| படம்- |
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைப் போல மதுரை நகரில் நிலத்தடி நீர் மட்டம் 400லிருந்து 1000வரை இறங்கிவிட்டது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீரின் மாதிரிகள் குடிக்க உகந்தாக இல்லை. நிலத்தடி நீரின் தன்மை மாறி மாசுபடும் அளவும் கூடிக்கொண்டே போகிறது.
சுமாரான நிலையில் இருந்தவைகள் எல்லாம் உப்புத்தன்மைக்கு மாறி உள்ளது.
ஆற்றுக்குள் உள்ள நீரும் மாசு பட்டுள்ளது. பாதாள சாக்கடையின் நீரும் தடுப்பாரின்றி கலப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
வருடம் தவறினாலும் மேலே சொல்லப்பட்டவைகள் கூடிக் கொண்டே செல்கின்றன. இநத நிலையிலும் எந்த நிலையிலும் தூங்கா நகரமான் மதுரையில வருடம் முழுவதும் கூத்துக்கும் பாட்டுக்கும் குறைச்சலுமில்லை, பஞ்சமுமில்லை.
அவைகளில் சில...மீனாட்சீ கல்யாணம், தேரோட்டம், வீதிஉலா, சித்திரைத்திருகுவிழா, இவைகளுக்கு பின் தொடர்கதையாக தெருவுக்கு தெரு உருவாக்கப்பட்டு இருக்கும் தெரு கோவில்களின் கும்மாளங்கள்....
இவைகளுக்கு ஈடாக...நோன்புகள் ,இப்புதார்கள், தொழுகைகள்,..... இவைகளுக்கு போட்டியாக அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், ஜெப ஆராதனைகள், இப்படியாக.............
என்னதான் சுற்றுசூழல் ஆய்வுகளை் பற்றி ஆய்வாளர்கள் அதிர்ச்சி செய்திகள் தந்து பயமுறுத்தினாலும், மெனக்கெடுத்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராடினாலும்................
தூங்காமலே தூக்கத்தில் புலம்புவோர்களாலும், தூங்கீனு இருக்கிற மாதிரி நடித்துக் கொண்டு இருப்பவர்களலும். வைகை கூவமாவதை தடுத்து நிறுத்தவே முடியாது....
அப்படி வைகை கூவமாவதை தடுத்து நிறுத்தவது என்பது உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான் பயங்கரவாதமாகும். அதாவது ஆளும் மத்திய-மாநில அரசை எதிர்ப்பது அரசு பயங்கரவாதமாகும்.
மீத்தேன் வாயு எடுப்பதால் காவிரி நாசமாவதைப்போல ..வைகை கூவமாவதையும், தடுக்கவே முடியாது.
மீத்தேன் வாயு எடுப்பதால் காவிரி நாசமாவதைப்போல ..வைகை கூவமாவதையும், தடுக்கவே முடியாது.