தப்பித்தார் என்றும் சொல்லலாம்

இல்ல.......வீட்டீற்கு வெளியே நின்ற கூட்டம் போட்ட போடில் செத்துப்போன மர்மநபரால் வழக்கு, கோர்ட்டு என்ற பிரச்சினையில  இருந்து தப்பிக்க , திருடனே தூக்கு மாட்டிக் கொண்டு செத்தான் என்று சொல்லி தப்பிக்கலாம்.

எப்படி இருந்தாலும் போடு பணம் ,மொய்ப் பணம் கிடைத்துவிட்டதால், வேலையெத்த வேலையை முடிக்க எண்ணி, தப்பிக்க வழியின்றி திருடன்   தற்கொலை செய்து கொண்டான் என்று வழக்கை முடித்தும் தப்பிக்கலாம்

முடிவாக மேற்சொன்ன முடிவுகளின்படி திருடனோ,கூட்டமோ,போலீசோ  இப்படியும் தப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...