புதன் 08 2015

அல்லாவின் பக்தர், அல்லாவின் பக்தரை விரட்டி பிடித்த கதை...

படம்-tamizhvirumbi.blogspot.com
அல்லாவின் பக்தர் ஒருவர். அல்லாவை தொழுவதற்க்காக அருகிலுள்ள பள்ளி வாசலுக்கு சென்றார். தொழுவதற்கு முன் தன்னுடன்  கொண்டு  வந்திருந்த லேப்டாப்பை.. அல்லாவின் பள்ளி வாசலின் வளாகத்தில் வைத்துவிட்டு தொழுதார்.

அப்போது.அல்லாவை தொழுது கொண்டு இருந்த இன்னொரு அல்லாவின் பக்தர் தொழுகையை சட்டுபுட்டுனு முடித்துக் கொண்டு. அல்லா நமக்கு  அருளிவிட்டார் என்ற எண்ணத்தில் வளாகத்தில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

தொழுது கொண்டிருந்த லேப்டாப்புக்கு சொந்தக்காரான அல்லாவின் பக்தர் தொழுகையின் ஊடே..தன் லேப்டாப்பை கவனித்தபோது.. அல்லாவின் பக்தர் ஒருவர் தனது லேப்டாப்பை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிப்பதை கண்டார்.

உடனே. அல்லாவை தொழுவதை  பாதியிலே நிறுத்திவிட்டு ஒட்டம் பிடித்துக் கொண்டிருந்த அந்த அல்லாவின் பக்தரை விரட்டிக் கொண்டு இந்த அல்லாவின் பக்தர் ஓடினார்.

 ஓடிய ஓட்டத்தின் முடிவாக..லேப்டாப்பை தூக்கி கொண்டு ஓட்டம்பிடித்த அல்லாவின் பக்தரை பொது மக்களின் உதவியுடன் விரட்டிச் சென்ற அல்லாவின் பக்தர். பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.


இத்துடன் அல்லாவின் பக்தரை., அல்லாவின் பக்தர் விரட்டி பிடித்த கதை முடிவற்றது.

31 கருத்துகள்:

  1. தொழுது கொண்டிருந்த லேப்டாப்புக்கு சொந்தக்காரான அல்லாவின் பக்தர் தொழுகையின் ஊடே..தன் லேப்டாப்பை கவனித்தபோது..

    எப்படி நம்பிக்கை! அல்லாவின் பக்தர் நடைமுறையை உணர்ந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடை முறையை உணர்ந்ததால் முழு மனதுடன்கூட தொழுக முடியவில்லை அய்யா...

      நீக்கு
  2. கதையின் கருப் பொருளாய் அமைந்த இடம்
    சரியான தேர்வாக தெரிய வில்லை! தோழரே!
    நேர்மறையான நிகழ்வுகள் இடம் பெற வேண்டிய இடத்தில்,
    எதிர்மறையான நிகழ்வுகள் முழு நிலவாய் ஒளி வீச வில்லை!
    பிறை நிலவு!
    த ம 1
    நட்ப்யுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழுகையின் போது தோன்றும் எதிர்மறை சிந்தனையை வெளிப்படுத்தத்தான் கதையின் கருப்பொருள் நண்பரே.....

      நீக்கு
    2. பிறை நிலவு இல்லை நண்பரே! வலிப்போக்கன் சொன்னதுதான் யதார்த்தம்...எங்கும் நிகழ்வது....அதற்குத்தான் எல்லா மதங்களும் சொல்லுவது மடியில் கனமில்லாமல் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என்று....

      நீக்கு
  3. அல்லாவின் பக்தரென்றால் பத்தரை மாற்று தங்கம் என்பதல்ல, அவர்களும் மனிதர்கள் தான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பலபேருடைய செருப்புக்கள் காணாமல் போவது சகஜம். மனிதனை நேர்வளிபடுத்ததான் மார்க்கம் !!!!!!!
    இவ்வாறு நடந்தால் பறிகொடுத்தவர் செய்தது போல் செய்ய மார்க்க சட்டம் இருக்கிறது அய்யா !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே செருப்புகளும்.... இங்கே லேப்டாப்புகளும் காணாமல் போவது சகஜம் என்று கொள்ளலாமா..திரு . அதிரைஅன்புதாசன் அவர்களே!!!

      நீக்கு
  4. தங்களின் பதிவில் ஒரு கிண்டல் உள்ளதை புரிந்து கொள்ளமுடிகிறது. இதில் மனிதனுக்கு பாடமும் உள்ளது இதற்கு தான் நபி அவர்கள் அன்றே சொல்லியுள்ளார்கள் ''அல்லாவின் மீது நம்பிக்கை வை ஒட்டகத்தையும் கட்டிப்போடு என்று''. நம்மளுடைய உடைமைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும் அல்லாவின் மீது நம்பிக்கை உள்ளது என்பதற்காக பள்ளிவாசலின் வெளியே வைதுவில்ல்டு வந்தால் யாரவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் தானே !

    நன்றி தோழர்

    அன்புடன் M. செய்யது
    துபாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவில் ஒரு கிண்டல் உள்ளதை புரிந்து கொள்ளமுடிகிறது. இதில் மனிதனுக்கு பாடமும் உள்ளது---- புரிந்து கொண்டதற்கு நன்றி! திரு.தங்களின் பதிவில் ஒரு கிண்டல் உள்ளதை புரிந்து கொள்ளமுடிகிறது. இதில் மனிதனுக்கு பாடமும் உள்ளது- புரிந்து கொண்டதற்கு நன்றி! திரு.syedabthayar721 அவர்களே!!!

      நீக்கு
  5. பொது இடத்தில் இருப்பின்
    கடவுள் எமக்காகத் தந்தாரென
    களவெடுத்தது பிழையாச்சோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பிழையை சரி செய்ய கடவுளால் முடியவில்லை..அய்யா..

      நீக்கு
  6. பரவாயில்லை ..ஒரு வழியாக பிடித்துவிட்டாரே... ! :-) ... கோயில், மசூதி, சர்ச் போன்ற வழிபாட்டுத் தளங்களிலேயே திருடுபவர்கள் பொது இடத்தில் சும்மாவா இருப்பார்கள்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழுகையை நிறுத்திவிட்டு விரட்டி கொண்டு ஓடியதால்தான் பிடித்துவிட்டார். பொது இடத்தில் சும்மா இருக்க மாட்டார்கள் என்பது ண்மைதான் அய்யா...

      நீக்கு
  7. வணக்கம் வலிப்போக்ரே,
    எங்கோ நான் படித்தது, எல்லாம் திறந்து இருக்கும் யாரும் எடுக்க மாட்டார்கள் என்று,,,,,,,,,,,,
    ஒஒஒ அங்க மட்டும் தான் சாமியா,,,,,,,,,,,,,
    அருமை, வாழ்த்துக்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே..படித்தீர்கள்... நிணைவு படுத்தி சொன்னால் ..மற்றவ்களுக்கும் எனக்கும் தெரிந்து கொண்டதில் பயனுள்ளதாக இருக்கும்

      நீக்கு
    2. அது ஒரு மார்க்க பக்தர், தனது வலைப்பூவில் எழுதிய பதிவு. அதை நானும் படித்திருக்கிறேன். அதாவது சவுதி அரேபியாவில் கடைகளில் ஆளில்லாமல் இருக்குமாம். கடைக்கு வருபவர் தனக்கு வேண்டிய பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய காசை, அங்கு வைத்து விட்டு போய்விடுவார்களாம். அப்படி திருட்டுக் குண்மற்ற தனிப்பிறவிகளாம் அங்கிருக்கும் அல்லாவின் பக்தர்கள் :))

      நீக்கு
    3. ஆ...ஆ...அப்படியா...நிஜத்திலா...? கனவிலா??

      நீக்கு
    4. ஹா ஹா ஹா......
      அது மதப் பிரசாரத்தின் ஒரு அங்கம் அய்யா !

      நீக்கு
    5. எல்லாம் திறந்து இருக்கும் ஆனா யாருமே எடுக்க மாட்டாங்க என்று நானும் தமிழில் முன்பு படிச்சேனே, சிந்தித்து குழம்பி கொண்டிருந்தபோ நண்பர் கரிகாலன் சொன்னதின் பின் ஒரு தெளிவு கிடைத்தது. அது (அரபுமத) பிரசாரத்தின் ஒரு அங்கம்.

      நீக்கு
    6. எனக்கும் தெளிவு பிறந்துவிட்டது.நன்றி!!

      நீக்கு
  8. பதில்கள்
    1. கேள்விகுறி அடையாளம் மட்டும் சொல்லி கேள்விக் கேட்டால் தங்கள் கேள்வியை நான் எப்படி புரிந்து கொள்வது நண்பரே...

      நீக்கு
  9. இப்படிப் பட்ட ஆட்களைத் திருத்த எந்த கடவுளாலும் முடியவில்லை என்பதே நடைமுறையில் நாம் காணும் உண்மை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது சொன்ன கடவுளையே மதிக்க மாட்டுகிறார்களே!!

      நீக்கு
  10. ஹஹஹஹ் இதுதானே யதார்த்தம்....கோயிலானால் என்ன மசூதி ஆனால் என்ன, தேவாலயமானால் என்ன பௌத்த சமண மடங்களாய் இருந்தால் என்ன..மனிதன் மனிதன் தான்....ஒருவன் தொழும் போதெ தனது பொருட்களின் மீது கண்...மற்றொருவன் தொழுதுகொண்டே ஏதேனும் கிடைக்காதா என்ற நோக்கத்துடன்...கோயிலில் செருப்பு விடுபவர்கள் கூட ஐயோ நம்ம செருப்பு இருக்கா என்று அவ்வப்போது நினைத்துக் கொண்டுதான் தொழுகின்றார்கள்...ஹஹஹ்

    யதார்த்தமான கதை...

    பதிலளிநீக்கு
  11. நன்றி! அய்யா... என்னை திக்கு முக்காடச் செய்தமைக்கு....!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...