திங்கள் 15 2014

மட்டையை பிடித்த கடவுளும் பேனாய் பிடித்த கடவுளும்!!!

படம்-www.tamilinfo.in


 கடவுளின்  அவதாரங்களை சிஷ்யர்களோ,அல்லது பக்த கேடிகேளோ, அல்லது கடவுளுக்கு ஏஜென்டாக அதாவது மாமா வேலை பார்த்தவர்கள்தான் எழுதுவார்கள். அந்த வழக்கத்தை மாத்தி..

மட்டையை பிடித்த கடவுளே!, தன் பக்தர்களான கிரிகெட் வெறியர்களுக்கு பேனாயை பிடித்து  “ பிளேயிங் இட் மை வே” ன்னு தன்னுடைய திருவிளையாடல்கள் மற்றும் அவதாரங்களை எழுதியிருக்கிறார்.

நவம்பர் முதல் வாரத்தில் வெளி வரவிருக்கும் கடவுளின் திரு விளையாடல்கள் மற்றும் அவதாரங்கள் நிரம்பிய அந்த சுயசரிதை குறைந்த விலையான ரூ899/-க்கு பக்தர்களுக்கு  காணிக்கையாக்கப்படுகிறது.

அது வெளி வந்த பிறகுதான்  மட்டையை பிடித்தகடவுளின்   கைகளுக்கு “பாரத ரத்னா” விருது கொடுத்தது மாதிரி பேனாய் பிடித்த கடவுளின் கைகளுக்கு “சாகித்திய அக்காதெமி” விருது கொடுக்கப்படுமா?? என்பது தெரியவரும்.

6 கருத்துகள்:

  1. நான் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன். வாசகர்களின் பல்வேறுபட்ட எண்ணங்களைத் தொகுப்பதே இந்த விவாதக்கலையின் நோக்கமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வாசகர்களுக்கு பாராட்டுகளும் என்னால் முடிந்த பரிசினையும் தர முடிவெடுத்துள்ளேன். தோழர்களும் அன்பர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    http://vivadhakalai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. தங்களின் அறிமுகத்துக்கும் தகவலுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தன் வரலாற்றை சொன்ன முதல் கடவுள் சச்சினாய்தான் இருக்க முடியும் !இதையும் வாங்க ...........இருக்கிறார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. நீங்களே..சொல்லீட்டிங்களே..முதல் கடவுள்ன்னு..புத்தகத்தை வாங்கலைன்னா சாமி குத்தம் ஆகிடுமில்ல....

    பதிலளிநீக்கு
  5. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...