செவ்வாய் 29 2014

வைகை கூவமாவதை தடுக்க முடியுமா???..

படம்-livemadurai.yavum.com

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைப் போல மதுரை நகரில் நிலத்தடி நீர் மட்டம் 400லிருந்து 1000வரை இறங்கிவிட்டது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீரின் மாதிரிகள் குடிக்க உகந்தாக இல்லை. நிலத்தடி நீரின் தன்மை மாறி மாசுபடும் அளவும் கூடிக்கொண்டே போகிறது.

சுமாரான நிலையில் இருந்தவைகள் எல்லாம் உப்புத்தன்மைக்கு மாறி உள்ளது.

ஆற்றுக்குள் உள்ள நீரும் மாசு பட்டுள்ளது. பாதாள சாக்கடையின் நீரும் தடுப்பாரின்றி கலப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

வருடம் தவறினாலும் மேலே சொல்லப்பட்டவைகள் கூடிக் கொண்டே செல்கின்றன. இநத நிலையிலும் எந்த நிலையிலும் தூங்கா நகரமான் மதுரையில வருடம் முழுவதும் கூத்துக்கும் பாட்டுக்கும் குறைச்சலுமில்லை, பஞ்சமுமில்லை.

அவைகளில் சில...மீனாட்சீ கல்யாணம், தேரோட்டம், வீதிஉலா, சித்திரைத்திருகுவிழா,  இவைகளுக்கு பின் தொடர்கதையாக தெருவுக்கு தெரு உருவாக்கப்பட்டு இருக்கும் தெரு கோவில்களின் கும்மாளங்கள்....

இவைகளுக்கு ஈடாக...நோன்புகள் ,இப்புதார்கள், தொழுகைகள்,..... இவைகளுக்கு போட்டியாக  அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், ஜெப ஆராதனைகள்,   இப்படியாக.............

என்னதான் சுற்றுசூழல் ஆய்வுகளை் பற்றி ஆய்வாளர்கள் அதிர்ச்சி செய்திகள் தந்து பயமுறுத்தினாலும், மெனக்கெடுத்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராடினாலும்................

தூங்காமலே தூக்கத்தில் புலம்புவோர்களாலும்,  தூங்கீனு இருக்கிற மாதிரி நடித்துக் கொண்டு இருப்பவர்களலும். வைகை கூவமாவதை தடுத்து நிறுத்தவே முடியாது....

அப்படி வைகை கூவமாவதை தடுத்து நிறுத்தவது என்பது  உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான் பயங்கரவாதமாகும். அதாவது ஆளும் மத்திய-மாநில அரசை எதிர்ப்பது  அரசு பயங்கரவாதமாகும்.

 மீத்தேன் வாயு எடுப்பதால்  காவிரி நாசமாவதைப்போல ..வைகை கூவமாவதையும், தடுக்கவே முடியாது.

8 கருத்துகள்:


  1. முடியும் நண்பா அது நல்லொழுக்கமான மனிதர்கள் கையில் இருக்கிறது அரசாங்கத்தை குறை சொல்லி காரியமில்லை.

    பதிலளிநீக்கு
  2. இந்த நிலை வைகைக்கு மட்டுமல்ல,நாட்டில் ஓடுகின்ற எல்லா ஆறுகளுக்கும்தான் !

    பதிலளிநீக்கு
  3. நீர் மாசடைந்து கொண்டே போகிறது,ஆனா மக்கள் அக்கறையோ எங்கோ இருக்கிறது. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஒழுக்கம் உடைய ஒரு சதவீதத்துக்குகூட இல்லாத மக்களால் என்ன செய்துவிடமுடியும் நண்பா???

    பதிலளிநீக்கு
  5. எல்லாமாவட்டம் போலத்தான் மதுரையும் என்று குறிப்பிட்டு உள்ளேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி! வேகநரி...அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  7. ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னரே கலைவாணர் ஒரு படத்தில், " இது வைகை அல்லடீ ! கை வை ! " என வற்றிய நதியை காட்டி சொல்வார் ! அந்த நகைச்சுவை அவலமான உண்மையாகிவிட்டது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  8. இன்னும் நகைச்சுவையாக சொன்னதெல்லாம் உண்மையாகும் காலம் வந்திருச்சு திரு. சாமானியன்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...