திங்கள் 15 2014

ஒரு தியேட்டருல ரெண்டு படம்.......

படம்-www.jackiesekar.com


தமிழ்நாட்டில் பெரிய வெங்காயங்களின் படங்கள் வெளியீட்டின் போதோ, பாடல் வெளியீட்டின் போதோ,திரைபடத்திலுள்ள சூரப்புலிகள் கோபம் கொப்பளிக்க கர்ஜனை செய்வார்கள்.

அவர்களுடைய கர்ஜனையை பூனை உருமுவதாக எடுத்துக் கொண்டு,  அவர்கள்     கர்ஜனை மறு நாளே திருட்டுவிசிடியை வெளியீட்டு விடுவார்கள் திருlடனுக்கு திருடனான திருட்டு தயாரிப்பாளர்கள்.

சூருப்புலிகளுக்கோ, பூனைகளுக்கோ தான் எவ்வளவுதான் கர்ஜனை செய்தாலும்    மியாவ் என்று கத்தினாலும் திருட்டு விசிடியை ,டாஸ்மாக்கைப்போல்  ஒழிக்கவே முடியாது. என்று நன்றாக அவர்களுக்கே தெரியும்.

எப்படியென்றால்... தியேட்டரும் குறைந்து போச்சு, இருக்கிற தியேட்டரிலும் டிக்கெட் விலையும் ஏறிப்போச்சு, இதில தியேட்டர்காரன்களும் அம்பது ரூபா டிக்கெட்ட நூறு ரூபாய்க்கு விற்கிறாங்கே.... உள்ளே அஞ்சு ரூபா கோன் ஐஸ்சை பத்து ரூபாக்கும், வண்டி நிறுத்தத்துக்கும்  நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக கொள்ளையடிக்கிறாங்கே...

ஏறின விலை வாசி குறைந்ததாகவோ அல்லது குறைத்தாகவோ சரித்திரம் கிடையாது.

 சினிமாவில் அடுத்தவன் கதையை திருடியவர்கள் மற்றும்  கதை விட்டவர்கள் இதை தெரிந்து கொண்டதால்தான். என்னவோ. டி.டி.ஹெச் என்றும்,ட்விடி,சிடி, கேபிள் ஒளிபரப்பு, என்றும், பல தியேட்டர்ல ஒரு படம் என்ற நிலைக்கு போட்டியாக ,ஒரு தியேட்டரில் ரெண்டு படம் என்றும்  என்று புதுசு புதுசாய் தொழில் நுட்பங்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...