ஞாயிறு 09 2014

ஒன்னுக்கு ரெண்டு அடித்துக் கொண்ட வக்கிரம்

அம்மா போலீஸ்
படம்- வினவு


விருதுநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் திருமணமான ஒரு பெண் போலீஸ். தன்னுடன் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆண் போலீஸ் ஏட்டுவுடனும், எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் இன்னோரு ஆண் போலீஸ் ஏட்டுவுடனும் (கள்ள) தொடர்பில் இருந்து வந்துள்ளது.

அந்த ஒன்னை ( பெண் போலீசை)யார் வைத்துக் கொள்வதில்(ஆண்போலீஸ்) ரெண்டுக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில்

ஒரு நாள் எஸ்பி அலுவலக ஆண் போலீஸ் ஏட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்த அந்த பெண் போலீஸ்-ன் வீட்டுக்கு இரவில் சென்றது

.(எதுக்குன்னு சென்றதுன்னு என்ன கேட்கக்கூடாது.அது கோழி பிடிக்கிறவனை பிடிக்க  போச்சுன்னு நிணைச்சுகிறனும்)

அப்போது. காவல் நிலைய ஆண் போலீஸ் ஏட்டு, அந்தப் பகுதியில் ரோந்து வந்தது.

 ( சத்தியமா..சொல்றேன் ரோந்துக்குத்தான் வந்தது..அப்படித்தானுங்கய்யா பேப்பர்ர்ர்ல..........போட்டு இருக்குது)


எஸ்பி அலுவலக ஏட்டுவின் டூவிலர்....தன்னுடைய பெண் போலீஸ் வீட்டின் முன் நிற்பதை கண்டது  ரெண்டில் ஒன்றுக்கு. வந்ததே.......ஆத்திரம்.....

( மூத்திரம் வரலையான்னனு கேட்குறீங்களா...?? இதுக.. அடிக்கிற அடியில சந்தேக கேசுல புடுச்சுட்டு போயிருக்கிற..அப்பிராணிகளுக்குத்தான் மூத்திரம் வரும்)

ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க எதிராளின் பைக்கை அடித்து நொறுக்கியது. பின் ஆத்திரம் அடங்காமல் வீட்டீற்குள் சென்று எதிராளியான போலீஸ் ஏட்டுவை தான் வைத்திருந்த வாக்கி டாக்கியால் தாக்கியது.

எதிராளி ஏட்டுவுக்கும் கோபம் வந்தது. ரெண்டும் அடிதடியில் ஈடுபட்டு கட்டிபுரண்டு வீட்டின் முன்பு  வந்து  “ பாரதத்தாயின் பொன் மொழிகள்” ஆன வசவுகளால் திட்டிக் சவுண்டு விட்டுக் கொண்டு இருந்தது.

ஒன்னுக்குக்காக அடித்துக் கொணட ரெண்டுகளின் பொன் மொழி  வசவு சவுண்டுகளை  கேட்டு. அக்கம் பக்கத்தில் தேன் தமிழோசை கேட்டு ஓடி வந்த போது..., ஏட்டு ரெண்டும்  உடனடியாக அவ்விடத்தைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது.

புருஷன் உள்ள அந்த ஒன்னை.(பெண் போலீசை).. யார்  உரிமை பாத்தியம் கொள்வதில் (ஏட்டுகள்) ரெண்டுகள் அடித்துக்கொண்டு சண்டையிட்டது. அந்தப் பகுதிக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதானாப்பா....பெண்ணாயிருந்தாலும் ஆணாயிருந்தாலும் “நான் உங்களுக்கு உதவலாமா.... ?” என்ற மக்களின் நண்பனின்” வக்கிரபுத்தி” 

உங்களின் நண்பனின் வக்கிரபத்தியை அச்சு அசலா படிக்கனுமா...?? இங்க போயி படிங்க....http://www.vinavu.com/2014/10/17/amma-police-atrocities/


8 கருத்துகள்:


  1. உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி நண்பா இதெல்லாம் தென்படு ப்தூ.....

    பதிலளிநீக்கு
  2. எனக்கு ஒரு குருவான சிஷ்யர் இருக்கிறாரு... அவருதான் இதை படித்தாயா...? அதைப் படித்தாயா..? ன்னு கேட்பாரு...!! அதை படித்ததுக்கு அடையாளமாக்த்தான் பதிவு... நண்பரே!!

    பதிலளிநீக்கு
  3. வாக்கிடாக்கியால் தான் அடிச்சுகிட்டாங்களா,ஏன் கையிலே துப்பாக்கி இல்லையா ,அதில் ரவை இல்லையா :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. போற இடத்துல அதெல்லாம் எதுக்கன்னு காவல் நிலையத்துலே பத்தரமா..வச்சுட்டு போனாராம்..பின்னாடி பயன்படாமாலா.......போயிரும்.

    பதிலளிநீக்கு
  5. பகவான்ஜியின் கமெண்ட்டைப் பார்த்த பிறகு என்ன எழுதுவதென்றே தெரியவில்லையே?
    பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையா
    இல்லை
    கிளியை பூனைகள் பாதுகாக்கின்ற கதையா?
    நல்ல பகிர்வு வலிப்போக்கரே!
    த ம 2

    பதிலளிநீக்கு
  6. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...